சினிமா பாத்த சின்னப் பொண்ணு..

ஓசில.....எந்திரன் படம் பாத்துட்டு வந்த, என்னோட மூன்றரை வயது (அதான் டிக்கெட்டு வாங்கல) மகளிடம் ஒரு சின்ன பேட்டி....

நான் : ஹாய் செல்லம்.. படம் பாத்தியா ?
மகள் : ம்ம்ம்..

நான் : எப்புடி இருந்துச்சி..
மகள் : சூப்பரா இருந்துச்சி..

நான் : கதைய சொல்லேன்..
மகள் : கதையா.... .ம்...ம்....ம்..
ரெண்டு ரஜினி.. ஒரு 'அங்கிள்' ரஜினி.............. ஒரு 'ரோபோ' ரஜினி .........
'ரோபோ' ரஜினி, 'அங்கிள்' ரஜினி மாதிரியே பேசும்...... ஆடும், பாடும்,
ம்ம்..... ம்ம்..... காரு கூட ஓட்டும்.. பைட்டு பண்ணும்..
டிரெயின் ஸ்பீடா போகச்சே, ரிவர்ல குதிச்சி, ஆண்ட்டியோட ஹேண்ட்பேக எடுத்துக்கிட்டு வந்து ஆண்ட்டிகிட்டே தரும்..

நான் : ஆண்ட்டியா?... ஆண்ட்டியோட பேரு தெரியுமா ?
மகள் : அதெல்லாம் தெரியாது, நீ போயி அம்மாகிட்ட கேட்டுக்கோ..
(எனக்குள் : அம்மாகிட்ட ஐஸ்சப் பத்தியா.... வேண்டாம்டா சாமியோவ்..)

ம்ம் ம்ம்.. அப்புறம். .. டிரெயின் டிராக்குல ஓடி........ டிரேயிணுல.. 'பேட் பாய்ஸ்' கூட சண்டைலாம் போடும்......

ஆனா.. அது ஏதோ சொல்லும்.... அதனால 'அங்கிள்' ரஜினி அத வெட்டி 'டஸ்டு- பின்'னுல போட்டுடுவாரு....

அவ்ளோதான்.. அதுக்கப்புறம் நா தூங்கிட்டேன்....

நான் : அப்புறம் எப்போ முழிச்சிக்கிட்டே ?

மகள் : நெறையா 'ரோபோ' ரஜினி வந்துடும்..... எல்லாம் சண்டை போடும்....
'அங்கிள்' ரஜினி தான் ஜெயிப்பாரு.. அப்புறம் 'ரோபோ' ரஜினி.. சட்டை, பேண்டு, தலையாலாம் அவுத்துட்டு தூங்கிடும்.... அவ்ளோதான்..... அப்புறம்.. அம்மாவோட வீட்டுக்கு வந்துட்டேன்.....

டிஸ்கி : பாதி உண்மை... மீதி என் கற்பனை..

17 Comments (கருத்துரைகள்)
:

அருண் பிரசாத் said... [Reply]

so sweet!

ஆமா, அந்த ஆண்டி பேரு என்னங்க?

Chitra said... [Reply]

cho chweet!!!!!!! cute!

ஸ்ரீராம். said... [Reply]

குழந்தையின் பார்வையில்...! சூப்பர்.

சே.குமார் said... [Reply]

kuzhanthai sollvathaai ungal vimarsanam arumai.
vazhththukkal nanbarey.

RVS said... [Reply]

மாதவா இனிமே உங்க பொண்ணையே எல்லாப் படத்துக்கும் அழைச்சுக்கிட்டு போங்க. நல்லா விமர்சனம் சொல்லுது. May god bless your child. சூப்பர்.

