Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

நான் உடன் படவில்லை !





என்னம்மா கண்ணு ?.. இன்னிக்கு இந்திய, இலங்கை கிரிகெட்டு மேச்சு பாத்தியா ? (யார்ராவன்.. இப்பலேலாம்.. கிரிகெட்டு கிரிக்கெட்டாவா இருக்குது.... அதலாம் எவன் பார்த்து டயத்த வேஸ்டு செய்வான்..?)

ஜெயிப்பதற்கு இன்னும் ஒரு 5 ரன்னு தேவைப்பட்டப்ப, பைசாக(byes) நான்கு ரன்னு கெடைச்சதுனால .. ரெண்டு டீமோட ரன்னும் சேமாயிடுச்சி (Scores level).. .. ஆனாப் பாருங்க.. சேவாக்குக்கு 99ல இருந்தார்..

பரவாயில்லை நெறையா பந்து பாக்கி இருக்குறப்ப.. ஒரே ரன்னு சேவக்கு அடிச்சு டீமையும் ஜெயிக்க வெச்சு.. தான் செஞ்சுரியும் முடிப்பாருன்னு ரொம்ப ஆவலா பாத்துகிட்டு இருந்தேன்..

அடுத்தப் பந்து... அடிச்சாரு பாரு நம்ம 'வீரேந்திர சேவாக்கு'.. ஒரு சிக்சரு.. அஹா.. செஞ்சுரின்னு கை தட்டி கொண்டாடினா.. அட.. அது நோ பாலாமுல்ல.. எப்படி இருந்தா என்ன.. நோ பாலுல பேட்சுமனு அடிச்சு ரன்னு எடுத்தா, அவரோட ரன்னும் அதிகமாகும்னு நெனச்சா..

நோ பால் ன்னு சொன்ன உடனே ஆட்டம் முடிஞ்சிடுசாமுள்ள.. அவருக்கு ரன்னுலாம் கெடையாதாம்.. அவரு 99 நாட் அவுட்டாம்.. இதென்ன .. அளுகுநியாட்டம் மாதிரி இல்லை இருக்குது.. .. நா இதை ஒத்துக்க மாட்டேன்..

இது எப்படி நியாயம் ?

Courtesy.. http://www.cricinfo.com/sl-tri2010/engine/current/match/456663.html

Chris Harris in the studio has no doubt it was a deliberate no-ball. Well it didn't look accidental. That back foot was where his front foot usually is.

34.4 Randiv to Sehwag, 1 no ball, match is over, but Sehwag has been denied the century. And this is a big no-ball, must I point out? His back foot was close to over-steeping, forget about the front foot. Anyway Sehwag smashed it for six over long-off, but they don't count because the game finishes at no-ball. He raises his arms, but then realises the century is not completed. Doesn't matter to him. He says: "It often happens. When a batsman is on 99 and the scores are level, bowlers try to bowl no-balls and wides. It happens in cricket. Fair enough." What a man ...

இதப் பாருடா.. ' 'வீரேந்திர சேவாக்கு' உண்மையிலேயே.. இத எப்படி ஸ்போர்டிவா எடுத்துக்கிட்டாரு.. நல்ல விளையாட்டு ஆளுதான்..

நேர்மையா வெளையாட வேண்டிய ஒரு பவுலரு, இப்படி குறுக்கு புத்திய காமிச்சிட்டாரே.. நம்ம வடிவேலு சொல்லுற (மாதிரி)... 'சின்னபுள்ளத் தனமா' இருக்குல்ல..?

எனக்கு நல்லா நெனப்பிருக்கு... ஒரு மேச்சுல.. இந்தியா வெற்றி இலக்கை தாண்டின போனாலும்.. சேட்டன் சர்மா செஞ்சுரிய மயிரிழைல மிஸ் பண்ணக்கூடாதுன்னு, ஃபில்டிங் டீமான இங்கிலாந்து.. மேலும் ஒரு பால போட ரெடியா இருந்ததுனால எக்ஸ்ட்ராவா ஒரு பாலப் போட, அதுல சேட்டன் சர்மா ரன்னு அடிச்சு தனது செஞ்சுரி முடிச்சாரு.. (courtesy --- http://www.cricinfo.com/ci/engine/match/65923.html. )



இப்பல்லாம்.. ரூல்ஸ ரொம்பத்தான் மாத்துறாங்க..
ஒரு 'நோ பாலு' போட்டா. அடுத்த பந்து 'FREE HIT' .....
அந்த அடுத்த பந்தும் 'நோ பாலா' இருந்துச்சின்னா ?

இப்பலாம்.. கிரிக்கெட்டு அவ்வளவா பிடிக்க மாட்டேங்குது..(ஆஹா இதுவேறையா..?)

