உஷாரையா உஷாரு !!

இரண்டு  தினங்களுக்கு முன் வந்த ஒரு குறுந்தகவல் (SMS)
"CONGRATS-U-HAVE-WON-7000,000-GBP-IN-2010-UK-DOMINION  PETROLEUM-INT'L-MOBILE-DRAWS-SINNING-#40,TO-CLAIM YOUR PRIZE SEND EMAIL TO MR.TERRY:terry11149@hotmail.com" send by Message Centre : 919259155008 dt. 16th May 2010, 11:08 Hrs.

எனக்கு வந்த SMSல மிகவும் சிறந்த காமெடி SMS இதுதான்னு நினைக்கறேன். பின்ன இல்லையா.. நீங்களே சொல்லுங்க.. நா பாட்டுக்கு, அரசாங்க உத்தியோகத்துல என்னால முடிஞ்ச அளவு உழைச்சு(?) சம்பாதிச்சுக்கிட்டு வர்றேன். .. என்னையப் போயி.. சோம்பேறியா நினைச்சுகிட்டு இப்படி முயற்சி செய்றாங்களே. எனக்கு தெரிஞ்சதெல்லாம், மூர் மார்க்கெட் மட்டுமே.. 'பங்கு' மார்கெட் பக்கம் கூட போனதில்ல.. மேலே என்ன நடக்கலாம்னு ஒரு யூகம்.
அந்த ஈமெயில் முகவரியில் தொடர்பு கொண்டால், அவர்கள், பணப் பட்டுவாடா செய்வதற்கு சிறிது முன்-பணம் தேவை என்றும்..  அவர்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு, அந்த முன் பணத்தை செலுத்துமாறும் சொல்லலாம். பின்னர் அவர்கள் நாம் செலுத்திய முன் பணத்தை முழுவதுமாக சாப்பிட்டு விட்டு, பெரிய ஏப்பத்தினை    நமக்குத் தரலாம்... நமக்கு ஏன் சார் வம்பு.. பேசாம இருக்குறதுதான் பெட்டர்.  இதே போன்று செய்தித் தாள்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.. நாம் படிப்பதில்லையா / பார்க்கவில்லையா..?
ஆரம்ப 80களில் எனது அக்காவும் அவருடைய நண்பியும், வாரப் பத்திரிகையில் வந்த புதிர் ஒன்றிற்கு பதில் அனுப்ப, முதல் பரிசாக ஒரு மிக்சி அறிவிக்கப்பட்டது.. ஆனால் அதற்கு ரூ 200 /- அனுப்புமாறும் சொன்னார்கள்.. பணமும் அனுப்பினார்கள் 'நண்பிகள்'. நல்ல வேளை,  பார்சலில் மிக்சியே வந்தது.. பின்னர் மற்ற பலருக்கு பார்சலில் 'செங்கல்' வந்ததாக சொல்லப்பட்டன. ரூ 200 க்கு அன்றைய தினத்தில் தங்கத்தினால் செய்த செங்கல் கூட கிடைத்திருக்கலாம்..  என்னவோ பாவம்  பலர் (சிலரோ?)  களிமண் சுட்ட செங்கலை ரூ.200 க்கு வாங்கினர்.
முதலில் ஒருசிலருக்கு பணமோ, பொருளோ இலவசமாக கிடைப்பது உண்மைதான்.. இல்லேன்னா யாரும் இந்தமாதிரி விஷயங்களா நம்பி ஏமாற மாட்டங்களே.. பின்னால போறவங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.
'குறைந்த  வட்டி', 'ஒரே வருடத்தில் இரட்டிப்பு', 'தங்கம் சேமிப்பு திட்டம்'.. அப்பப்பா.. எவ்வளவோ பாத்தாச்சு.. மக்களில் மோகத்தினால் விளையும் ஏமாற்றம்.. பின்னர் அழுது புரளுவதால் என்ன பயன்? மிகக் குறைந்த நேர காலத்தில், வியர்வை சிந்தாமல் பணம் சேர்க்கும் ஆசையில் வருவதே இந்த அவலங்கள்.
எனது அண்ணன் சொல்லும் ஒரு வசனம் ஞாபகம் வருகிறது..
"There is no short cut in life" (for everything)
---------------------------------- 

6 Comments (கருத்துரைகள்)
:

பெசொவி said... [Reply]

//எனது அண்ணன் சொல்லும் ஒரு வசனம் ஞாபகம் வருகிறது..
"There is no short cut in life" (for everything)//

Well Said!

பெசொவி said... [Reply]

Similar SMS's were received by me also. The first thing I do is to delete the message itself.

பெசொவி said... [Reply]

உண்மைதான்..... பஜார்ல உசாரா இல்லைன்னா நிஜார உருவிட்டுப் போய்டுவாங்க!

ஸ்ரீராம். said... [Reply]

கடைசி வரி அட்சர லட்சம் பெறும். எனக்கும் இது மாதிரி பல SMS கள் வந்ததுண்டு..உடனே டெலிட் தான்...!

Chitra said... [Reply]

மக்களில் மோகத்தினால் விளையும் ஏமாற்றம்.. பின்னர் அழுது புரளுவதால் என்ன பயன்? மிகக் குறைந்த நேர காலத்தில், வியர்வை சிந்தாமல் பணம் சேர்க்கும் ஆசையில் வருவதே இந்த அவலங்கள்.


......rightly said. .... so true.

cho visiri said... [Reply]

This is popularly known as "Nigerian Fraud".

One can get more information by typing the afore mentioned term and use any search engine in the Net.

For those who are uninitiated on the subject, suffice it to say that a few persons paid with their lives (on foreign soil) after losing lakhs of Rupees in this regard.
If any friend still wants more information, I may post a few live cases in this Blog.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...