மோகன் குமார் said... [Reply]

மாதவன் மிக ரசித்தேன். குழந்தை மொழியிலேயே எழுதி உள்ளீர்கள்

DreamGirl said... [Reply]

//டிஸ்கி : பாதி உண்மை... மீதி என் கற்பனை..//

எது எப்படியோ.... மழலையின் விமர்சனம் நன்றாக இருந்தது..

Gayathri said... [Reply]

hehe so cute..sari naduvula kozhandha thoongiducha?? aahaa athulendhu climax varai bore nu indirect a solreengalo..super thaan

எஸ்.கே said... [Reply]

அருமை! ரசித்தேன்!

Assouma Belhaj said... [Reply]

Sweet Babyppaaa
9s post frnd
http://funage16.blogspot.com/

அநன்யா மஹாதேவன் said... [Reply]

ஆஹா, எல்லா குழந்தைகளுக்குமே இந்த இம்பாக்டு தானா? இருந்தாலும் “அதுக்கப்புறம் நான் தூங்கிட்டேன்” இதான் டாப்பு போங்க! இங்கே படம் பார்ததன்னிக்கி அருண் வருண் புலம்பினது, ட்ரெயின்ல ரோபோவுக்கு ஸார்ஜ் போயித்து, அப்பென்ன பண்ணீத்து, ஒரு பாக்ஸ்ல சாஜ் பண்ணீண்டு வண்டடா, எல்லாரையும் தள்ளிடுத்து. அண்ட அங்கிள் கை கால் எல்லாம் கட் பண்ணிட்டா. கூடவே ரோபோ டா பாட்டும்!

சாய் said... [Reply]

Super Madhavan.

“அதுக்கப்புறம் நான் தூங்கிட்டேன்” - Class

DREAMER said... [Reply]

150 கோடி ரூபாய் படத்தை, ஒரு மழலை மொழியில் அந்த மணம் மாறாமல் விமர்சனம் செய்த ஸ்டைல் மிகவும் புதுசா இருக்குங்க! ரசித்து படித்தேன்.

-
DREAMER

Madhavan said... [Reply]

@ அருண், சித்ரா -- ஆமாம் 'ஸ்வீட்' தான். (நன்றி.. அருண் 'ஆண்டி' 'ஆண்ட்டி'யா திருத்திட்டேன்..
@ ஸ்ரீராம், ர்வ்ஸ்.. -- மழலை மொழி தி பெஸ்ட்..
@ (சே & மோ). குமார், -- பாதி உண்மை.. மீதி கற்பனை.
@ Dream Girl -- நன்றி
@ காயத்ரி -- தூங்கினது போர் அடிச்சதுனாலேயா... அட.. நல்ல இருக்கே..
@ எஸ்.கே, அசொவ்ம பெல்ஹாஜ் -- நன்றி
@ அநன்யா மஹாதேவன், சாய்
//“அதுக்கப்புறம் நான் தூங்கிட்டேன்” இதான் டாப்பு போங்க! // உண்மை.. அதனை நானும் நசிச்சேன்..(இது நடந்த உண்மை)

@ Dreamer //மிகவும் புதுசா இருக்குங்க! ரசித்து படித்தேன்.// -- அப்படியா ரொம்ப நன்றி

அனைவருக்கும் நன்றிகள்.. மீண்டு வருக

Madhavan said... [Reply]

இன்ட்லியில் பிரபலமடையச் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.

ranga said... [Reply]

லகலகலக ! இல்ல ! கலகலகல !! கலக்கல் ஸ்டோரி டெல்லிங் !!
ஆனா.. அது ஏதோ சொல்லும்.... அதனால 'அங்கிள்' ரஜினி அத வெட்டி 'டஸ்டு- பின்'னுல போட்டுடுவாரு....
ரொம்ப சூப்பர் !

cheena (சீனா) said... [Reply]

சூபர் விமர்சனம் மாது - உன்னை விட உன் பொண்ணு சூப்பரா விமர்சனம் எழுதறா - செல்லத்துக்கு நல்வாழ்த்துகள் மாது

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...