விருப்பமுடன் (தொடர்ந்து) சொல்கிறேன் !

இது ஒரு தொடர்பதிவு. அழைத்த பெயர் சொல்ல விருப்பமில்லை க்கு நன்றி!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஸ்ரீ மாதவன்
என்னடா இவன், தனக்குத்தான மரியாதையா முன்னாலே 'ஸ்ரீ' போடுவதாக நினைக்கிறீர்களா? எனது தந்தை பெயரின் முதல் எழுத்து 'ஸ்ரீ'... ஹீ.. ஹீ.. எனது இனிஷியல்..

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


நிச்சயமாக அந்தப் பெயர் உண்மைப் பெயர்தான்.
இன்னமும் நம்பலேன்னா சொல்லுங்க.. SSLC சர்டிபிகேட்ட ஸ்கேன் பண்ணி இங்க போடுறேன் (தனிப்பதிவா)


3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

சொந்தமா எழுதின கிறுக்கல்கள் பல, அச்சுப்-பத்திரிக்கைல பிரசுரம் செய்யும் ஆசையில அனுப்பின சரக்கு எல்லாம், சச்சின், சேவாக்கு அடிக்குற சிக்சர் மாதிரி திரும்ப வந்துடிச்சு.. அப்பத்தான் வலைப்பூ பத்தி கேள்வி பட்டேன்.. அஹா.. இங்கிட்டு சச்சின், சேவாக்கு இல்லை.. நம்ம மனீந்தர் சிங்கு, வெங்கடேஷ் பிரசாத்துலாந்தான் இருக்குறாங்க.. நம்ம சரக்கு திரும்ப வராதுன்னு தெரிஞ்சதுனால, கடைய விரிச்சிட்டேன்...
ஒக்கே. ஒக்கே.. உண்மையான காரணத்த சொல்லிப் புடுறேன்.. எனது மரியாதை மற்றும் அன்புக்குரிய அண்ணனும், ஒரு பிரபில வலைப்பதிவாலருமான திரு ___________ அவர்களின் வலைப்பூ மோகத்தினால், நானும் உந்தப்பட்டு ஏதோ என்னால் ஆனா சேவையை செய்து வருகிறேன்.
(இடியாப்பம் இல்லீங்கோ, சேவைன்னா சர்வீஸ்)

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலமா ?.. எனக்கு அப்படித் தெரியவில்லை..உண்மையிலே பிரபலம் அடைஞ்ச பின்னாடி மறக்காம இதைப் பத்தி எழுதுகிறேன். (சந்தடி சாக்குல, வேற ஒரு பதிவுக்கு சான்சு கிடைச்சுடிச்சு.. அடாடா.. சரக்கு இல்லாம என்னோட நிலைமையை வெளிப் படுத்திட்டேனே..! பரவாயில்லை இதப் படிக்கிறவர்கள் http://madhavan73.blogspot.com/2010/07/blog-post_07.html படிச்சிருப்பாங்க.. இல்லைன்னா இந்த பதிவ படிச்ச பின்னாடி படிப்பாங்க.. நோ பிராபிளம்.. )

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

பெரிய "இல்லை" (big NO )
சொந்த விஷயங்கள் யார் யாருக்குத் தெரியனுமோ / தெரிவிக்க வேண்டுமோ, அதனை செய்ய இன்னும் பிற ஊடகங்கள் இருக்கிறது.... இந்த ஊடகத்தின் மூலம் (வலைப் பதிவு), பொழுது போக்கு, வாழ்க்கைப் பயன் போன்ற விஷயங்களை பகிரலாமே என்ற (உயர்ந்த) சிந்தனை (எண்ணம்) தான். ( நா என்ன அலைபாயுதே 'மாதவனா' ?, இல்லையே.. என்னைய பத்தி தெரிஞ்சுக்க யாருக்குத்தான் ஆசை..)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

