விருப்பமுடன் (தொடர்ந்து) சொல்கிறேன் !

இது ஒரு தொடர்பதிவு. அழைத்த பெயர் சொல்ல விருப்பமில்லை க்கு நன்றி!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஸ்ரீ மாதவன்
என்னடா இவன், தனக்குத்தான மரியாதையா முன்னாலே 'ஸ்ரீ' போடுவதாக நினைக்கிறீர்களா? எனது தந்தை பெயரின் முதல் எழுத்து 'ஸ்ரீ'... ஹீ.. ஹீ.. எனது இனிஷியல்..

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


நிச்சயமாக அந்தப் பெயர் உண்மைப் பெயர்தான்.
இன்னமும் நம்பலேன்னா சொல்லுங்க.. SSLC சர்டிபிகேட்ட ஸ்கேன் பண்ணி இங்க போடுறேன் (தனிப்பதிவா)


3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

சொந்தமா எழுதின கிறுக்கல்கள் பல, அச்சுப்-பத்திரிக்கைல பிரசுரம் செய்யும் ஆசையில அனுப்பின சரக்கு எல்லாம், சச்சின், சேவாக்கு அடிக்குற சிக்சர் மாதிரி திரும்ப வந்துடிச்சு.. அப்பத்தான் வலைப்பூ பத்தி கேள்வி பட்டேன்.. அஹா.. இங்கிட்டு சச்சின், சேவாக்கு இல்லை.. நம்ம மனீந்தர் சிங்கு, வெங்கடேஷ் பிரசாத்துலாந்தான் இருக்குறாங்க.. நம்ம சரக்கு திரும்ப வராதுன்னு தெரிஞ்சதுனால, கடைய விரிச்சிட்டேன்...
ஒக்கே. ஒக்கே.. உண்மையான காரணத்த சொல்லிப் புடுறேன்.. எனது மரியாதை மற்றும் அன்புக்குரிய அண்ணனும், ஒரு பிரபில வலைப்பதிவாலருமான திரு ___________ அவர்களின் வலைப்பூ மோகத்தினால், நானும் உந்தப்பட்டு ஏதோ என்னால் ஆனா சேவையை செய்து வருகிறேன்.
(இடியாப்பம் இல்லீங்கோ, சேவைன்னா சர்வீஸ்)

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலமா ?.. எனக்கு அப்படித் தெரியவில்லை..உண்மையிலே பிரபலம் அடைஞ்ச பின்னாடி மறக்காம இதைப் பத்தி எழுதுகிறேன். (சந்தடி சாக்குல, வேற ஒரு பதிவுக்கு சான்சு கிடைச்சுடிச்சு.. அடாடா.. சரக்கு இல்லாம என்னோட நிலைமையை வெளிப் படுத்திட்டேனே..! பரவாயில்லை இதப் படிக்கிறவர்கள் http://madhavan73.blogspot.com/2010/07/blog-post_07.html படிச்சிருப்பாங்க.. இல்லைன்னா இந்த பதிவ படிச்ச பின்னாடி படிப்பாங்க.. நோ பிராபிளம்.. )

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

பெரிய "இல்லை" (big NO )
சொந்த விஷயங்கள் யார் யாருக்குத் தெரியனுமோ / தெரிவிக்க வேண்டுமோ, அதனை செய்ய இன்னும் பிற ஊடகங்கள் இருக்கிறது.... இந்த ஊடகத்தின் மூலம் (வலைப் பதிவு), பொழுது போக்கு, வாழ்க்கைப் பயன் போன்ற விஷயங்களை பகிரலாமே என்ற (உயர்ந்த) சிந்தனை (எண்ணம்) தான். ( நா என்ன அலைபாயுதே 'மாதவனா' ?, இல்லையே.. என்னைய பத்தி தெரிஞ்சுக்க யாருக்குத்தான் ஆசை..)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

