நாங்கல்லாம் சின்ன வயசில அம்பாசிடர் கார் தான் பெரும்பாலும் பாத்திருக்கோம். அதுக்கு அடுத்த படியா பிரீமியர் பத்மினி (பியட்). பியட்ல எனக்குத் தெரிஞ்சவரை ஒரே ஒரு மாடல் தான். ஆனா அம்பாசிடர்ல மூணு வகை.
முன்னால ஹெட்-லைட்டுக்கு கீழ சின்னதா இன்னொரு லைட்டு படுக்கைவசத்துல கிட்டத்தட்ட ஓவல்ஷேப்ல இருந்தா அது ஒரு வகை, 'Mark-II'. அந்த லைட்டு வட்டமா இருந்தா 'Mark-III'. சதுரமா இருந்த 'Mark-IV'.
எனக்கு இத என்னோட கசின் சொல்லிக் கொடுத்தான். இதப் பத்தி தெரியாத நண்பர்கள் கிட்ட காரோட முன் பக்கத்தைப் பாத்தே அதுக்கு எத்தன Markனு சொல்லி சொல்லி அசத்துவோம்.
அது ஏன் 'Mark-I' ஒன்னு இல்லேன்னு தெரியல..! உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க..
இப்பலாம் நூத்துக் கணக்கான வகையில கார்கள்... ஒரே கம்பெனிகூட பல வகை கார்கள் அறிமுகப் படுத்துகிறது. நம்மளால வித்தியாசம் கண்டு பிடிக்க முடியல. இன்ட்ரெஸ்ட் இல்லை. ஆனா நம்ம பையன் இதச் சின்ன வயசில ஸ்கூல் நண்பர்கள் மூலமா பல கார்களைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டு.. காரைப் பாத்த உடனே என்ன மாடல், என்ன கம்பெனி எல்லாமும் சொல்லிடுறான். இருந்தாலும் அவன் ஒரு கேள்வி கேட்டான் பாருங்க....
பையன் (என்னிடம்) : அப்பா ஒரு ரூமுக்கு எத்தன ஏ.சி(Air Condition) வேணும் ?
நான் : அது அந்த ரூமோட சைசப் பொறுத்தது. பெட்ரூமுக்கு ஒரே ஒரு ஏ.சி போதும்.
பையன் : கார் சைஸ் பெட்ரூமவிட சின்னதுதான.. அதுக்கு ஏன் ஒரே ஒரு ஏ.சி போதாது ?
நான் : என்னடா சொல்ல வர்ற ?
பையன் : அங்க பாருப்பா அந்தக் காருக்கு எத்தன ஏ.சி.ன்னு பாருப்பா..!
அவன் காண்பித்ததை பார்த்தேன் அதில் எழுதி இருந்தது இதான்... ..
Maruti
800 A.C.
--------------------------------------------------------------------------
14 Comments (கருத்துரைகள்)
:
நல்ல கேள்வி....
@NAAI-NAKKS
அதனாலத்தான இங்க கேட்ருக்கோம்..
இந்த காலத்து பைஅய்னகளின் பல கேள்விகளுக்கு
நாம் பதில் சொல்ல்வே இயலவில்லை
அது கூடப் பரவாயில்லை
நிஜமாகவே கேள்வி கேட்கிறார்களா இல்லை
நம்மை கிண்டல் செய்கிறார்களா என புரிந்து கொள்ளக் கூட
கொஞ்சம் பொது அறிவு வேண்டி இருக்கிறது
சுவாரஸ்யமான பதிவு
குட் க்வெஸ்டின். யோசித்துவிட்டு சொல்றேன்.
Naduvil oru commavai vittathal enna kashtam?!:-))
அம்பாசடர் கார் உற்பத்தி தொடங்கிய பல வருடங்களுக்கு மாற்றமில்லாமல், ஒரே மாதிரிதான் வந்து கொண்டு இருந்தது. அதை உருவாக்கிய ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ் நிறுவனம், வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி பிரிவில் (அந்தக் காலத்தில்) இருந்த ஊழியர்கள், ஆபீசுக்கு வெளியே ஆமை நடப்பதைப் பார்த்தால், 'அடேங்கப்பா என்ன வேகம்' என்று வியப்பார்களாம்! இதை அங்கு பணியிலிருந்து, பிறகு விலகி, அசோக் லேலண்டில் சேர்ந்த நண்பர் ஒருவர் சொன்னார். மற்ற போட்டி நிறுவனங்கள் சுறு சுறுப்பாக செயல் படுவதைப் பார்த்து, மார்க்கெட்டில் நிலைப்பதற்காக - முன் பக்க பானெட் / ஹெட் லாம்ப் பகுதிகளில் சிறு மாற்றங்கள் செய்து, ஏற்கெனவே இருந்த மாடலை மார்க் ஒன்று மனதால் நினைத்து, மாற்றம் செய்யப்பட்டதை மார்க் இரண்டு என்று பெயரிட்டார்களாம்.
பெட் ரூம் வீட்டுகுள்ள இருக்கு அதனால அது மேல வெய்யில் படாது. அதுவுமில்லாம அது ஒரே இடத்தில் நிக்கிது. ஆனா கார் வெய்யில்ல ஓடுது. பாவம் அதுக்கு அதிகமா புழுங்கும். அதனால தான் அத்தனை ஏ.சி.. :)
தப்பாமல் பிறந்த பிள்ளை!
:)
புத்திசாலிப் பிள்ளை.பொழைச்சுக்கும்:)
உங்க பையனாச்சே..
:)
:)
டெரர் பாண்டியன் சொன்னது இன்னும் :):)
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பா.
ஹா....ஹா...
Post a Comment