நண்பர் 'ஆதிமனிதன்' சாலை பாதுகாப்பு பற்றிய தொடர்-பதிவிற்கு அழைத்திருந்தார். பெரும்பாலும் இந்த தலைப்பில் பலர் நல்ல கருத்துக்களை 'இடுகை' செய்துவிட்டனர். எனவே என்ன எழுதுவது என யோசித்து இதுதான் என்னால் முடிந்தது. நல்லா இல்லைன்னா (பயன் இல்லைன்னா) ஆட்டோ அனுப்பிடாதீங்க..
'சாலை பாதுகாப்பு' -- சாலையில் போகும் 'மனிதர்களுக்கு' பாதுகாப்பா? 'சாலைக்குப்' பாதுகாப்பா? முதலில் சாலை நன்றாக பாதுகாக்கப்படவேண்டும். அப்போது தான் சாலையில் செல்லும் வாகனங்கள், மக்கள் சரியான முறையில் செல்ல நேரிடும். குறிப்பாக பாரதத் திருநாட்டின் முக்கிய (மா) நகரங்களில் கூட, சாலைகள் சரியாக பராமரிக்கப் படுவதில்லை. முக்கியமாக மழைக்காலங்களில் சாலைகள் படு மோசமாக, நடக்கக் கூட லாயக்கில்லாமல் இருக்கிறது. ஒரு முறை ஜெர்மனியில், அந்த நாட்டின் நண்பருடன் நடந்தும் செல்லும் வேளையில், அங்குள்ள சாலைகளின் அமைப்பை கண்டு வியந்தேன். நம்ம ஊருல பஸ்சு, காரு, சைக்கிள் போகும்போது எத்தனை விபத்துகளை பார்க்கிறோம். ஆனால் அங்கோ, சாலையின் நடுவே ட்ராம் (traam) செல்கிறது, விபத்துக்கள் இல்லாமல். இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. அனைவரும் சாலை விதிகளை மதித்து செல்வதனை, நான் கண்ணாரக் கண்டேன்.
நான் ஆச்சர்யப் பட்ட விஷயம், சாலைகளை அவர்கள் எவ்வாறு மழைக்காலங்களிலும் வீணாகாமல் பராமரிக்க முடிகிறது. கூட வந்த நண்பரை நான் கேட்டேன்.. 'இங்கு மழை ரொம்ப பெய்யதா? சாலைகள் பழுதடயாதா?' (தமிழில் கேட்டவில்லை, ஆங்கிலத்தில் தான் கேட்டேன்). அவர் சொன்னார், ஆங்கிலத்தில் "It rains during the season, but roads do not get damaged". அது ஏன் சார் நம்ம ஊர்ல (நாட்ல) முடிய மாட்டேங்குது? எங்கப் பாத்தாலும் ஊழல் ஊழல்.. சாலை பணி ஒப்பந்தத்துல போடுற சாலை ஒரு மழைக்கு கூட தாங்க மாட்டேங்குது. நாம ஏன், அப்படிப் பட்ட சாலைகள் போடும் அல்லது சாலைகளே போடாமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள் / பணியாளர்களை, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஏதாவது செஞ்சு, சாலைகளை ஒழுங்கா பராமரிக்குமாறு செய்ய முடியாதா? நல்ல சாலைகள் இருந்தால் சில விபத்துக்கள் குறையாலாம்னு நான் நினைக்கிறேன்.'சாலை பாதுகாப்பு' -- சாலையில் போகும் 'மனிதர்களுக்கு' பாதுகாப்பா? 'சாலைக்குப்' பாதுகாப்பா? முதலில் சாலை நன்றாக பாதுகாக்கப்படவேண்டும். அப்போது தான் சாலையில் செல்லும் வாகனங்கள், மக்கள் சரியான முறையில் செல்ல நேரிடும். குறிப்பாக பாரதத் திருநாட்டின் முக்கிய (மா) நகரங்களில் கூட, சாலைகள் சரியாக பராமரிக்கப் படுவதில்லை. முக்கியமாக மழைக்காலங்களில் சாலைகள் படு மோசமாக, நடக்கக் கூட லாயக்கில்லாமல் இருக்கிறது. ஒரு முறை ஜெர்மனியில், அந்த நாட்டின் நண்பருடன் நடந்தும் செல்லும் வேளையில், அங்குள்ள சாலைகளின் அமைப்பை கண்டு வியந்தேன். நம்ம ஊருல பஸ்சு, காரு, சைக்கிள் போகும்போது எத்தனை விபத்துகளை பார்க்கிறோம். ஆனால் அங்கோ, சாலையின் நடுவே ட்ராம் (traam) செல்கிறது, விபத்துக்கள் இல்லாமல். இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. அனைவரும் சாலை விதிகளை மதித்து செல்வதனை, நான் கண்ணாரக் கண்டேன்.