எழுதினாலும் சம்பாதிப்பேன், எழுதலேன்னாலும் சம்பாதிப்பேன்.. ஹீ.. ஹீ.. ஆபீசு நேரத்துலதானே எழுதுறேன்.. (நல்ல வேளை, என்னோட பாஸுக்கு, நம்ம மொழி தெரியாது..)
மற்றபடி வீட்டிலிருந்து எழுதுவதெல்லாம், பொழுதுபோக்குக்காகவே.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இது என்னால், என் பெயரிலேய துவங்கி, நடத்தப் பட்டு வருவது. நானும் எங்கள் கிரியேஷன்ஸ் வலைதளத்தில் சில படங்களை வரைந்து அதைப் பதிவாக வெளியிட்டிருக்கிறார்கள். (நன்றி, ஸ்ரீராம், கே.ஜி .கௌதமன், காசு ஷோபனா)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபமில்லை.... கொஞ்சம் போறாமையுண்டு.. ஆமாம் எனக்குப் பின்னர் எழுத ஆரம்பித்தவர்கள்கூட 100 க்கும் மேலான இடுகைகளை வெளியிட்டுள்ளனர். கொஞ்சமாக இடுகைகளின் எண்ணிக்கை இட்டாலும் சிலருக்கு 50 க்கும் மேற்பட்ட 'பின்தொடருனர் (ஃ பாலோயர்). / 30க்கு மேல பின்னூட்டம் . ஹூம்.., அவர்களாவது மேன்மேலும் பல ஃ பாலோயர் பெற்று, மேலும் பல பயனுள்ள இடுகைகளை இட்டு .. (ஏன் ... . ஏன்..? எதுக்கு என்னோட ரெண்டு காதுகளையும் பார்க்குறீங்க.... புகை உங்க கண்ணுக்கு தெரியாது.... அது என்னோட ஸ்பெஷல் டெக்குனிக்கு..)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

எப்படி.. எப்படி பாராட்டுவாங்க? நான்தான் சொந்த விஷயங்களை (ஃ பொன் நம்பர், முகவரி) சொல்லவே இல்லையே....
(வேறென்னத்த சொல்லுறது... பாராட்டற மாதிரி எழுதினாதான.., நல்ல வேளை, என்னோட கணணி IP கண்டுபிடிச்சி ஆட்டோ அனுப்பாம இருக்காங்களே.. அந்த மட்டில் சந்தோஷம்... )

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நா ரொம்ப, ரொம்ப ரெம்பவே நல்லவன்..
நம்பிட்டீங்களா ? தொடர்ந்து இங்கிட்டு வந்து என்னோட போஸ்ட்லாம் படிச்சிட்டு, உங்களோட கருத்த பின்னூட்டமா எழுதுங்க பிளீஸ்..
நம்பலையா.. தொடர்ந்து என்னோட போஸ்ட்லாம் படிங்க.. உங்களுக்கு போகப் போக புரியும்..

இந்தப் பதிவுத் தொடருக்கு நான் அழைக்கும் பதிவர்கள் (வாங்க.. வந்து கலக்குங்க ) :
  1. அநன்யா மகாதேவன்
  2. தீராத விளையாட்டுப் பிள்ளை
  3. வீடுதிரும்பல் மோகன் குமார்

16 Comments (கருத்துரைகள்)
:

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

தொடர்ந்ததுக்கு நன்றி! சும்மா பூந்து விளையாடிட்டீங்க, வாழ்த்துகள்!
(என் பதிவு சுமாரா இருந்தாலும் நான் தொடர அழைத்த ரெண்டு பேரும் சும்மா கலக்கிட்டாங்க, இல்ல?)

மோகன் குமார் said... [Reply]

Already Vidhoosh has also invited; I dont have time now to write; will try to do. Thanks Madhavan.

வெங்கட் said... [Reply]

// எனது மரியாதை மற்றும் அன்புக்குரிய அண்ணனும்,
ஒரு பிரபில வலைப்பதிவாலருமான திரு ___________
அவர்களின் வலைப்பூ மோகத்தினால், //

அதென்ன _______________.,
" வெங்கட்ன்னு " பட்டுன்னு
சொல்ல வேண்டியது தானே..!!

ஹி., ஹி., ஹி..!!

ஸ்ரீராம். said... [Reply]

புகை வெளியில் தெரியாம இருக்கற டெக்னிக் எங்களுக்கும் சொல்லிக் கொடுங்களேன்...! நல்லா எழுதி இருக்கீங்க மாதவன்..

Madhavan said... [Reply]

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

தொடர்ந்ததுக்கு நன்றி! சும்மா பூந்து விளையாடிட்டீங்க, வாழ்த்துகள்!
(என் பதிவு சுமாரா இருந்தாலும் நான் தொடர அழைத்த ரெண்டு பேரும் சும்மா கலக்கிட்டாங்க, இல்ல?)//

உங்கள் பதிவும் நன்றாகவே இருந்தது.. நன்றி..


