எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் : ( பாட்டியற்றுக 11, பயிற்சியில் நான் எழுதிப் பதிவிட்ட பாடல்) :
நன்றி : பைந்தமிழ்ச் சோலை (மரபு பூக்கள் மட்டும்)
இயற்கையை அளித்த 'இறையே போற்றி' :
****************************
செவ்வியுடைப் புவிதன்னைச் செய்து வைத்தாய்
....செங்கதிரோன்
இவ்விரண்டைப் பலபொருளால், இணைத்து வைத்தாய்
.....இவையாவும் ஒருசேர இயங்க வைத்தாய் !
எவ்வுயிர்க்கும்
...இப்புவியிற் பலகாலம் இருக்கச் செய்தாய் !
இவ்வுலகம் வந்தவர்கள் இயல்பாய் வாழ,
....இயற்கையினை எமக்களித்த இறையே போற்றி !
****************************
கீழ்கண்டவை : முகநூல் பக்கத்திலிருந்து தெரிந்துகொண்டவை, உங்கள் பார்வைக்காக (நன்றி பாவலர் ஐயா, பைந்தமிழ் செம்மல் வள்ளிமுத்து ஐயா )
பொது இலக்கணம்.
*அரையடிக்கு நான்கு சீர்கள் பெற்று, ஓரடிக்கு எட்டுச் சீர்களும் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து,(பொழிப்
* நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த. நான்கு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று,
* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,
* அரையடிக்கு "காய்,காய்,மா,த
* ஈற்றுச்சீர் ஏ, ஆ, ஆல், ஓ, வாழி என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டு
முடிவது(ஏகாரம் சிறப்பு.)
தனிப்பாடலாயின்(
தொடர்பாடலாயின்(
இறுதிச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு
"எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." எனப்படும்.
காய்ச்சீரெனில் எக்காயும் வரலாம்.
மாச்சீர் எனில் தேமா, புளிமா எதுவும் வரலாம்.
ஆனால் அரையடியின் ஈற்றுச்சீரான நான்காம் சீரும், எட்டாம் சீரும் "தேமாச் சீராகவே வரல் வேண்டும்."
முதல்சீர் எக்காய்ச்சீரில்
3 Comments (கருத்துரைகள்)
:
பாடலையும், விளக்கத்தினையும் படித்து ரசித்தேன்.
@ஸ்ரீராம்.
நன்றி, ஸ்ரீராம் சார்.
-- தமிழ் மரபுக்கவிதை கற்கும் மாணவன்.
பாடல் நல்லா வந்திருக்கு. இப்போ இலக்கணப்படி பாடல் எழுத பயிற்சி எடுப்பதனால், அதில் மட்டும் நீங்கள் ஃபோகஸ் பண்ணுகிறீர்கள் போலிருக்கு.
இந்த ஆசிரிய விருத்தத்தில் பாடல்கள் சரளமாகப் புனையமுடிந்தால், நல்ல ரசிக்கும் கவிதைகளைத் தரலாம்.
Post a Comment