நல்ல சாலைகளில் இருந்தும் கூட விபத்துகள் நடப்பது கவனக்குறைவே காரணம் இல்லீங்களா? நல்ல சாலைகளை பெறுவது நமது உரிமையாகும். நல்ல சாலைகளில் கவனமாக வாகனங்களை ஓட்டுவது, நமது கடமையாகும். இவை இரண்டும் சாலை விபத்துக்களை பெருமளவு குறைக்குமென நான் நினைக்கிறேன்.
நமக்காக (தெரிந்த/தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் தான்) கீழே ஒரு படத்தினை கொடுத்துள்ளேன். பயன் பெறுவோமென நம்புகிறேன்.
THE COMPULSORY SIGNS
There are some important and compulsory traffic signals and which are always indicated in circular form.
These are signs indicated in a triangular form. They are meant for the safety of the road user.
THE INFORMATORY SIGNS
These are signs indicates some places which are located nearby the high way, like hospital, Petrol pump etc.
ரொம்ப அறுத்துத்டேனா ? கீழே உள்ளதையும் கொஞ்சம் பொறுத்துக்குவீங்களா?
==============================================================
தார் சாலை, ரயில் பாதை என்ன ஒற்றுமை ?
ரெண்டுக்குமே ஜல்லி(சிறிய கற்கள்) தேவை.
==============================================================
ஒருவர் : ஸ்கூல் பக்கம் ரோடு போடுறவன வச்சி ஏரோப்ளேன் ரன்-வே(Run-Way) போடச் சொன்னது தப்பா போச்சு.
மற்றவர் : ஏன், என்ன ஆச்சு ?
முதலாமவர் : நடுவுல ரெண்டு மூணு, speed breaker போட்டுட்டான்யா.
===============================================================
7 Comments (கருத்துரைகள்)
:
குறிப்பாக பாரதத் திருநாட்டின் முக்கிய (மா) நகரங்களில் கூட, சாலைகள் சரியாக பராமரிக்கப் படுவதில்லை. முக்கியமாக மழைக்காலங்களில் சாலைகள் படு மோசமாக, நடக்கக் கூட லாயக்கில்லாமல் இருக்கிறது.
........... கமிஷன் கிடைக்க கட்டுனா சாலைகள் எப்படி இருக்கும்? திரும்ப திரும்ப அதே ரோடை போட வேண்டாமா?
நல்ல பதிவு.
நாம ஏன், அப்படிப் பட்ட சாலைகள் போடும் அல்லது சாலைகளே போடாமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள் / பணியாளர்களை, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஏதாவது செஞ்சு, சாலைகளை ஒழுங்கா பராமரிக்குமாறு செய்ய முடியாதா?//
அரசாங்கத்துக்கு மேல்மட்டம் முதல் கீழ் மட்டம் வரை கொடுத்த கமிஷன் போக மிச்ச காசில் இவர்களால் இவ்வளவுதான் போட முடியும் என்பது ஒருபுறமிருக்க, அடுத்தடுத்த வருஷம் பொழைப்பு ஓடணும் இல்லே...வாழ்க பாரதம்!
A very very good post. Thought provoking.
Keep it up, brother!
//முதலில் சாலை நன்றாக பாதுகாக்கப்படவேண்டும். அப்போது தான் சாலையில் செல்லும் வாகனங்கள், மக்கள் சரியான முறையில் செல்ல நேரிடும்.//
மிகச் சரியான கருத்தை அழுத்தமாக கூறியுள்ளீர்கள். இன்று நடக்கும் பல விபத்துகளுக்கு சரியான சாலைகள் இல்லாததே காரணம். மேலும் குறைந்தபட்சம் வெளியூர் செல்லும் அனைத்து சாலைகளும் இருவழி சாலைகளாக இருந்தால் பாதிக்கும் மேல் விபத்துக்கள் குறைந்துவிடும். அடுத்ததாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்ற படவேண்டும். இன்னும் பல. சொல்லிக்கொண்டே போகலாம்.
வேண்டுகோளுக்கிணங்க தொடர் பதிவிட்டமைக்கு மிக நன்றி.
பொதுவாக தொடர் பதிவில் அதற்கு முந்தய பதிவின் லின்க்கை கொடுப்பது வழக்கம்(அதனால்தான் அது தொடர் பதிவோ?). உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் எனது பதிவின் லின்க்கை கொடுக்கவும்.
நமது ஊரில் ஒரு சில சாலைகள் (முதல்வர்கள் உபயோகிக்கும் ராஜபாட்டைகள்) மட்டும் அருமையாக பராமரிக்கப்படுகிறது... உதாரணத்திற்கு பீச் ரோடு போன்ற சாலைகள் நன்றாகயிருக்கிறது.
மற்றவையெல்லாம் நீங்கள் குறிப்பிட்டது போல் ஊழலுக்கடங்கி பாழாகிறது.
நல்ல பகிர்வு
அன்புடன்
ட்ரீமர்
Dreamer said....
//உதாரணத்திற்கு பீச் ரோடு போன்ற சாலைகள் நன்றாகயிருக்கிறது.//
Do you know why Beach Road is good?
Vittu vaiththirukirukkiraargal, punnnniavaangal.....
Namadu Maanam Kappalaerividamal iruppadarrkaaga.....
Post a Comment