நான் உடன் படவில்லை !

என்னம்மா கண்ணு ?.. இன்னிக்கு இந்திய, இலங்கை கிரிகெட்டு மேச்சு பாத்தியா ? (யார்ராவன்.. இப்பலேலாம்.. கிரிகெட்டு கிரிக்கெட்டாவா இருக்குது.... அதலாம் எவன் பார்த்து டயத்த வேஸ்டு செய்வான்..?)

ஜெயிப்பதற்கு இன்னும் ஒரு 5 ரன்னு தேவைப்பட்டப்ப, பைசாக(byes) நான்கு ரன்னு கெடைச்சதுனால .. ரெண்டு டீமோட ரன்னும் சேமாயிடுச்சி (Scores level).. .. ஆனாப் பாருங்க.. சேவாக்குக்கு 99ல இருந்தார்..

பரவாயில்லை நெறையா பந்து பாக்கி இருக்குறப்ப.. ஒரே ரன்னு சேவக்கு அடிச்சு டீமையும் ஜெயிக்க வெச்சு.. தான் செஞ்சுரியும் முடிப்பாருன்னு ரொம்ப ஆவலா பாத்துகிட்டு இருந்தேன்..

அடுத்தப் பந்து... அடிச்சாரு பாரு நம்ம 'வீரேந்திர சேவாக்கு'.. ஒரு சிக்சரு.. அஹா.. செஞ்சுரின்னு கை தட்டி கொண்டாடினா.. அட.. அது நோ பாலாமுல்ல.. எப்படி இருந்தா என்ன.. நோ பாலுல பேட்சுமனு அடிச்சு ரன்னு எடுத்தா, அவரோட ரன்னும் அதிகமாகும்னு நெனச்சா..

நோ பால் ன்னு சொன்ன உடனே ஆட்டம் முடிஞ்சிடுசாமுள்ள.. அவருக்கு ரன்னுலாம் கெடையாதாம்.. அவரு 99 நாட் அவுட்டாம்.. இதென்ன .. அளுகுநியாட்டம் மாதிரி இல்லை இருக்குது.. .. நா இதை ஒத்துக்க மாட்டேன்..

இது எப்படி நியாயம் ?

Courtesy.. http://www.cricinfo.com/sl-tri2010/engine/current/match/456663.html

Chris Harris in the studio has no doubt it was a deliberate no-ball. Well it didn't look accidental. That back foot was where his front foot usually is.

34.4 Randiv to Sehwag, 1 no ball, match is over, but Sehwag has been denied the century. And this is a big no-ball, must I point out? His back foot was close to over-steeping, forget about the front foot. Anyway Sehwag smashed it for six over long-off, but they don't count because the game finishes at no-ball. He raises his arms, but then realises the century is not completed. Doesn't matter to him. He says: "It often happens. When a batsman is on 99 and the scores are level, bowlers try to bowl no-balls and wides. It happens in cricket. Fair enough." What a man ...

இதப் பாருடா.. ' 'வீரேந்திர சேவாக்கு' உண்மையிலேயே.. இத எப்படி ஸ்போர்டிவா எடுத்துக்கிட்டாரு.. நல்ல விளையாட்டு ஆளுதான்..

நேர்மையா வெளையாட வேண்டிய ஒரு பவுலரு, இப்படி குறுக்கு புத்திய காமிச்சிட்டாரே.. நம்ம வடிவேலு சொல்லுற (மாதிரி)... 'சின்னபுள்ளத் தனமா' இருக்குல்ல..?

