Showing posts with label எந்திரன். Show all posts
Showing posts with label எந்திரன். Show all posts

சினிமா பாத்த சின்னப் பொண்ணு..

ஓசில.....எந்திரன் படம் பாத்துட்டு வந்த, என்னோட மூன்றரை வயது (அதான் டிக்கெட்டு வாங்கல) மகளிடம் ஒரு சின்ன பேட்டி....

நான் : ஹாய் செல்லம்.. படம் பாத்தியா ?
மகள் : ம்ம்ம்..

நான் : எப்புடி இருந்துச்சி..
மகள் : சூப்பரா இருந்துச்சி..

நான் : கதைய சொல்லேன்..
மகள் : கதையா.... .ம்...ம்....ம்..
ரெண்டு ரஜினி.. ஒரு 'அங்கிள்' ரஜினி.............. ஒரு 'ரோபோ' ரஜினி .........
'ரோபோ' ரஜினி, 'அங்கிள்' ரஜினி மாதிரியே பேசும்...... ஆடும், பாடும்,
ம்ம்..... ம்ம்..... காரு கூட ஓட்டும்.. பைட்டு பண்ணும்..
டிரெயின் ஸ்பீடா போகச்சே, ரிவர்ல குதிச்சி, ஆண்ட்டியோட ஹேண்ட்பேக எடுத்துக்கிட்டு வந்து ஆண்ட்டிகிட்டே தரும்..

நான் : ஆண்ட்டியா?... ஆண்ட்டியோட பேரு தெரியுமா ?
மகள் : அதெல்லாம் தெரியாது, நீ போயி அம்மாகிட்ட கேட்டுக்கோ..
(எனக்குள் : அம்மாகிட்ட ஐஸ்சப் பத்தியா.... வேண்டாம்டா சாமியோவ்..)

ம்ம் ம்ம்.. அப்புறம். .. டிரெயின் டிராக்குல ஓடி........ டிரேயிணுல.. 'பேட் பாய்ஸ்' கூட சண்டைலாம் போடும்......

ஆனா.. அது ஏதோ சொல்லும்.... அதனால 'அங்கிள்' ரஜினி அத வெட்டி 'டஸ்டு- பின்'னுல போட்டுடுவாரு....

அவ்ளோதான்.. அதுக்கப்புறம் நா தூங்கிட்டேன்....

நான் : அப்புறம் எப்போ முழிச்சிக்கிட்டே ?

மகள் : நெறையா 'ரோபோ' ரஜினி வந்துடும்..... எல்லாம் சண்டை போடும்....
'அங்கிள்' ரஜினி தான் ஜெயிப்பாரு.. அப்புறம் 'ரோபோ' ரஜினி.. சட்டை, பேண்டு, தலையாலாம் அவுத்துட்டு தூங்கிடும்.... அவ்ளோதான்..... அப்புறம்.. அம்மாவோட வீட்டுக்கு வந்துட்டேன்.....

டிஸ்கி : பாதி உண்மை... மீதி என் கற்பனை..

பன்ச்சோ பன்ச்

'ஏந்திரன்' படத்துல 'பன்ச்' டயலாக் இல்லேன்னு கேள்விபட்டேன்.... சூப்பர் ஸ்டாரு படத்துல அது இல்லாம சரிப் படாது.. அதனால சுப்பர் ஸ்டாரோட பேட்டி (ஒரு கற்பனைதான்.. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை).

ரசிகன் : வணக்கம், தலைவரே.. உங்க லேட்டஸ்ட் படத்துல 'பன்ச்' டயலாக் இல்லாதது எங்களுக்குலாம் ரொம்ப கொறையா இருக்குது..

ரஜினி : டயலாகுல, அதிகமா சேக்குற 'பன்ச்சும்', சொல்லுற மெசே ஜும் 'சேர்ந்து' வ(வாழ்)ந்ததா சரித்திரமே இல்லை.. ..


ரசிகன் : எங்களுக்கு வேண்டிய மெசேஜே , 'உங்க பட ரீலீசு' தான்.. .. அதனால 'மெசேஜ' பத்தி கவலைப் படாம நாங்க எதிர் பாக்குறது 'பன்ச்.. பன்ச்.. பன்ச்..' மட்டுமே..

ரஜினி : நா 'ஒரு' தடவ சொன்னா, 'நூறு' தடவ சொன்ன மாதிரி..


ரசிகன் : முன்ன மாதிரி நீங்க இப்பலாம் ஸ்டைலு ஸ்டைலா வர்றதில்லை.. .. சிகரெட்ட தூக்கிப் போட்டு உதட்டால கேட்ச் பிடிப்பீங்க.., பாருங்க தலைவா.... வில்லன்களை தூக்கி பந்தாடுவீங்க.. அது மாதிரி தொடர்ந்து பண்ணுங்களேன்..

ரஜினி: அடிச்ச அடியும், நடிச்ச நடிப்பும் திருப்பி வந்ததா சரித்திரமே இல்லை.....


ரசிகன் : மூனே வார்த்தைல ஆன்மீகத்தைப் பத்தி சொல்லுங்களேன்

ரஜினி : 'மலைடா.. மலை.. அண்ணாமலை'


ரசிகன் : ரெண்டா வார்த்தைல ?

ரஜினி : "எம்பேரு படையப்பா.."


ரசிகன் : ஒரே வார்த்தைல ?

ரஜினி : "பாபா"


ரசிகன் : தலைவா.. நீங்க (சென்னைலேருந்து) திருப்பதி போறதுன்னா 'வேலூர்' வழியா போகமாட்டீங்கலாமே ?

ரஜினி : ஆமாம்.. ஏன்னா.. "எ(ன்) வழி.... தனி வழி.. "


ரசிகன் : கண்டக்டரா ஆரம்பிச்ச நீங்க, நடிகனா சாதிச்சிட்டீங்க.. எப்ப அரியணை ஏறுவீங்க ?

ரஜினி : ஹ.. ஹ.. ஹா.. "நா எப்ப வருவேன் , எப்டி வருவேன்னு யாருக்குமே தெரியாது.. வர வேண்டிய நேரத்துக்கு கரீக்டா வருவேன்"


ரசிகன் :அதெப்படி உறுதியா சொல்லுறீங்க..

ரஜினி : ஆண்டவன் சொல்றான், ------- செய்றான் (முடிக்கறான்) .


ரசிகன் : நீங்க உங்க ரசிகர்களுக்கு சொல்ல விரும்புறது..

ரஜினி : "கண்ணா, அநியாயத்த பாத்துகிட்டு சும்மா இருக்காதே..
அடிச்சு தூள் பண்ணு -- அப்படீன்னு எங்க தத்தா சொல்லுவாங்க.."
இதெப்டி இருக்கு..? வர்ர்ரர்ர்ர்டா ?

(பேக் கிரவுண்டு மியூசிக் ரெண்டும் மாறி மாறி வருது..
---- பாஷா.. பாஷா.. பாஷா.
---- எங்கள் தளபதி... எங்கள் தளபதி... )

டிஸ்கி : இதுக்குலாம் டிஸ்கி போட முடியாது