ஆடித்திருவிழா ஐந்தாம் நாள் - 23-07-2017

நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..

கண்டேன் பிறந்து, கமலமலர் மேலொரு,
பெண்குலம் போற்றும் பெரியவளை - மண்ணிலோர்
வண்ணமாய், வானுயர் மன்னையில், மன்னவன்
கண்ணன் துணையினைக் காண் ! (5)




7 Comments (கருத்துரைகள்)
:

வெங்கட் நாகராஜ் said... [Reply]

நன்று.

ஸ்ரீராம். said... [Reply]

தமிழ் வணக்கம். தமிழால் வணக்கம்.

நெல்லைத் தமிழன் said... [Reply]

நல்லாருக்கு. ஆனால், ஈற்றடியை நோக்கித்தான் எல்லா வரிகளும் இருக்கணும்னு தோணுது. (முதல் இரண்டு வரிகள் நீங்கள் கண்டதைச் சொல்கிறது) மன்னார்குடி ராஜகோபாலனை 'மன்னவன் கண்ணன்' என்றது நன்று.

Madhavan Srinivasagopalan said... [Reply]

தங்கள் கருத்திற்கு நன்றி ஐயா.
நான், 'கண்டேன்.. இன்பமுற்றேன்.. நீங்களும் இன்பமுற்ற வேண்டுகோள் விடுப்பது போல் எழுதினேன். ஐயா. எனினும் இனி வரும் பாடல்களில் இன்னும் நல்லமுறையில் கருத்து நன்கு பொருந்து மாறு எழுத முயல்கிறேன் ஐயா. தங்கள் கருத்து எனக்கு மிகவும் ஊக்கமாக இருக்கிறது.

Madhavan Srinivasagopalan said... [Reply]

தமிழ் படிக்கும் நல்லோருக்கும் வணக்கம்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@நெல்லைத் தமிழன்

"கண்ணன் துணையினைக் காண்!"

"கண்ணனின்(ராஜபாலன்) துணைவி செங்கமலத் தாயாரைக் காண்" எனவும்,
"கண்ணன்(தன் துணையோடு) நமக்கு என்றும், துணையாக இருப்பதை காண்" எனவும் பொருள் படுமல்லவோ!

நெல்லைத் தமிழன் said... [Reply]

"கண்ணன் துணையினைக் காண்!" - மிகவும் சிறப்பு. இது 'திருமகளை' என்பதைவிட சரியாகப் பொருந்துகிறது. நான் 'ஐயா' இல்லை. உங்களைவிட 9 வயது பெரியவனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது (73 உங்கள் பிறந்த வருடம் என்றால்)

இதற்கு முன்பு பின்னூட்டத்தில் தெரிவித்ததற்கு உங்கள் பதிலைப் பார்க்க முடியவில்லை. ஒருவேளை 'குறை' சொல்லுவதாக நீங்கள் நினைத்துக்கொண்டீர்களோ என்ற சந்தேகம். அதனால் இனிமேல் அப்படி எழுதக்கூடாது என்று இன்றுதான் நினைத்துக்கொண்டேன்.

நீங்கள் அந்தாதி ஆரம்பித்தது, ஒரு சிறு செயலைப்போல் தோன்றலாம். ஆனால் திருவிழா முடியும்போது, பெரிய மாலையைப் போன்று அது வளர்ந்திருக்கும்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...