அடித்தகொடுஞ் சிலைத்தழும்பு

"அடையாளம் படவொருவன் அடித்தகொடுஞ் சிலைத்தழும்பும்
தொடையாக ஒருதொண்டன் தொடுத்தெரிந்த கல்லும்போல
கடையானேன் வெகுண்டடித்த கைப்பிரம்பும் உலகமெலாம்
உடையானே பொறுத்ததோ உன்னருமைத் திருமேனி..    "

அடாடா.. எட்டாங்கிளாஸ் தமிழ் - செய்யுள் பகுதியில படித்தது..( ம்ம்ம்.. மனப்பாடப் பகுதி) ...  தமிழாசிரியர் வகுப்புல பாடம் நடத்தச்சே மெட்டு போட்டு பாட்டாவே படிச்சு காமிச்சதால இந்தப் பாட்டும் மெட்டோட எம்மனசில இருக்கு.

இது 'திருவிளையாட புராணத்துல' பிட்டுக்கு(இனிப்பு உணவுவகை) மண் சுமந்த கதையில பாண்டிய மன்னன் சிவனென்று தெரியாமல் பிரம்படி கொடுத்ததும்.. உலகத்து மக்கள் அனைவருக்கும் வலிச்சது கண்டு.. சிவனோட திருவிளையாடல் உணர்ந்து.. மனமுருகி பாடியது இந்தப் பாடல். ......

எனது சிவராத்திரி வழிபாட்டின் வெளிப்பாடு.. இப்பதிவு

9 Comments (கருத்துரைகள்)
:

RAMA RAVI (RAMVI) said... [Reply]

8 ம் கிளாஸ்ல இதெல்லாம் படிச்சோமா என்ன? எனக்கு மறந்தே விட்டது.அருமையாக நினைவு வைத்து எழுதியிருக்கீங்க மாதவன்,வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@RAMVI
அதெப்படி மறக்க முடியும்.. ? நானு இப்ப ஓம்பதாங்கிலாஸ் தான படிக்கறேன்..
அவ்ளோ யூத்து நானு..

நாய் நக்ஸ் said... [Reply]

Patta kuuda
eethukkalam.... ..
Aana
2 vathu comment
enna pola
5th std
pasangalukku
piriyaathu....

ஷைலஜா said... [Reply]

அருமையான பாடல்.

ஸ்ரீராம். said... [Reply]

'பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்டதென்ன' என்று எளிமையாய்ப் புரிகிறது! அனாவசியமாய் மைக்கேல் பாடலும் நினைவுக்கு வருகிறது!

வெங்கட் நாகராஜ் said... [Reply]

நல்ல பாடல்....

பகிர்வுக்கு நன்றி மாதவன்... நினைவில் வைத்துக்கொண்ட உங்களுக்கு ஒரு இனிப்பு மிட்டாய் பரிசு!

ADHI VENKAT said... [Reply]

சென்ற வருடம் எட்டாம் வகுப்பில் படித்ததை ஒன்பதாம் வகுப்பிலும் ஞாபகம் வைத்துள்ளீர்களே...........

Yaathoramani.blogspot.com said... [Reply]

சிவராத்திரி சிறப்புப் பதிவு அருமை
நானும் எட்டாம் கிளாசில் போன வருஷம்
படித்த் ஞாபகம் இப்போதுதான் வந்தது
மனம் கவர்ந்த பதிவு
அடிக்கடி மனம் கவர வேண்டுகிறேன்

ஷைலஜா said... [Reply]

http://shylajan.blogspot.in/2012/03/blog-post_04.html

இங்கே உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ஏற்கவும் நன்றி

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...