ஆடித்திருவிழா ஏழாம் திருநாள் - 25-07-2017

நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..

*7ம் திருநாள், நெல் அளத்தல்*  :
**************************************
செல்வாளே ஊர்ந்து, செழுமைசேர் மன்னையில்,
நெல்லின் மணிகள் நிலைத்திட - எல்லிபோகு
மாலைவெயில் வீச, மரக்கால் அளக்கும் 
வேலையை நாடிநீ வேண்டு     (7)
**************************************

#கோவிலில் நெல்அளத்தல் சிறப்பு, இன்று.
# எல்லி-போகு  = கதிரவன்+போகும் (மறையும் வேளை)

புகைப்பட உதவி : ரங்கராஜன் ராஜகோபாலன்



5 Comments (கருத்துரைகள்)
:

வெங்கட் நாகராஜ் said... [Reply]

திருவரங்கத்திலும் இப்படி நெல் அளக்கும் திருவிழா உண்டு. இது வரை பார்த்ததில்லை.

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி. தாங்கள் விரைவில் நேரில் காண அரண்கள் அருள் புரியட்டும்.   பெருமாள் கோவில் பிரதம திருவிழா,  7ம் திருநாளில் நெல் அளப்பது மரபு. 

நெல்லைத் தமிழன் said... [Reply]

நிறைதிட்டு - வார்த்தை சரியில்லை.

நெற்கதிர் - இது மொத்தமாக கதிரோடு இருப்பதற்குத்தான் பெயர். அளப்பது நெல் மணி. அதற்கேற்ப வெண்பா மாறவேண்டும்.

(குறை சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. வெறும்ன 'அட்டஹாசம்', 'நல்லாருக்கு' என்று எழுதாம படிச்சுப் பார்த்து எனக்குத் தோன்றுவதை எழுதுகிறேன்)

Madhavan Srinivasagopalan said... [Reply]

'நெல்லின் மணிகள் நிலைத்திட'
இது பொருந்துமா ?

தங்களின் கருத்து எனக்கு ஊட்டமே. திருத்தி எழுதி சீராக்க உங்கள் கருத்து பயனளிக்கிறது.

நெல்லைத் தமிழன் said... [Reply]

செல்வாளே ஊர்ந்து, செழுமைசேர் மன்னையில்,
நெல்லின் மணிகள் நிலைத்திட - நாளேழின்
மாலை நேரத்தில், மரக்கால் அளக்கும்
வேளையில் பணிந்துநீ வேண்டு

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...