சிலேடை : புறாவும், வலைத்தளமும் (நேரிசை வெண்பா)
விண்ணில் பறக்கும்; விடுசொல் தொலைசேர்க்கும்
மண்ணில் மனிதருக்கு மாமகிழ்ச்சி யூட்டும்;
விலைகொடுத்துச் செய்த வேலைகளு முண்டாம் ;
வலைதளம் வான்புறாவாய் வந்து !
(1) விடுசொல் தொலைசேர்க்கும் : நாம் விடுக்கும் சொல்லை தொலைவான இடங்களுக்கும் கொண்டு சேர்க்கும்.
(2) விலைகொடுத்துச் செய்த வேலைகளு முண்டாம் :
(a) வலைத்தளம் : கட்டுமானப் பணிகளால் ஆனது.
(b) புறா : தனது உழைப்பை விலையாகக் கொடுத்து வேலை செய்து கூடு கட்டும்.

4 Comments (கருத்துரைகள்)
:
இரசித்தேன்.
@ஸ்ரீராம்.
நன்றி. முகப்புத்தகம்-'பைந்தமிழ்ச் சோலை'யில் சேர்ந்து பயின்று எழுதியது....
வாவ்... நன்று. பாராட்டுகள்.
மனிதருக்கு = சரியா வருமா? மனிதர்க்கு என்று இருப்பது சரியா? மற்றபடி ரசித்தேன்
Post a Comment