நமது இந்திய தேசிய ரூபாயின் குறியீடு

மேலே உள்ளவை அமெரிக்க (USA ),  ஐரோப்பிய, ஜப்பானிய, இங்கிலாந்து போன்ற  நாடுகளின் பணத்தின் குறியீடாகும். நமது இந்தியாவில் இதுவரை 'Rs .' என்ற குறியீட்டை பயன்படுத்திவருகிறோம். இனி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.
இது நமது தேசிய மொழியான ஹிந்தியில் 'ர' வர்க்கத்தின் குறியீட்டையும், ஆங்கில எழுத்து 'R' யும் பிரதிபலிக்குமாறு உள்ளது. மற்ற நாடுகளின் குறியீட்டில் உள்ளது போல ஒரு படுக்கை கோடு (sleeping line) சேர்க்கப் பட்டுள்ளது. 'படுத்தல்' என்பது குறியீட்டோடு நிற்கட்டும்..  பணத்தில் மதிப்பு உயரே, உயரே செல்லட்டும்..(நான் விலைவாசியை சொல்லவில்லை)இதனை வடிவமைத்தவர், குவஹாத்தி இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT Guwahati), வடிவமைப்புத் துறையுடன் (Department of Design)  தொடர்புடைய  திரு. D உதய குமார் ஆவார்.  அன்னாருக்கு  வணக்கமும் நன்றியும், இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.உதயகுமார், சென்னையில் பிறந்தவர் என  விக்கிபீடியா தெரிவிக்கிறது. (அட.. நம்ம ஆளா..?.. இப்படித்தாங்க, நோபெல் பரிசு பெற்ற திரு. வெங்கடராமன் ராமகிருஷ்ணனையும்  குறிப்பிட்டோம். ஆமால்ல.. அவார்டு வாங்குற அளவுக்கு சாதனை செஞ்சா,  நாங்க அவங்கள, இல்லை இல்லை.. எங்கள அவங்களோட  இணைச்சுக்க மாட்டோமா..?) இந்த குறியீட்டை உருவாக்கிய உதய குமாருக்கு  2.5  லக்ஷம் பணப்பரிசாக இந்தியா அரசு தருகிறதாம். பணத்தை இப்பொழுதே தருவார்கள அல்லது, இந்த குறியீட்டுடன் பணத்தினை அச்சடித்தபின் தருவார்களா..?
முதலில் கணனியில்(தட்டச்சு பலகை), இந்த குறியீடு ஏற்றப்படவேண்டும். மற்ற மாற்றங்கள் என்னவெல்லாம் வருமென்று நீங்கள், பின்னூட்டமாகத் தரலாமே..

நன்றி  -- தினமலர், IBNlive, NDTV , விகீபீடியா --  Online News channels dt. 15th July :14:20 Hrs .

தாமதமான  பின்குறிப்பு : அட நமக்கு இது ஏப்ரல் 15 தேதிக்கு முன்னாலே தெரியாமப் போயிட்டுதே..... ஒரு ரூபாயா, ரெண்டு ரூபாயா..  2 .5 லக்ஷம் ரூபாயாச்சே..!

8 Comments (கருத்துரைகள்)
:

Bala said... [Reply]

i just have one thing.. the national language status of Hindi isn't conferred yet. Please check the below news post.
http://blog.taragana.com/law/2010/01/27/isnt-hindi-the-national-language-petitioner-to-approach-apex-court-19782/
Its still one of the official languages and not national.

நாஞ்சில் பிரதாப் said... [Reply]

ஆச்சுவலி... இந்த உயதகுமார் துபாய் வரும்போது நான்தான் ஐடியா கொடுத்தேன்...
பையன் பிக்அப் பண்ணிக்கிட்டான்... பணத்துக்கு நாம் எப்போவுமே ஆசைப்படறதில்லை அண்ணாச்சி....

Gayathri said... [Reply]

தமிழோ ஹிந்தியோ எதோ நல்லாத்தான் செய்திருக்கிறார்..பாராட்டுக்கள்...
நன்றி இங்கு பகிர்ந்தமைக்கு..