எனக்கு நல்லா நெனப்பிருக்கு... ஒரு மேச்சுல.. இந்தியா வெற்றி இலக்கை தாண்டின போனாலும்.. சேட்டன் சர்மா செஞ்சுரிய மயிரிழைல மிஸ் பண்ணக்கூடாதுன்னு, ஃபில்டிங் டீமான இங்கிலாந்து.. மேலும் ஒரு பால போட ரெடியா இருந்ததுனால எக்ஸ்ட்ராவா ஒரு பாலப் போட, அதுல சேட்டன் சர்மா ரன்னு அடிச்சு தனது செஞ்சுரி முடிச்சாரு.. (courtesy --- http://www.cricinfo.com/ci/engine/match/65923.html. )இப்பல்லாம்.. ரூல்ஸ ரொம்பத்தான் மாத்துறாங்க..
ஒரு 'நோ பாலு' போட்டா. அடுத்த பந்து 'FREE HIT' .....
அந்த அடுத்த பந்தும் 'நோ பாலா' இருந்துச்சின்னா ?

இப்பலாம்.. கிரிக்கெட்டு அவ்வளவா பிடிக்க மாட்டேங்குது..(ஆஹா இதுவேறையா..?)

15 Comments (கருத்துரைகள்)
:

மதுரை சரவணன் said... [Reply]

இன்று மேட்ச் கலக்கல்... பகிர்வுக்கு நண்றீ... வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் said... [Reply]

நேற்றய மேட்சில் ரந்திவ் செய்தது பேடித்தனம்....

மோகன் குமார் said... [Reply]

ரன்தீவ் செய்தது ரொம்ப அநியாயம். இதனை பதிவு செய்தமைக்கு நன்றி

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

87-88 ல நம்ம ஆளுங்க அங்க விளையாடப் போன போது இலங்கை டீம்ல 13 பேரு (ரெண்டு அம்பையரையும் சேர்த்து) இருந்தாங்களே, ஞாபகம் இருக்கா? என்னவோ போங்க,
இலங்கை பேரக் கேட்டாலே எரியுது எனக்கு!

வெங்கட் said... [Reply]

சுத்த கேணத்தனமான ரூல்ஸ்சா
இருக்கு.. நான் கூட
இதை ஒப்புக்க மாட்டேன்..!!

ICC Down Down..!!

ஸ்ரீராம். said... [Reply]

கொடுமை. ஆட்டக்காரர்களை அவமதிக்கும் ரூல்..!

Chitra said... [Reply]

என்னம்மா கண்ணு ?.. இன்னிக்கு இந்திய, இலங்கை கிரிகெட்டு மேச்சு பாத்தியா ? (யார்ராவன்.. இப்பலேலாம்.. கிரிகெட்டு கிரிக்கெட்டாவா இருக்குது.... அதலாம் எவன் பார்த்து டயத்த வேஸ்டு செய்வான்..?)


..... இன்னுமா, இந்த உலகம், இப்படி ரூல்ஸ் எல்லாத்தையும் நம்புது? ஆஆஆ .....

Madhavan said... [Reply]

//Hi madhavan73,

Congrats!

Your story titled 'நான் உடன் படவில்லை !' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th August 2010 10:21:01 PM GMT

Here is the link to the story: http://ta.indli.com/story/322662

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team //


Thanks to all those voted.

malli said... [Reply]

இன்றைய தினமலர் செய்தி ரண்டிவ் மன்னிப்பு கேட்டுவிட்டார்.அருமையான பதிவு.

Madhavan said... [Reply]
This comment has been removed by the author.
Madhavan said... [Reply]

மதுரை சரவணன், அருண் பிரசாத், Mohan, Pe.so.vi, Venkat, Chitra, Malli, Sriram

-- thanks

அனு said... [Reply]

ஹூம்.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை!!! Sportsஅ sportiveஆ எடுத்துக்க மாட்டேன்றாங்க!! ஒரே feelingsஆ போச்சு...

RVS said... [Reply]

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம். ஒ.கே வா. இதுக்கெல்லாம் கலங்கப்டாது கண்ணு. ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

tamil cinema news said... [Reply]

thanks for sharing this quality content, we will wait for more..

Jobschennai said... [Reply]

thanks for sharing :)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...