கமெண்டு மாஸ்டர்..

உங்களுக்கு தினமலர் பத்திரிக்கை டவுட் தனபாலு தெரிஞ்சிருக்கலாம்.. அவரோட கமெண்ட்ட நீங்க, படிச்சிருக்கலாம், அந்த பாணியில் இங்கே என்னோட கமெண்ட்டுகள். ( இங்கிட்டு டவுட்டு தனபாலு....   நான்தானுங்கோ..  )

+++++++++++++++++++++++++

// அதிக விலைக்கு டாஸ்மாக் சரக்கு விற்ற 2 பேர் கைது //

விற்பனையை அதிகமாக்கி லாபத்தை பெருக்கணும்னு  சொன்னத தப்பாப் புரிஞ்சிகிட்டான்களோ என்னவோ ?
-------------------------------------------------------------------------------------------------
// எதிர்கட்சி்கள் அமளி:பார்லி., முடங்கியது //

ஹி.. ஹி.. கும்மியோ கும்மி... எங்கேயும்.. எதிலேயும்..
-------------------------------------------------------------------------------------------------
// தங்கம் விலை சற்று அதிகரிப்பு //

ரெண்டு பைசா ஏறி இருக்குமோ ?
-------------------------------------------------------------------------------------------------
// கள்ளத்தொடர்பு : பாக்., பெண்ணின் மூக்கு அறுப்பு //

அதே இலங்கை பெண்ணா இருந்தா ஆரம்பத்துலேயே அன்னிக்கு கோடு போட்ட 'தம்பி' நடத்தி இருப்பாரு..
-------------------------------------------------------------------------------------------------
 //சி.பி.ஐ., புதிய இயக்குநராக ஏ.பி.சிங் நியமனம் //

அப்படியே, ஹீரோ, ஹீரோயின், வசனகர்த்தா யாராரு.... படம் எப்ப ரிலீசாகும்னு சொன்னாக் கூட நல்லாத்தான் இருக்கும்..
-------------------------------------------------------------------------------------------------
// மதுரையில் சரக்கு அனுப்புவது திடீர் நிறுத்தம்  //

'டாஸ்மாக்க'  அங்கிட்டு அனுப்புவத நிறுத்திட்டாங்களா ?
-------------------------------------------------------------------------------------------------
// சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை //

புவியீர்ப்பு சக்திய கண்டு பிடிக்கலேன்னா இப்படி நடந்திருக்காதோ ?
 -------------------------------------------------------------------------------------------------
// மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள் //

ஆயுள் : அப்பனுக்கு ஸ்ட்ராங்கு....  மகனுக்கு கம்மி .....
  -------------------------------------------------------------------------------------------------
// பதவி விலகுகிறார் ஊழல் கண்காணிப்பு கமிஷனர்  //

யாரோ அவர 'கண்காணிச்சத', அவரு சரியா 'கண்காணிக்கல' போலருக்கு.....
 -------------------------------------------------------------------------------------------------
// ஜப்பானில் நிலநடுக்கம் //

அங்கிட்டு அந்தளவுக்கு குளிருதோ, நிலமே நடுங்குதாமே? 
-------------------------------------------------------------------------------------------------

டிஸ்கி : செய்தி தினமலர் -- கமெண்ட்டு மாதவன்....

30 Comments (கருத்துரைகள்)
:

எஸ்.கே said... [Reply]

என்ன இது சரியா புரியலையே!

எஸ்.கே said... [Reply]

பங்கு சந்தையில் ஏதாவது பிரச்சினையா?

Unknown said... [Reply]

சி.பி.ஐ., புதிய இயக்குநராக ஏ.பி.சிங் நியமனம்

அப்படியே, ஹீரோ, ஹீரோயின், வசனகர்த்தா யாராரு.... படம் எப்ப ரிலீசாகும்னு சொன்னாக் கூட நல்லாத்தான் இருக்கும்..//

இதுதான் என்னான்னு புரியல.

CS. Mohan Kumar said... [Reply]

Pathivunnu irunthaa athukku thalaippu irukkanum Madhavan. Engae thalaippu?

Arun Prasath said... [Reply]

ஆமா தலைப்பு எங்க அய்யா

Anonymous said... [Reply]

தலைப்பு எங்க பாஸ்?!

Anonymous said... [Reply]

//அங்கிட்டு அந்தளவுக்கு குளிருதோ, நிலமே நடுங்குதாமே //
சூப்பர் :)

NaSo said... [Reply]

கும்மில நல்லா ஐக்கியமாகிட்டீங்களா?

NaSo said... [Reply]

8 கமெண்ட்ஸ் இருக்கு. ஆனா ஓட்டு 4, 1 தான் இருக்கு என்னான்னு பாருங்க.

Madhavan Srinivasagopalan said... [Reply]

பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போதே தவறுதலாக, 'என்டர்' பட்டனை தட்டிவிட்டேன்.. பதிவு பாஞ்சு ஒங்க கிட்ட வந்துடிச்சு..

