ரசிகன் : வணக்கம், தலைவரே.. உங்க லேட்டஸ்ட் படத்துல 'பன்ச்' டயலாக் இல்லாதது எங்களுக்குலாம் ரொம்ப கொறையா இருக்குது..
ரஜினி : டயலாகுல, அதிகமா சேக்குற 'பன்ச்சும்', சொல்லுற மெசே ஜும் 'சேர்ந்து' வ(வாழ்)ந்ததா சரித்திரமே இல்லை.. ..
ரசிகன் : எங்களுக்கு வேண்டிய மெசேஜே , 'உங்க பட ரீலீசு' தான்.. .. அதனால 'மெசேஜ' பத்தி கவலைப் படாம நாங்க எதிர் பாக்குறது 'பன்ச்.. பன்ச்.. பன்ச்..' மட்டுமே..
ரஜினி : நா 'ஒரு' தடவ சொன்னா, 'நூறு' தடவ சொன்ன மாதிரி..
ரசிகன் : முன்ன மாதிரி நீங்க இப்பலாம் ஸ்டைலு ஸ்டைலா வர்றதில்லை.. .. சிகரெட்ட தூக்கிப் போட்டு உதட்டால கேட்ச் பிடிப்பீங்க.., பாருங்க தலைவா.... வில்லன்களை தூக்கி பந்தாடுவீங்க.. அது மாதிரி தொடர்ந்து பண்ணுங்களேன்..
ரஜினி: அடிச்ச அடியும், நடிச்ச நடிப்பும் திருப்பி வந்ததா சரித்திரமே இல்லை.....
ரசிகன் : மூனே வார்த்தைல ஆன்மீகத்தைப் பத்தி சொல்லுங்களேன்
ரஜினி : 'மலைடா.. மலை.. அண்ணாமலை'
ரசிகன் : ரெண்டா வார்த்தைல ?
ரஜினி : "எம்பேரு படையப்பா.."
ரசிகன் : ஒரே வார்த்தைல ?
ரஜினி : "பாபா"
ரசிகன் : தலைவா.. நீங்க (சென்னைலேருந்து) திருப்பதி போறதுன்னா 'வேலூர்' வழியா போகமாட்டீங்கலாமே ?
ரஜினி : ஆமாம்.. ஏன்னா.. "எ(ன்) வழி.... தனி வழி.. "
ரசிகன் : கண்டக்டரா ஆரம்பிச்ச நீங்க, நடிகனா சாதிச்சிட்டீங்க.. எப்ப அரியணை ஏறுவீங்க ?
ரஜினி : ஹ.. ஹ.. ஹா.. "நா எப்ப வருவேன் , எப்டி வருவேன்னு யாருக்குமே தெரியாது.. வர வேண்டிய நேரத்துக்கு கரீக்டா வருவேன்"
ரசிகன் :அதெப்படி உறுதியா சொல்லுறீங்க..
ரஜினி : ஆண்டவன் சொல்றான், ------- செய்றான் (முடிக்கறான்) .
ரசிகன் : நீங்க உங்க ரசிகர்களுக்கு சொல்ல விரும்புறது..
ரஜினி : "கண்ணா, அநியாயத்த பாத்துகிட்டு சும்மா இருக்காதே..
அடிச்சு தூள் பண்ணு -- அப்படீன்னு எங்க தத்தா சொல்லுவாங்க.."
இதெப்டி இருக்கு..? வர்ர்ரர்ர்ர்டா ?
(பேக் கிரவுண்டு மியூசிக் ரெண்டும் மாறி மாறி வருது..
---- பாஷா.. பாஷா.. பாஷா.
