ஆடித்திருவிழா நான்காம் நாள் - 22-07-2017

 நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..
*********************
நடக்கும் நமக்கு நலமாய் எதுவும்;
தடங்கல் அகன்று தழைக்கும் - இடமாம்;
பதமாய்ப் பலரும் பணியும் பணிவால்    
இதமாய் வருவாள் இணைந்து   (4அ )




                                           
வருவாள் இணைந்து வனவேந்தன் ஏந்த,
பெருமாள் உடன்சேர் பெரிதாய்க் கருடன்
சரியாய்ப் பொருந்தும் சமயம் அமையப்
பிரியமாய் கண்டேன் பிறந்து !  (4 ஆ)

(பிரியமாய் கண்டேன் பிறந்து ! இதுபோன்ற ஒரு நன்னாளில், பிறந்தேன்...  பிறந்து இறைவனின் அன்பினை(பிரியத்தை) கண்டேன். )
*******************************






4 Comments (கருத்துரைகள்)
:

வெங்கட் நாகராஜ் said... [Reply]

ஆஹா... நல்லா இருக்கு மாதவன்.

நெல்லைத் தமிழன் said... [Reply]

4 அ - ஏதோ குறை இருப்பதுபோல் தோன்றுகிறது. ஒருவேளை சிறிய வார்த்தைகளினாலா? வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட் நாகராஜ் மிகுந்த நன்றி, வெங்கட் சார்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

மிகுந்த நன்றி, நெல்லத் தமிழன் ஐயா.
தாங்கள் கூறியதுபோல 'இரண்டு சீர்களாக' வந்ததால் குறைவாகத் தெரிகிறது என, நானும் நினைக்கிறேன். தவறு இருப்பின், தயங்காது சுட்டிக்காட்டவும். நானும் பிழையில்லாதத் தமிழ் பாக்கள் கற்க எதுவாகவும். நன்றி.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...