பிடித்த 'பத்து'(10 , Ten ) படங்கள் ' - தொடர் பதிவு

 சகோதரி  அநன்யா அவர்கள் ஒரு தொடர் பதிவிற்கு பொதுவான அழைப்பு விடுத்திருந்தார். அதன் படி, எனக்குப் பிடித்த 'பத்து'(10 , Ten ) படங்களை கீழே தந்துள்ளேன். நான் செய்ய நினைத்த காமெடி இங்கு இருக்கிறது.. தொடர் பதிவாக. இப்போது இந்த பதிவு உண்மையிலேயே சீரியஸ் என்று உறுதியளிக்கிறேன்.

எனக்கு காமெடி படம்தான் ரொம்ப பிடிக்கும். ஆமாங்க. வாழ்க்கையில பல விதமான கஷ்டங்களையும், சண்டை சச்சரவு, வன்முறை, தீவிரவாதம் (violence )  எல்லாத்தையும் அன்றாடம் டிவிலயும் , பேப்பர்லயும்  பாக்குறோம். அந்த வகையில காமடி படம் தான் நல்ல பொழுது போக்கு அல்லவா ?
இப்போதைக்கு  ஒரு 10 படங்களை சொல்லுகிறேன்.. இந்த 10 படங்கள் தான் எனக்கு பிடிக்கும் என நினைக்கவேண்டாம்.
  1. காதலிக்க நேரமில்லை (அந்த காலத்திலேயே  இப்படி ஒரு காமெடி படம்.. நல்ல சிந்தனை, திரைக்கதை..)
  2. தில்லுமுல்லு (ரஜினியின் கலாட்டா   -- இந்திரன், சந்திரன்.. செம சூப்பர்பா..)
  3. மைக்கேல் மதன காமராஜன் (3 - 4 முறை பார்த்த பின்னர்தான் குழப்பம் தீர்ந்தது..  அப்படி ஒரு சிக்கலான காமெடி -- கிரேசி.. )
  4. உள்ளத்தை அள்ளித்தா (ஹா ஹா ஹா.. ரெண்டு நாளைக்குமுன் டிவில  மீண்டும் ஒருமுறை பார்த்தேன்.  ரசித்து பார்க்கத்தூண்டும் படம்).
  5. காதலா காதலா (அல்லா பெரும்[எல்லோரும்], நல்லா பண்ணியிருப்பாங்க. அப்படி ஒரு டீம் வொர்க். முக்கியமா கிரேசி மோகன் வசனங்கள் )
  6. பஞ்சதந்திரம் (ஒவ்வொரு வசனமும் சிரிக்க வைக்கும்..  உதா :'முன்னாடி', 'பின்னாடி', 'கண்ணாடி' etc ..... சான்சே இல்லை.. கிரேசி மோகனால்தான் இது முடியும்)
  7. தெனாலி (நல்லா சிரிக்க வைக்கும்..  மறுபடியும்..  கிரேசி மோகனால்தான் இது கூட)
  8. ஜோடிநம்பர்-1 (ஹிந்தி  -- கோவிந்தா படத்துல காமெடிக்குப் பஞ்சம் இல்லீங்கோ.. லாஜிக்க மட்டும் எதிர்பாக்கக் கூடாது.)
  9. ஹேராபேரி   (ஹிந்தி - பரேஷ் ராவல், சுனில் ஷெட்டி, அக்ஷைகுமார்  -- 'காமெடி trio'. தமிழில் வந்த 'அரங்கேற்ற வேலை'  தழுவல்.)
  10.  முஹம்மது பின் துக்ளக் -- (காலத்தின் கோலத்தை, 'சோ. ராமசாமி' பல வருடங்களுக்கு முன்னரே துல்லியமாக சொல்லிய, சிரிப்பூட்டும் படம்)

மேலும் தொடர, இவர்களை அழைக்கிறேன், விருப்பமிருந்தால் இடுகை இடவும்.
  1. தீராத விளையாட்டு பிள்ளை (RVS).
  2. பெயர் சொல்ல விருப்பமில்லை
  3.  சாய்ராம் கோபாலன்
  4.  _______________  (அட நீங்க  தான்  .. ரெடி ஜூட்..)

    7 Comments (கருத்துரைகள்)
    :

    Chitra said... [Reply]

    "Crazy" Mohan ........ :-)
    Good comedy movies.

    Ananya Mahadevan said... [Reply]

    super selection!
    unga list la crazy kamal combo ennikkume en favourites list thaan. ethana vaatti pottaalum paarpen. :))

    Madhavan Srinivasagopalan said... [Reply]

    thanks chitra & ananya..

    ஹா.. ஹா.. நேற்றிரவு 8 :00 மணி ஷோ 'பஞ்ச தந்திரம்' K-TV ல போட்டாங்க.. பாத்து ரசிச்சேன்....
    -------------------
    சந்தானம் : இவன என்ன செய்யுறது..?
    சிம்ரம் : அடிச்சு தொரத்துங்க..
    சந்தானம் : அமாம் அதான் சரி.. தொரத்துனதுக்கு அப்புறம் அடிக்க முடியாது..
    -------------------
    கமலும், ரம்யா கிருஷ்ணனும் ஒன்றாக கட்டப்பட்டிருப்பது கண்டு, கமலிடம்
    சிம்ரன் : இவ்ளோ பேருக்கு நேர.. சீ.. அசிங்கமா இல்லை.. ரெண்டுபேரும் கட்டிண்டு இருக்கீங்களே..
    கமல் : (ஒரு அடியாளை காட்டி) அவன்தான் கட்டினது.. அவனக் கேளு..
    சிம்ரன் : கட்டினவனுக்கு முன்னாடியே இப்படி செய்யுறீங்களே..
    (அந்த அடியாளை பார்த்து..) நீதான் கட்டினதா.. உனக்கு வெக்கமா இல்லை..?
    அடியாள் : எதுக்கும்மா வெக்கப் படனும்.. பாஸ் கட்டச்சொன்னாரு.. கட்டினேன்..
    உன்னையும் கட்டச்சொன்னா, கட்டுவேன்..
    ------------------------------------

    CS. Mohan Kumar said... [Reply]

    Mostly comedy films; it seems you like comedy films very much.

    அப்பாதுரை said... [Reply]

    கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் காபி அடித்து க்ரெடிட் சேர்த்திருக்கும் கமல் கிரேசி கூட்டம் தலை குனிய வைக்கிறது; தெனாலி, மைக்கேல், பஞ்சதரித்திரம்.... எல்லாம் இங்க்லிஷ் படங்கள். ஒரு courtesyக்காகவாவது தழுவல்னு சொல்லியிருக்கலாம் - அசிங்கம். க்ரேசி ஒண்ணாம் நம்பர் ஐடியா திருடன். very sad.

    Madhavan Srinivasagopalan said... [Reply]

    அப்பாதுரை..உங்கள் கருத்துகளுக்கு நன்றி...

    காபி அடித்திருந்தாலும்.. தமாஷான வசனங்களுக்காகவே, நான் கிரேசி மோகனை பற்றி எழுதினேன். மற்றபடி, கமலின் பெரும்பால படங்கள், காபி அடிக்கப்பட்டவை என்பவை நன்கு தெரிந்தவையே.

    CS. Mohan Kumar said... [Reply]

    இவற்றில் சில எனக்கும் பிடித்தவை தான்

    தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

    Post a Comment

    மறுமொழிப்பெட்டி:
    தமிழிலும் மறுமொழியிடலாம்
    Loading...