ஹ்ம்ம். இப்பத்தான் இந்திய கிரிக்கெட் அணி மேல நம்பிக்கை வர்ற மாதிரி ஆடுறாங்க....
ஆஸ்திரேலியா என்னதான் தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றாலும்.. இப்ப இருக்குற அணி சற்று தரமானதாக இல்லை. இந்திய அணியின் பந்து வீச்சு, ஃபீல்டிங் சரியா இல்லாததுனால..... சற்று வலுவிழந்து (போல் காட்சியளிக்கும்) இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இந்திய அணி ஓரளவிற்கு சரியான முறையில் பந்து வீசியும், தடுக்கும் பணியும் நன்றாகச் செய்து ஆஸ்திரேலிய அணியினை 260 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இந்திய அணி, 10 - 15 ரன்களை தராமல் கட்டுப் படுத்தி இருக்கலாம்.. 43 ஓவரில் 199 மட்டுமே அடித்திருந்த ஆஸ்திரேலிய கடைசி 7 ஓவரில் ( பவர் ப்ளே இருக்கும் 5 ஓவர் உட்பட) 61 ரன்களை பெற்றது இந்திய அணியில் பலவீனத்தை காட்டுவதாக நான் நினைக்கிறேன்.
அணித் தலைவர் பொறுப்புடன் ஆட வேண்டும் என்பதற்கு ரிக்கி பாண்டிங் நேற்று உதாரணமாக இருந்தார். அதெப்படியோ தெரியவில்லை.. பொதுவாக ஃபார்மில் இருக்கும் வீரர் இந்திய அணியுடன் சொபிக்காமலும்.. ஃபார்மில் இல்லாதொருவர் இந்திய அணியுடன் விளையாடும்போது ஜொலிப்பதும் நாம் பார்த்து வருவதுதான். அதுபோலவே பாண்டிங்கின் ஆட்டம் நேற்றிருந்தது. சதமடித்த அவருடைய நேர்த்தியான ஆட்டத்தினை பல நாட்களுக்குப் பின்னர் பார்க்க முடிந்தது..
அடுத்து நமது இந்திய அணி ஆட்டம் பற்றி..
பவுலிங், ஃபீல்டிங் முறையில் முன்னேற்றம்.. இதேபோல சற்று கவனமாக இருந்தால் 20 முதல் 25 ரன்கள் வரையில் எதிரணியினர் பெற முடியாமல் கட்டுக்குள் வைக்கலாம்.
"A run saved is a Run Scored."
முதல் பத்து ஓவரில் அதிக ரன்கள் கொடுக்காமல் ஒரு விக்கெட்டையும் சாய்த்து (வாட்சன் விக்கெட்) இந்திய அணி பந்து வீச்சு நல்ல ஆரம்பம். ஆனால் அடுத்த பத்து ஓவர்களில் 60 ரன்களை கொடுத்தது ஏனோ நினைவிற்கு வருகிறது. பவர் பிளேவில் 35 ரன்களுக்கு மேலே கொடுக்கக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும் (மிஞ்சிப் போனால் 40 )
இந்திய பேட்டிங் .... நம்ப முடியவில்லை.. ஆரம்பம் முதலே.. நிதானம், பொறுப்பு, கவனம் வெளிப்பட்டது. டெண்டுல்கர் அமைத்த அடித்தளம் மிகவும் பாராட்டப்பட வல்லது. அவரின் அனுபவம் நன்கு வெளிப்பட்டது. சேவாக் சற்று பயந்தது போலவே பேட்டிங் செய்ததாக நான் நினைக்கிறேன். அவர் தனது பாணியில் விளையாடலாம் என்பது எனது கருத்து. ஒவ்வொரு பார்ட்னர்ஷிப்பும் சொல்லும்படியாக இருந்தது, ரன் அவுட்டுகளை தவித்திருக்கலாம். தன்னை அணியில் சேர்த்தது சரியான செயல்தான் என்பதை சுரேஷ் ரைனா நிரூபித்திருக்கிறார். யுவராஜுடன் அவர் சேர்ந்து இக்காட்டான நேரத்தில் நன்றாக விளையாடி வெற்றியினை பெற வழி வகுத்தார். யுவராஜின் மற்றுமொரு பொறுப்பான சிறப்பான ஆட்டம். இதுவரை விளையாடிய ஏழு ஆட்டங்களில் நான்கு 'Man of the Match', யுவராஜிற்கு.. அதில் ஐந்து மேட்சுகள் இந்திய வெற்றி கண்டுள்ளது.. ஒன்றில் மட்டுமே தோல்வி. மற்றொன்று 'டை'
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்...
