சந்தோஷமான 18

இன்றைய ஸ்பெஷல் :
அனைவருக்கும்
(ஆடி)
(பெருக்கு )வாழ்த்துக்கள்  !

சின்ன வயசுல.. இன்றைய தின மாலை நேரத்தில், உறவினர், நண்பர்களுடன், சப்பரவண்டி கட்டிக் கொண்டு தேர் போல இழுத்து வீதி வழியாக, பட்டாசுகளை வெடித்துக் கொண்டு காவேரி ஆற்றங்கரை சென்று, காவிரித் தாயை வழிபட்டு, பலவித அன்னம், எல்லோருக்கும் பரிமாறி உண்டு, இனிய மாலைப் பொழுதை கழிக்கும் சுகம்...   ஆஹா.. என்னவென்பது.

ஆம், இன்றைய தினம் அடிப் பதினெட்டு... இதனை நாங்கள் பதினெட்டாம் பேர் (ஆடிப் பேருக்கு  -- காண்க படம் மேலே) எனச் சொல்லி மேலே சொன்னவாறு கொண்டாடுவோம்.   20-25 வருடகளுக்கு முன்னால் நடந்ததை நினைக்க மனம் புத்துணர்ச்சி பெறுகிறது, சந்தோஷத்தில்.

பின்குறிப்பு  : 'ஆடி' -> 'ஆடி' மாதத்தினையும், 'பெருக்கு' - >'நீர், நில வளங்களை மென்மேலும் உயர்த்து -- பெருக்கு' என்கிற வகையிலும் அமைத்ததாகும்.  சும்மா தமாசுக்கு அணிமஷன் படங்களை 'வார்த்தைக்காக மட்டுமே'(செயலுக்கு அல்ல) போட்டுள்ளேன்.

10 Comments (கருத்துரைகள்)
:

Chitra said... [Reply]

இன்றைய தின மாலை நேரத்தில், உறவினர், நண்பர்களுடன், சப்பரவண்டி கட்டிக் கொண்டு தேர் போல இழுத்து வீதி வழியாக, பட்டாசுகளை வெடித்துக் கொண்டு காவேரி ஆற்றங்கரை செண்டு, காவிரித் தாயை வழிபட்டு, பலவித அன்னம், எல்லோருக்கும் பரிமாறி உண்டு, இனிய மாலைப் பொழுதை கழிக்கும் சுகம்... ஆஹா.. என்னவென்பது.


...எப்படியெல்லாம் கொண்டாடி இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன்.... வாசிக்கவே சந்தோஷமாக இருக்கிறது.... வாழ்த்துக்கள்!

அருண் பிரசாத் said... [Reply]

ஆம், பல விழாக்களை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம். நம் சந்ததிகள் தீபாவளி, பொங்கல் பண்டிகையை இழந்தாலும் ஆச்சர்யபடுவதர்க்கு இல்லை

வார்த்தை said... [Reply]

// 20-25 வருடகளுக்கு முன்னால் நடந்ததை நினைக்க மனம் புத்துணர்ச்சி பெறுகிறது, சந்தோஷத்தில்.//

அதே...

பெசொவி said... [Reply]

ஆடி பெருக்கு படம் மிகவும் அருமை! சிறிய வயது நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். உங்களுக்கும் என் இனிய ஆடிப் பேருக்கு வாழ்த்துகள்!

Prathap Kumar S. said... [Reply]

உண்மையிலேயே நல்லா சிரிச்சட்டேன்...

ஒரு கேள்வி ஆடாம பெருக்க கூடாதா??? :)

ஸ்ரீராம். said... [Reply]

வாழ்த்துக்கள். காவிரி இல்லாமல் சித்ரான்னம் மட்டும் வீட்டில்...!!

புவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]

சிறுவயது நிகழ்வுகளை நல்லா சொல்லியிருக்கீங்க. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

DreamGirl said... [Reply]

நாங்க கூட அந்தநாளை இன்னும் மறக்கவில்லை.. நினைக்கும்போதே மனமகிழ்ச்சி அடைகிறேன். பகிர்விற்கு நன்றி

rice said... [Reply]

எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் மாநகர வாழ்க்கை மட்டுமே.. இப்படிலாம் மேட்டரு இருக்குதா.. பாக்கலாம் நெக்ஸ்டு டைமு..

கோமதி அரசு said... [Reply]

உங்கள் சந்தோஷமான 18 நல்லா இருக்கு.

எல்லோரும் கொண்டாட நீங்கள் சொன்ன மாதிரி நீர் வளம்,நிலவளம் பெருகினால்
நல்லது.

ஆடி,பெருக்கு அனிமேஷன் படங்கள் அருமை.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...