ஆசிரிய விருத்தம் (வேறு) 15-11-2017

ஆசிரிய விருத்தம் (வேறு) (  பாட்டியற்றுக_10, 13 நவம்பர் 2017 -  பைந்தமிழ்ச் சோலையில், முகப்புத்தகம்,  பகிர்ந்தது.)

கொடுக்கப்பட்ட பொருள் : 'நிலையாமை'
**********
பாதைகள்ப லகண்டபூமி தனில்நிலையே துமில்லையெனப்
....பலருஞ் சொன்னார்;
சாதனைக ளானாலும் வேதனைக ளானாலுஞ்
....சாயு மோர்நாள் !
மாதவத்தால் வந்தவையும் மறைந்திடுமே, மாற்றியவோர்
.....மதியு முண்டோ ?
காதறுந்த ஊசிகளும், கடைவழிக்கு வந்ததனைக்
.....கண்டா ருண்டோ ?
***********

மேற்கண்ட பாடல் "அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்."
(காய்/காய்/காய்/காய்/மா/தேமா)ஆகும்.
பொது இலக்கணம்:
*********************
* ஆறு சீர்கள் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து,
* நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த இரண்டு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று, (ஆறு சீர்களை ஓரடியாகத் தொடர்ச்சியாகவும் எழுதலாம்.)
* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,
* ஓரடிக்கு " காய், காய்,காய்,காய்,மா,தேமா என்ற சீர் வரையறையைக் கொண்டும், நான்கடிகளைப் பெற்றும்,
* ஈற்றுச்சீர் ஏ, ஆ, ஆல், ஓ, வாழி என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டும்
முடிவது(ஏகாரம் சிறப்பு)
"அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." எனப்படும்.
தனிப்பாடலாயின்(முத்தகம்) ஏகாரமே சிறப்பு.
தொடர்பாடலாயின்(குளகம்) எப்படியும் முடியலாம். இறுதிப் பாடலின்
இறுதிச்சீர் ஏகாரம் பெறல் சிறப்பு.
காய்ச்சீரெனில் எக்காயும் வரலாம்.
மாச்சீர் எனில் தேமா, புளிமா எதுவும் வரலாம்.
ஆனால் ஈற்றுச்சீர் தேமா மட்டுமே வரவேண்டும்.
முதலடியின்முதற்சீர் எந்தக் காய்ச்சீரில் தொடங்குகிறதோ மற்ற மூவடிகளின் முதற்சீரும் அதே காய்ச்சீரில் தொடங்க வேண்டும். சான்று பாடலில் நான்கு முதற்சீர்களும் கூவிளங்காயில் தொடங்கியிருப்பதைக் காண்க. இரண்டு, மூன்று, நான்காம் சீர்களில் எந்தக் காய்ச்சீர்களும் வரலாம்.

2 Comments (கருத்துரைகள்)
:

ஸ்ரீராம். said... [Reply]

சிறப்பு. மாதவத்தால் என்பது முத்திரையோ!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.
நன்றி.
// மாதவத்தால் என்பது முத்திரையோ! //
எதுகையொடு பொருளுக்கேற்றவாறு அமைந்த சொல்(லாடல்) அது.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...