கவனம் தேவை... கரடு முரடான கடினமான பாதை எதிர் வருகிறது... (பாகிஸ்தானுடன் அரை இறுதி ஆட்டம்) -- கவனித்து செல்லவும்..
முதல் 'எம்' கடந்தாயிற்று.. (மொட்டேரா).. இன்னும் இரண்டு 'எம்'கள் (மொஹாலி, மும்பை) கடந்தாக வேண்டும், உலக சாம்பியன் ஆவதற்கு.. ..
வாழ்த்துக்கள் இந்திய அணியினர் வரும் ஆட்டங்களில் வெற்றி பெற..
நாடுகளுக்கிடையே ஒருநாள் ஆட்டத்தில்(ODI) 18000 ஓட்டங்களை கடந்த டெண்டுல்கருக்கு ஒரு சிறப்பு சபாஷ்..
நாடுகளுக்கிடையே ஒருநாள் ஆட்டத்தில்(ODI) 18000 ஓட்டங்களை கடந்த டெண்டுல்கருக்கு ஒரு சிறப்பு சபாஷ்..
டிஸ்கி : நேற்று விறுவிறுப்பான டென்ஷனான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதால் இந்தப் பதிவு.. தோற்றிருந்தால்.. வேறு விதமாக (திட்டித்தான்) பதிவு வந்திருக்கும்.. பதிவெழுதாம இருக்க மாட்டோமில்ல !
12 Comments (கருத்துரைகள்)
:
கம்பீர் 50 ரன் அடிச்சாலும்.. ஒரு மாதிரி
தடுமாறிட்டே, டென்ஷனா தான் இருந்தாரு..
கவனிச்சீங்களா..?
குவாட்டரை அடிச்சாச்சு. அடுத்து HALF'ம் அடிக்கணும்.
எனது வலைபூவில் இன்று: மதியோட்டை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்
Todays Times of India Headline: Ponting packed. Next is Pakistan.
ரெய்னா ஆட தொடங்கும் வரை நம்பிக்கையே இல்லை. என்னதான் இருந்தாலும் கடைசியில் பாண்டிங்கின் முகத்தை பார்க்க பாவமாக இருந்தது.
வாழ்த்துக்கள் இந்திய அணியினர் வரும் ஆட்டங்களில் வெற்றி பெற..
...Best wishes! :-)
@வெங்கட்
பயம் இருந்தா தான் வேலைக்கு ஆகும் போல..
@தமிழ்வாசி - Prakash
ஆமா.. 'ஃபுல்' வரைக்கும் அடிக்காம நிறுத்தக் கூடாது.. ஆமா..
பவர்ப்ளே ல தானே அதிக ரன் அடிக்க முடியும் ? எது எப்படியோ ?
நேத்திக்கு எல்லோருமே ரொம்ப பொறுமையா விளையாடினாங்க.
சிங்கிள்ஸ் எடுத்ததுதான் சிறப்பு .. அதுதான் வெற்றிக்கு அடிப்படயா அமைந்ததுன்னு கூட சொல்லலாம் :-_
@மோகன் குமார்
நேற்றிரவு 10 :40 மணியளவில் எனது காதுகளில் ஒலித்த ஒலி..
"This is the Final call for all the Guests travelling by Quantas to Oz"
@பாலா
இதுக்குலாம் பாவம் புன்னியம்லாம் பாக்கக் கூடாது..
சரியாச் சொன்னீங்க. செல்வா.
அனைவருக்கும் நன்றி.
இங்கிருந்து இன்னும் இரண்டு மேட்ச் ஜெயித்தால் கோப்பை! ஹூம்...பார்ப்போம். யுவராஜின் ஆக்ரோஷம், டெண்டுல்கரின் அழகான விளையாட்டு ரசிக்க முடிந்தது. மோடி கடைசி வரை இருந்து பரிசளித்தார். நேற்று நியூசிலாந்து வெற்றியும் த்ரில்லாக இருந்தது.
Post a Comment