சிலேடை - பூமியும் தேரும் -- (#மாதவன்_சிலேடை 4)

நேரிசை வெண்பா : (28-07-2017) சென்ற வார, ஆடிப்பூர தேர்த்திருவிழா கண்டதன் விளைவு இப்பாடல்.
சிலேடை - பூமியும் தேரும்  -- (#மாதவன்_சிலேடை 4)
******************************

பைய நகர்ந்து, பருவமோர் வட்டமிட்டு,
மெய்யிலே மேடுகாட்டி, வெம்மையுடை - ஐயனை
மையமாக்கி, யென்றும் மறுபாதை செல்லாத,
வையம், வடத்தேராய் வந்து
******************************

* பருவம் -- தொடர்ந்து சுழற்சியாக நடக்கும் செயல் -- இவ்விடத்தில் ஆண்டு/வருடம்.
* "மேடு" ==  பூமியுள்ள மலை, தேரின் உடற்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளச் சிலை (பொம்மை)
* "வெம்மையுடை(ய) ஐயன்" -- வெப்பம் பொருந்திய சூரியன், பராக்கிரமம்(வெம்மை) பொருந்திய தெய்வம்

4 Comments (கருத்துரைகள்)
:

நெல்லைத் தமிழன் said... [Reply]

நல்ல சிலேடை. வெறும்ன தேரும் பூமியும் சரியான ஒப்புவமை இல்லாமல் போய்விடும். அதனால் வடத்தேரையும் பூமியையும் ஒப்புநோக்கியிருக்கீங்க. (பூமி தானாகவே சுற்றும். தேரை வடம் பிடித்து இழுக்கணும்) நன்று.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@நெல்லைத் தமிழன்
// பூமி தானாகவே சுற்றும். தேரை வடம் பிடித்து இழுக்கணும் //

ஆமாம். தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

சென்ற பதிவில், காப்புச் செய்யுளில் தாங்கள் சொல்லியதுபோல மற்றம் செய்துள்ளேன். 'வாளை', கையிலிருந்து எடுத்து உடை(இடை)யில் சொருகிவிட்டேன். நாற்கரத்தானுக்கு இனி சுமப்பதில் சிரமம் இருக்காது.

வெங்கட் நாகராஜ் said... [Reply]

நன்று.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட் நாகராஜ்நன்றி நண்பரே !

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...