ஸ்ரீராம். said... [Reply]

இப்படி வரையணும்னு முன்னாடியே சொல்லியிருந்தா நாங்களும் வரைந்திருப்போம்ல... ஒரு ஐம்பதாயிரமாவது தர மாட்டாங்களா..

Madhavan said... [Reply]

@ Bala -- சரி நண்பரே.. இருந்தாலும் ஹிந்தி நமது தேசத்தில் அதிக மக்களால் பேச, எழுதப் படுகிறது..

@ நாஞ்சில் பிரதாப் -- ஓஹோ.. அப்படியா சங்கதி.. உங்களோட நல்ல எண்ணம், எல்லோருக்கும் வரணும்..

//Gayathri said..."தமிழோ ஹிந்தியோ..",
Well said..

//ஸ்ரீராம். said..."இப்படி வரையணும்னு முன்னாடியே சொல்லியிருந்தா நாங்களும் வரைந்திருப்போம்ல..
"//
மிஸ் பண்ணிட்டீங்களே சார்.. என்னதான் வாசகர்களோட திறமைகளை வளர்துவந்தாலும்.. இதை மிஸ் பண்ணிட்டோமே..

Thanks all for ur comments

RVS said... [Reply]

1. கணினியின் விசைப் பலகையில் எண் நான்குக்கு மேலே யு.எஸ். அண்ணன் $ போட்டுக்கொண்டுவிட்டார். அதுபோல் நமது உள்நாட்டு தயாரிப்பு விசைப்பலகைகளில் ஒரு விசையில் நம் சின்னத்தை அலங்கரித்துக்கொள்ள வேண்டும். யாராவது பிரசித்தி பெற்ற எண்ணியல் விற்பன்னர் எந்த நம்பர் இந்தியாவிற்கு என்று ஆலோசனை வழங்கலாம்.2. தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து ரூபாய்த் தாள்களையும் மாற்றி புதுச் சின்னத்தோடு இருப்பவையை மக்களுக்கு அளிக்கவேண்டும். எவ்வளவு கருப்பு, சிகப்பு உள்ளே வெளியே வரும் போகும் என்று தெரியாது.

3. மார்க்கெட்டில் இருக்கும் எல்லாப் பொருட்களின் மீதும் அச்சடித்துள்ள Rs. சை நீக்கி புதுச் சின்னம் பொறிக்கப்படவேண்டும். பெரும்பாலான கடைகளில் இரண்டுக்கு இரண்டு செ.மீயில் ஒரு வெள்ளை கலர் ஸ்டிக்கர் அடித்திருக்கிறார்கள். அதை மாற்றினால் போதும். வேலை சுலபம்.


4. யூனிகோட் போன்ற எழுத்துருக்களில் ஒரு தனி இடம் இதற்கும் கிடைக்க வேண்டும். இது ஐ.டி மக்களின் தலைவலி. நிச்சயம் நன்றாக செய்வார்கள்.


5. எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல், இனம், மதம், மொழி வேறுபாடில்லாமல் எல்லோரும் ஒரே குறியை தேர்ந்தெடுக்க வேண்டும். இது சிறுபான்மைக்கு ஒத்து வராது, பெரும்பான்மைக்கு ஒத்து வராது, எதிர்க்கட்சிகள் கண்டனம் என்றெல்லாம் வராமல் நமக்கென்று ஒரு குறியீடு அமைவதற்கு எல்லாம் வல்ல ஆண்டவன் அருள்பாலிப்பாராக.


ஆர்.வி.எஸ்.
http://mannairvs.blogspot.com

Madhavan said... [Reply]

RVS-- நன்றி நண்பா.. பின்னூட்டமா ஒரு தொடர் பதிவே எழுதிட்டீங்க..

உண்மையையும் நகைச்சுவையையும் கொண்டுள்ள கருத்துக்கள்..

RVS said... [Reply]

ஒரு பதினைந்து நாட்கள் முன்னாடி பதிவுக்காக எழுதி வச்சிருந்தேன். பப்ளிஷ் பண்ண முடியலை...உன் மூலமா அதை தீர்த்துக்கிட்டேன்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...