---- எங்கள் தளபதி... எங்கள் தளபதி... )
டிஸ்கி : இதுக்குலாம் டிஸ்கி போட முடியாது
14 Comments (கருத்துரைகள்)
:
மாதவா ரொம்ப படுத்தறே... ;-) ;-)
இந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது வருங்கால குழந்தைகளும் கெடுவதற்கு நாமே ஒரு காரணமாகி விடுகிறோம். இது மட்டும் தான் நாம் பெறக் கூடிய லாபம் இந்த சினிமாக்களால். நாம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடப் போகிறோம். நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா. நாம் அந்தளவுக்கு முட்டாளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா?
பதிவு அதிருதுல்ல....
@ saiGokulakrishna
ஏன் சார்? ஒரு 3 மணி நேரம் சினிமா பாக்குறது பிடிக்கலையா? அப்பவும் ஏன் மூஞ்சிய உம்முனு வெச்சிக்கனும். வாழ்க்கைய என்ஜாய் பண்ணுங்க சார். யார் தான் ஏமாற்றல... எல்லோரும் தான் ஏமாத்துறாங்க... ஏமாறுறாங்க... சிரிச்சமா அடுத்த வேலைய பார்த்தமானு இருக்கலாம்...
@ ஆர்.வீ.எஸ். என்ன செய்யுறது ஆர்.வீ .எஸ் -- சட்டில இருக்குறதுதானே அகப்பைல வரும்.. உங்க ரேஞ்சுக்குளா என்னால எழுத முடியல.. சாரி.
.
@ கோகுல கிருஷ்ணா -- தங்கள் (முதல்) வருகைக்கு/கருத்திற்கு நன்றி.. நண்பர் அருண் சொல்லியதுபோல சினிமாவ நமக்காக (நம்ம மகிழ்ச்சிக்காக) பாக்கணும்.. சினிமாக்கு நம்ம அற்பனிக்காம இருக்கணும்.. உங்கள் ஏக்கம் எனக்கு புரிகிறது.. நமது குழந்தைகள் சினிமாவுக்கு அடிமையாக மாறாமல் இருப்பது நமது அணுகுமுறையில் (நாம் சினிமாவிற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை பொறுத்து ) இருக்கிறது
@ அருண் -- அமாம் .. 'ரொம்பத்தான் அதிருது' (கொஞ்சம் அசந்துட்டேன்.. இல்லேன்னா தெரிஞ்சிருக்கும்)
நீங்க "பஞ்ச்"சிட்டீங்க...... சாரி, - பின்னிட்டீங்க!
பன்ச் டயலாக் சொல்லாத ஆண் நடிகரும் கவர்ச்சி காட்டாத பெண் நடிகையும் ஜெயிச்சதா பூகோளமே..சீ, விஞ்ஞானமே ..அடச் ச்சே..சரி ஏதோ ஒண்ணு...அது இல்லே...ஸ்விஷ்..ஸ்விஷ்...
"பஞ்ச்" சூப்பரா இருக்கு.பதிவு அருமை..
நன்றி சித்ரா, ஸ்ரீராம்.
ஜிஜி -- உங்கள் முதல் வருகைக்கும், காமேண்டிற்கும நன்றி..
super bro eppadi ippadi..samayaa yosichurukeenga
@ Gayathri -- "எப்படி, இப்படி யோசிக்கறேனுலாம் யாருக்குமே தெரியாது..
யோசிக்க வேண்டிய நேரத்துல கரெக்டா யோசிப்பேன்"
"பஞ்ச்" super
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கேன்.
//டிஸ்கி : இதுக்குலாம் டிஸ்கி போட முடியாது//
அப்ப நானும் கமெண்ட் போட மாட்டேன்
//..ரஜினி : நா 'ஒரு' தடவ சொன்னா, 'நூறு' தடவ சொன்ன மாதிரி..///
என்னங்க நீங்க , இது பழைய பஞ்ச்ங்க..
//ரஜினி: அடிச்ச அடியும், நடிச்ச நடிப்பும் திருப்பி வந்ததா சரித்திரமே இல்லை...//
இது செம பஞ்ச்ங்க ..
Post a Comment