//மோகன் குமார் said.." Already Vidhoosh has also invited; I dont have time now to write; will try to do. Thanks Madhavan."

So, u have to write.. (two invitations to follow).. but.. s plz. take ur own time.

// வெங்கட் said..."அதென்ன _______________.,
" வெங்கட்ன்னு " பட்டுன்னு
சொல்ல வேண்டியது தானே..!!//

ok ok .. வெங்கட்

//ஸ்ரீராம். said..."புகை வெளியில் தெரியாம இருக்கற டெக்னிக் எங்களுக்கும் சொல்லிக் கொடுங்களேன்.."//

அது.. ஏதோ ஒரு வேகத்துல எழுதிட்டேன்.. நம்ம கமல் சொன்ன மாதிரி '... சொன்னா ரசிக்கணும்... ஆராயப்டாது..'

வாழ்த்துக்களுக்கு நன்றி..

மதுரை சரவணன் said... [Reply]

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Chitra said... [Reply]

ஹா,ஹா,ஹா,ஹா.... கலக்கல் பதில்கள்!!!!

cho visiri said... [Reply]

Good post.

cho visiri said... [Reply]

By the way, by the name of the blogspot, it appears, requires a correction/modification.

"MaindanuL Oruvan" should read as "maindargaLil oruvan".

Or do you simply refer to the person in you ?

These comments however do not take away the quality of joke 9and serious) suff too in your post.

You 'd better avoid using office time to file new post.

அநன்யா மஹாதேவன் said... [Reply]

ஏன் இந்த கொலை வெறி பாஸ்? என்னையும் இதுல இழுத்து விட்டுட்டீங்களே? அவூ.....
எப்போன்னு தெரியலேது...ஆனா முடியும்போது கட்டாயம் முன்னுரிமை கொடுத்து இந்தப்பதிவை போட்டுடறேன்.. உங்க அளவுக்கு நகைச்சுவையா எல்லாம் என்னால எழுத முடியாது.. இருந்தாலும் அந்த பொறாமைன்னு நீங்க சொன்ன பதில் இருக்கே, அதை நான் பரிபூரணமா ஒத்துக்கறேன்.. ப்ளாக் அவுட்லே எல்லாம் ரொம்ப நல்லா இருக்கே! பேஷ் பேஷ்! சூப்பர்!

அருண் பிரசாத் said... [Reply]

சூப்பருங்க. கலக்கல் பதில்கள்

@ பெ.சொ.வி

தல பதிவு போட சொல்லிட்டு, நம்ம பக்கம் எட்டி கூட பாக்கல. இதை வன்மையாக கண்டிக்கிறேன்

@ வெங்கட்

போச்சுடா... இதையும் தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வெச்சிகுங்க...

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

// cho visiri said...

You 'd better avoid using office time to file new post.

5 August 2010 5:53 AM//

நல்ல அறிவுரை............ஒரு சந்தேகம், நீங்க நைட் டியூட்டியில இருக்கும்போது இந்த கமென்ட் போடலியே? (போட்ட நேரம் னு இருக்கே, அதான் கேட்டேன்!)

Madhavan said... [Reply]

# நன்றி மதுரை சரவணன்.. அடிக்கடி வாங்க..

# நன்றி, சோ-விசிறி. (இன்று அலுவலக நேரத்தில் நான் 'பிலாக்குப்' பக்கம் போகவே இல்லை.. உங்கள் அறிவுரைக்கு நன்றி... ஜஸ்டு ஜி-மெயில இருந்து வந்த பின்னூட்டத்த மட்டுமே போஸ்டுசெய்தேன்.)

# நன்றி சித்ரா..

# நன்றி அனன்யா... நீங்களும் நல்லா எழுத வாழ்த்துக்கள்

# நன்றி அருண் பிரசாத்.. நா அவ்ளோ நல்லாவா எழுதி இருக்கேன்..?

rice said... [Reply]

ஹா. ஹா. ஹா.. செம காமெடி அப்பு..

DreamGirl said... [Reply]

உங்களது காமெடியான பதிவு நல்லாத்தான் இருக்கு.. டிவியில் உங்களது பெட்டு போலவே..

தமிழ் மகன் said... [Reply]

இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...