எனக்குப் பிடித்த 12 பெண்கள் -- தொடர் பதிவு.

'எங்கள் ப்ளாக்'ன் திறந்த அழைப்பிற்கு (open invitation) நன்றிகள். எனது கணக்கில் பன்னிருவர் வருகிறார்கள். 'டஜன்' கூட ஒரு செட் தானே ?

 1. பரமபத நாதன், பரந்தாமனின் துணையான 'ஸ்ரீ, மஹாலக்ஷ்மி'(திருமகள், அலைமகள்)
 2. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியான 'ஆண்டாள்'
 3. சிவனின் ஒரு பாதியான 'உமையவள்' (மலைமகள்)'
 4. சிவனைத் துதிபாடிய 63 நாயன்மார்களில் ஒருவரான 'காரைக்கால் அம்மையார்'
 5. கல்விக் கடவுளான 'ஸரஸ்வதி (கலைமகள்)'
 6. 'சீதை'  (இராமாயண நாயகி)
 7. 'தாரை' (இராமாயண வாலியின் துணைவி)
 8. 'தமயந்தி' (நள தமயந்தி)
 9. 'மண்டோதரி' (இராமாயண ராவணின் துணைவி)
 10. 'நளாயினி' (கணவனை கூடையில் வைத்து தலையில் சுமந்தவள்)
 11. உலகத்தினுள்ள அனைத்தையும் தாங்கும் 'பூமாதேவி'
 12. நான் பெருமையோடு விரும்பும் எனது தாய்நாட்டு அன்னை 'பாரத மாதா'
பின் குறிப்பு : 6 முதல் 10 வரை இடம் பெற்றவர்கள் 'பதிவ்ருதை - கற்புக்கரசி' ஆவார்கள். இன்றும் எங்கள் வீட்டில் உள்ள பெண்டிர் அவர்களின் பெயரைச் சொல்லி எண்ணையால் தரையில் பொட்டு வைத்து, அனைத்தையும் கோடு போட்டு சேர்த்த பின்னரே, தங்கள் தலையில் எண்ணையை தேய்த்துக் கொள்வார்கள். (before taking oilbath )

உபரிக் குறிப்பு : ஆண்கள் எண்ணை தேய்க்கும் முன் பின்வரும்  சிரஞ்சீவிக்களை (எப்போதும் இருப்பவர்கள் - eternal) நினைத்து மேற்சொன்னவாறு செய்வார்கள்.
 1. அஸ்வத்தாமா ( மகாபாரதத்தில் வருபவர் )
 2. பலி (பலி சக்கரவர்த்தி)
 3. வியாசர் (மஹாபாரதம் எழுதியவர்)
 4. அனுமான் (ஆஞ்சநேயர்)
 5. விபீஷணன் (ராவணனின் தம்பி)
 6. கிருபர் (கிருபாச்சாரியார், மஹாபாரதம்)
 7. பரசுராமர் (10 அவதாரங்களில் ஒருவர்)
'எங்கள் ப்ளாக்' திறந்த அழைப்பினை விடுத்ததால், நான் யாரையும் தொடர அழைக்கவில்லை. ஏனென்றால், பெரும்பாலும், எனது பதிவினை (வலைப்பூ) படிப்பவர்கள் யாவரும் 'எங்கள் ப்ளோக்கின்' விசிறியாக இருப்பதாகத் தெரிகிறது.

நன்றி.

9 Comments (கருத்துரைகள்)
:

அநன்யா மஹாதேவன் said... [Reply]

:-)
ரொம்ப வித்தியாசமான,இதிஹாஸ, புராண நாயகிகளை மிக அருமையாக கம்பைல் செய்து நீங்கள் கொடுத்துள்ள லிஸ்ட் என்னை மிகவும் கவர்ந்தது. எண்ணெய் தேய்த்துக்குளிக்கும் முறையை விளக்கியமைக்கு நன்றிகள்.

Chitra said... [Reply]

:-)

சாய்ராம் கோபாலன் said... [Reply]

Maddy

Brilliant one.

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

அசத்தல்.........ஆஹா.....பிரமாதம்!

DREAMER said... [Reply]

nice

ஸ்ரீராம். said... [Reply]

திறந்த அழைப்பை ஏற்று சிறந்த பதிவு தந்த மாதவன்...
அடிக்கடி ஏதாவது பதிவுகள் போடவும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

'எங்கள்' ளுக்கு சுட்டி...நன்றி.

kggouthaman said... [Reply]

மாதவன் - பட்டியல் தயார் செஞ்சுட்டீங்க. எல்லாமே புராண / இதிகாச பாத்திரங்களா போட்டுட்டீங்க. ஓ கே நடத்துங்க !!

R.Gopi said... [Reply]

மாது....

நான் பார்த்ததிலேயே ரொம்ப வித்தியாசமான வரிசை இது...

புராண / இதிகாசங்களில் இருந்து எடுத்து அழகாக தொகுக்கப்பட்ட மாலை... ரொம்ப நல்லா இருக்கு...

வாழ்த்துக்கள் தலைவா........

Madhavan said... [Reply]

//அநன்யா மஹாதேவன் said "எண்ணெய் தேய்த்துக்குளிக்கும் முறையை விளக்கியமைக்கு நன்றிகள்."// 'பதிவ்ரதை' / 'சிரஞ்சீவி' அப்படீன்னாலே எனக்கு எண்ணெய்தான் தோணும். அதனாலேயே அதைபற்றி எழுதினேன்.

//Chitra said(showed)... ":-)"// Thanks for ur smile

//சாய்ராம் கோபாலன் said "Brilliant one.", பெயர் சொல்ல விருப்பமில்லை said "அசத்தல்..ஆஹா..பிரமாதம்!
" & DREAMER said "nice" //அந்த அளவுக்கு நல்லாருக்கா ? நன்றிகள்.

//ஸ்ரீராம். said "திறந்த அழைப்பை ஏற்று சிறந்த பதிவு தந்த மாதவன்...// Thanks for appreciation.

//ஸ்ரீராம். also said "அடிக்கடி ஏதாவது பதிவுகள் போடவும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்."// அன்பிற்கு நன்றிகள். முயற்சி செய்கிறேன்.

//kggouthaman said..."மாதவன் - பட்டியல் தயார் செஞ்சுட்டீங்க. எல்லாமே புராண / இதிகாச பாத்திரங்களா போட்டுட்டீங்க. ஓ கே நடத்துங்க !!

&

R.Gopi said..."மாது.... நான் பார்த்ததிலேயே ரொம்ப வித்தியாசமான வரிசை இது..புராண / இதிகாசங்களில் இருந்து எடுத்து அழகாக தொகுக்கப்பட்ட மாலை... ரொம்ப நல்லா இருக்கு...
வாழ்த்துக்கள் தலைவா...//
-----> My thoughts are simply reflected here. Thanks

Dear all, நன்றி! மீண்டும் மீண்டும் வருக!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...