அப்புறமா எல்லாத்தையும் சரியா (!) தலைப்போட எழுதிட்டு இப்ப திரும்ப போட்டேன்...

புரியுதா பாருங்க, நண்பர்களே.. (எஸ்.கே., இனியவன், மோகன், அருண், சரவணன்.)

பாசக் காரப் பசங்க.. என்கிட்டேருந்து ஏதாவது மேஜெசுனா பாஞ்ஜோடி வந்துடுறாங்க..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@நாகராஜசோழன் MA

இங்கிட்டு வாக்கு (கமெண்டு) கொடுத்துட்டு..
ஓட்ட அங்கிட்டு வேற யாருக்காவது போட்டுடராங்களோ ?
ஏதோ சதி நடக்குது.... வாங்க.. ஆர்ப்பாட்டம் பண்ணுவோம்.... ஒங்களத்தான் எம்.எல்.ஏ சார்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

//டிஸ்கி : நன்றி தினமலர்.//

இதுக்கு நான் தினமலரையே படிப்பேனே. எதுக்கு உங்க பிளாக் வரணும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

சரி இதில் நீர் குதற ச்சீ கூற வந்த கருத்து என்னவோ?

Arun said... [Reply]

//ஆயுள் : அப்பனுக்கு ஸ்ட்ராங்கு.... மகனுக்கு கம்மி .....//
நல்ல comment. ஹி ஹி

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

போயி படி.. நானா வேனாங்குறேன்..

ஆனா.. அங்கிட்டு.. என்னோட 'கமெண்டு' இருக்காது..
முக்கியமா இந்த டிஸ்கியும் இருக்காது.. ஜாக்குரத்தை.. சொல்லிப்புட்டேன்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Arun

Thanks Arun.

செல்வா said... [Reply]

//ரெண்டு பைசா ஏறி இருக்குமோ ?//

உங்க ஊர்ல இரண்டு பைசா ஏறினா கூட செய்தில சொல்லுவாங்களா அண்ணா ..?

செல்வா said... [Reply]

//புவியீர்ப்பு சக்திய கண்டு பிடிக்கலேன்னா இப்படி நடந்திருக்காதோ ?//

இந்தக் கண்டுபிடிப்பு நல்லா இருக்கு ..!!

செல்வா said... [Reply]

//ஆயுள் : அப்பனுக்கு ஸ்ட்ராங்கு.... மகனுக்கு கம்மி ...../

அட அட ., என்ன ஒரு தத்துவம் ..!!

எஸ்.கே said... [Reply]

// சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை //

புவியீர்ப்பு சக்திய கண்டு பிடிக்கலேன்னா இப்படி நடந்திருக்காதோ ?

super! now i am clear!

செல்வா said... [Reply]

//அங்கிட்டு அந்தளவுக்கு குளிருதோ, நிலமே நடுங்குதாமே? ------------------------------------------------------------------------------------------------- //

எப்படி அண்ணா உங்களால மட்டும் இப்படியெல்லாம் ..!!

அருண் பிரசாத் said... [Reply]

ஓவரா பிளாக் படிக்கறீங்களோ... பார்த்து உங்க மனைவி திட்டுறதுக்கும் கமெண்ட் போட்டுட போறீங்க

பெசொவி said... [Reply]

@Madhavan Srinivasagopalan

very nice reply
I like it!

இம்சைஅரசன் பாபு.. said... [Reply]

நான் காலைல தான் தினமலர் பேப்பர் படிச்சேன் .......திரும்பவும் .........ஐயோ சாகடிகிரான்களே ..........முடியலே

Madhavan Srinivasagopalan said... [Reply]

@இம்சைஅரசன் பாபு..

என்னாது.. என்னோட கமெண்டையும் சேத்து போட்ருக்காங்களா தினமலருல..?

ஸ்ரீராம். said... [Reply]

இயக்குனர், கதாநாயகன் கமெண்ட் ரசித்தேன்.

Chitra said... [Reply]

// ஜப்பானில் நிலநடுக்கம் //

அங்கிட்டு அந்தளவுக்கு குளிருதோ, நிலமே நடுங்குதாமே?

....அவ்வ்வ்வ்..... ஓவரா தெரியல...

பெசொவி said... [Reply]

எல்லாமே அருமை, ஏது, ரொம்ப யோசிக்கறாப்ல இருக்கு, அப்ப இந்த வார தமிழ் மணம் லிஸ்ட்ல வரா மாதிரி தெரியுது!
:)

ஹரிஸ் Harish said... [Reply]

நல்லாருக்கு பாஸ்..
நிலநடுக்கம் தான் டாப்,,

வெங்கட் said... [Reply]

எல்லாமே நல்லா இருக்கு..

அதுலயும் இது

// அதிக விலைக்கு டாஸ்மாக் சரக்கு விற்ற 2 பேர் கைது //

விற்பனையை அதிகமாக்கி லாபத்தை பெருக்கணும்னு சொன்னத தப்பாப் புரிஞ்சிகிட்டான்களோ என்னவோ ? //

சூப்பரோ சூப்பர்..!!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...