எழுதினாலும் சம்பாதிப்பேன், எழுதலேன்னாலும் சம்பாதிப்பேன்.. ஹீ.. ஹீ.. ஆபீசு நேரத்துலதானே எழுதுறேன்.. (நல்ல வேளை, என்னோட பாஸுக்கு, நம்ம மொழி தெரியாது..)
மற்றபடி வீட்டிலிருந்து எழுதுவதெல்லாம், பொழுதுபோக்குக்காகவே.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இது என்னால், என் பெயரிலேய துவங்கி, நடத்தப் பட்டு வருவது. நானும் எங்கள் கிரியேஷன்ஸ் வலைதளத்தில் சில படங்களை வரைந்து அதைப் பதிவாக வெளியிட்டிருக்கிறார்கள். (நன்றி, ஸ்ரீராம், கே.ஜி .கௌதமன், காசு ஷோபனா)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபமில்லை.... கொஞ்சம் போறாமையுண்டு.. ஆமாம் எனக்குப் பின்னர் எழுத ஆரம்பித்தவர்கள்கூட 100 க்கும் மேலான இடுகைகளை வெளியிட்டுள்ளனர். கொஞ்சமாக இடுகைகளின் எண்ணிக்கை இட்டாலும் சிலருக்கு 50 க்கும் மேற்பட்ட 'பின்தொடருனர் (ஃ பாலோயர்). / 30க்கு மேல பின்னூட்டம் . ஹூம்.., அவர்களாவது மேன்மேலும் பல ஃ பாலோயர் பெற்று, மேலும் பல பயனுள்ள இடுகைகளை இட்டு .. (ஏன் ... . ஏன்..? எதுக்கு என்னோட ரெண்டு காதுகளையும் பார்க்குறீங்க.... புகை உங்க கண்ணுக்கு தெரியாது.... அது என்னோட ஸ்பெஷல் டெக்குனிக்கு..)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

எப்படி.. எப்படி பாராட்டுவாங்க? நான்தான் சொந்த விஷயங்களை (ஃ பொன் நம்பர், முகவரி) சொல்லவே இல்லையே....
(வேறென்னத்த சொல்லுறது... பாராட்டற மாதிரி எழுதினாதான.., நல்ல வேளை, என்னோட கணணி IP கண்டுபிடிச்சி ஆட்டோ அனுப்பாம இருக்காங்களே.. அந்த மட்டில் சந்தோஷம்... )

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நா ரொம்ப, ரொம்ப ரெம்பவே நல்லவன்..
நம்பிட்டீங்களா ? தொடர்ந்து இங்கிட்டு வந்து என்னோட போஸ்ட்லாம் படிச்சிட்டு, உங்களோட கருத்த பின்னூட்டமா எழுதுங்க பிளீஸ்..
நம்பலையா.. தொடர்ந்து என்னோட போஸ்ட்லாம் படிங்க.. உங்களுக்கு போகப் போக புரியும்..

இந்தப் பதிவுத் தொடருக்கு நான் அழைக்கும் பதிவர்கள் (வாங்க.. வந்து கலக்குங்க ) :
  1. அநன்யா மகாதேவன்
  2. தீராத விளையாட்டுப் பிள்ளை
  3. வீடுதிரும்பல் மோகன் குமார்

சந்தோஷமான 18

இன்றைய ஸ்பெஷல் :
அனைவருக்கும்
(ஆடி)
(பெருக்கு )வாழ்த்துக்கள்  !

சின்ன வயசுல.. இன்றைய தின மாலை நேரத்தில், உறவினர், நண்பர்களுடன், சப்பரவண்டி கட்டிக் கொண்டு தேர் போல இழுத்து வீதி வழியாக, பட்டாசுகளை வெடித்துக் கொண்டு காவேரி ஆற்றங்கரை சென்று, காவிரித் தாயை வழிபட்டு, பலவித அன்னம், எல்லோருக்கும் பரிமாறி உண்டு, இனிய மாலைப் பொழுதை கழிக்கும் சுகம்...   ஆஹா.. என்னவென்பது.

ஆம், இன்றைய தினம் அடிப் பதினெட்டு... இதனை நாங்கள் பதினெட்டாம் பேர் (ஆடிப் பேருக்கு  -- காண்க படம் மேலே) எனச் சொல்லி மேலே சொன்னவாறு கொண்டாடுவோம்.   20-25 வருடகளுக்கு முன்னால் நடந்ததை நினைக்க மனம் புத்துணர்ச்சி பெறுகிறது, சந்தோஷத்தில்.

பின்குறிப்பு  : 'ஆடி' -> 'ஆடி' மாதத்தினையும், 'பெருக்கு' - >'நீர், நில வளங்களை மென்மேலும் உயர்த்து -- பெருக்கு' என்கிற வகையிலும் அமைத்ததாகும்.  சும்மா தமாசுக்கு அணிமஷன் படங்களை 'வார்த்தைக்காக மட்டுமே'(செயலுக்கு அல்ல) போட்டுள்ளேன்.