நமது இந்திய தேசிய ரூபாயின் குறியீடு

மேலே உள்ளவை அமெரிக்க (USA ),  ஐரோப்பிய, ஜப்பானிய, இங்கிலாந்து போன்ற  நாடுகளின் பணத்தின் குறியீடாகும். நமது இந்தியாவில் இதுவரை 'Rs .' என்ற குறியீட்டை பயன்படுத்திவருகிறோம். இனி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.
இது நமது தேசிய மொழியான ஹிந்தியில் 'ர' வர்க்கத்தின் குறியீட்டையும், ஆங்கில எழுத்து 'R' யும் பிரதிபலிக்குமாறு உள்ளது. மற்ற நாடுகளின் குறியீட்டில் உள்ளது போல ஒரு படுக்கை கோடு (sleeping line) சேர்க்கப் பட்டுள்ளது. 'படுத்தல்' என்பது குறியீட்டோடு நிற்கட்டும்..  பணத்தில் மதிப்பு உயரே, உயரே செல்லட்டும்..(நான் விலைவாசியை சொல்லவில்லை)



இதனை வடிவமைத்தவர், குவஹாத்தி இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT Guwahati), வடிவமைப்புத் துறையுடன் (Department of Design)  தொடர்புடைய  திரு. D உதய குமார் ஆவார்.  அன்னாருக்கு  வணக்கமும் நன்றியும், இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.உதயகுமார், சென்னையில் பிறந்தவர் என  விக்கிபீடியா தெரிவிக்கிறது. (அட.. நம்ம ஆளா..?.. இப்படித்தாங்க, நோபெல் பரிசு பெற்ற திரு. வெங்கடராமன் ராமகிருஷ்ணனையும்  குறிப்பிட்டோம். ஆமால்ல.. அவார்டு வாங்குற அளவுக்கு சாதனை செஞ்சா,  நாங்க அவங்கள, இல்லை இல்லை.. எங்கள அவங்களோட  இணைச்சுக்க மாட்டோமா..?) இந்த குறியீட்டை உருவாக்கிய உதய குமாருக்கு  2.5  லக்ஷம் பணப்பரிசாக இந்தியா அரசு தருகிறதாம். பணத்தை இப்பொழுதே தருவார்கள அல்லது, இந்த குறியீட்டுடன் பணத்தினை அச்சடித்தபின் தருவார்களா..?




முதலில் கணனியில்(தட்டச்சு பலகை), இந்த குறியீடு ஏற்றப்படவேண்டும். மற்ற மாற்றங்கள் என்னவெல்லாம் வருமென்று நீங்கள், பின்னூட்டமாகத் தரலாமே..

நன்றி  -- தினமலர், IBNlive, NDTV , விகீபீடியா --  Online News channels dt. 15th July :14:20 Hrs .

தாமதமான  பின்குறிப்பு : அட நமக்கு இது ஏப்ரல் 15 தேதிக்கு முன்னாலே தெரியாமப் போயிட்டுதே..... ஒரு ரூபாயா, ரெண்டு ரூபாயா..  2 .5 லக்ஷம் ரூபாயாச்சே..!

Friday Message - 2

இனியாவது, ஒத்துமையா இருங்கப்பு....  நம்மோட முந்தைய பாரம்பரிய, கலாச்சார, வழிபாட்டுக்கு உள்ள மகிமை இப்பவாவது, புரியுதா..?

நன்றி :  மின்னஞ்சல் மூலம், இந்த செய்தியை அனுப்பிய, எனது, நண்பருக்கு..
நல்ல  செய்தி என்று நான் உணர்ந்ததால், இதனை இங்கு வெளியிட்டுள்ளேன்.

Friday message - 1

 HEART IS A BEAUTIFUL GARDEN:

Join smilingsmilers for Innovative Mails

Once a Junior School teacher asked her students to bring some potatoes in a plastic bag to school. Each potato will be given a name of the person whom that child hates. Like this, the number of potatoes will be equal to the number of persons they hate. On a decided day the children brought their potatoes well addressed. Some had two, some had three and some had even five potatoes.

The teacher said they have to carry these potatoes with them everywhere they go for a week. As the days passed the children started to complain about the spoiled smell that started coming from these potatoes. Also some students who had many potatoes complained that it was very heavy to carry them all around. The children got rid of this assignment after a week, when it got over.

The teacher asked, "How did you feel in this one week?" The children discussed their problems about the smell and weight. Then the teacher said, "This situation is very similar to what you carry in your heart when you don't like some people. This hatred makes your heart unhealthy and you carry that hatred in your heart everywhere you go. If you can’t bear the smell of spoiled potatoes for a week, imagine the impact of this hatred that you carry throughout your life, on your heart?"

MORAL:
* Our heart is a beautiful garden that needs a regular cleaning of unwanted weeds.
* Forgive those who have not behaved with you as expected and forget the bad things. this also makes room available for storing good things

மின்னஞ்சல் மூலம், இந்த செய்தியை அனுப்பிய வடஇந்திய நண்பருக்கு நன்றிகள்.
   --------- (யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்)