நினைத்தேன் எழுதினேன்

பெட்ரோல் : 
எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் / டீசல் விலைகளை நிர்ணயம் செய்துகொள்ளலாம்னு சொன்னதுக்கப்புறம் கடந்த அஞ்சாறு மாசமா, பெட்ரோல் விலை ஏறுகிறதே தவிர இறங்கவே இல்லை. சுமார் 8 வருடங்களுக்கு முன், எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்தபோது, உலக எண்ணெய் வர்த்தக விலைப்படி, பெட்ரோல் விலை ஏறியும், இறங்கியும் வந்தது நினைவில் வருகிறது. எனது டூ வீலர் ரிசர்வில் இருந்தாலும், இரவு செய்தி பார்த்து.. ஒரு வேளை பெட்ரோல் விலை இறங்கினால், மறுநாள் சென்று பெட்ரோல் வாங்கியதும் நினைவில் வருகிறது. ஆனால் தற்போது, செய்தி பார்த்து உடனே சென்று பெட்ரோல் வாங்கவேண்டிய நிலையில் இன்றும் பெட்ரோல் வாங்கி (ரிசர்வே வரவில்லை என்றாலும்) நிரப்பி வந்தேன்.

அதாவது பரவாயில்லை.. பெட்ரோல் போடுவதற்கு ஒருவர் பணம் வாங்குவார்.. அவர் எத்துனை பணம் நான் கொடுத்தேன் எனச் சொல்வதை கேட்டு (கண்ணால் பார்த்தும்) மற்ற நபர் நமது வண்டி டாங்க்கில் பெட்ரோல் நிரப்புவார். நான் கொடுத்த பணம் ரூ .500   பெட்ரோல் கேட்டதோ ரூ.200 க்கு. பணம் வாங்கிய நபர் மற்றவரிடம் இருநூறு ரூபாய்க்கு போடு எனச் சொன்னது எனது காதில் நன்றாக விழுந்தது.. நானும் அந்த நபரிடம் "இருநூறு ரூபாய்க்கு", எனச் சொன்னேன். அது அந்த நபருக்கு காதில் தெளிவாக விழுந்தாலும், நான் 500 ரூபாய் தாள் கொடுத்து மீதம் மூன்று நூறு ரூபாய் பெறுவதைப் பார்த்தும், பெட்ரோல் போடுவதை இரண்டு லிட்டருடன் நிறுத்தி விட்டார்.

நான் அவரிடம் அது பற்றி கேட்டபோது, "நீங்கள் இரண்டு லிட்டர் கேட்டதாக நினைத்துவிட்டேன்'" என்றார். மீதி சில்லறை கேட்டு வாங்கவும் என்பதைப் போல , மீதி பெட்ரோலையும் கேட்டு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டேன். நான் சரியாகக் கவனிக்காவிடில், விலை ஏற்றத்திருக்கு  முன்னர் வாங்கினால், மூன்று லிட்டருக்கு ரூபாய் 15 மிச்சமாகுமென நினைத்த நான், 1.13  லிட்டருக்கான  பணம் ரூபாய் 72 ஏமாந்திருப்பேன்.

பெட்ரோல் விலையில் நாம் அதிக வரிகள் செளுத்துகிரோமென கீழ்க் கண்ட படம் சொல்கிறது (பழைய படம்.. பழைய விலை  -- உதாரணத்திற்காகவே  ) . பெற்றோலை எண்ணெய் நிறுவனங்கள் வாங்கி அதற்கான விலையுடன் விற்பனை வரி அல்லது 'வாட்' வரி மட்டுமே இருந்தால் போதாதா ? எதற்காக சுங்க மற்றும் கலால் வரிகளும் விதிக்கப் படுகிறது ? மக்கள் நலன் கருதி வரிகளை குறைக்க முடியாதா ? (டவுட்டு) 
சட்டசபை தேர்தல் 2011 :
நேற்று தேர்தல் முடிவுகள் பார்த்தே பொழுது போய்விட்டது. மின்னணு வாக்கு வந்தபின்னும், என்ன காரணத்தினால் மாலை வரை அனைத்து முடிவிற்கும் காத்திருக்கவேண்டியதாயிற்று எனத் தெரியவில்லை. தமிழக முடிவிற்கு மட்டுமே இப்படி. மற்ற மாநிங்களுக்கான முடிவு மதியத்திற்குள் வந்து விட்டது.
எனக்குத் தெரிந்தவரை, எங்கள் ஊரில் வெற்றி பெரும் கட்சியின் அல்லது அந்த கட்சி ஆதரிக்கும் கட்சியின் ஆட்சியே இதுவரை இருந்து வந்தது.. (கண்டிப்பாக 1984 க்குப் பின்னர் ). இந்தமுறை, அந்த நிலை இல்லை. 'உலகில் நிலையானது எதுவுமே இல்லை' -- இதெல்லாம் எம்மாத்திரம். 
==================================

8 Comments (கருத்துரைகள்)
:

மதுரை சரவணன் said... [Reply]

எங்கும் எச்சரிக்கையுடன் செயல் படுவதே நல்லது.. பகிர்வுக்கு நன்றீ.

RVS said... [Reply]

பெட்ரோலையும் தேர்தலையும் சேர்த்து விஷயம் சொல்லியாயிற்று. பத்திக்கிச்சு.. ;-)))

Lakshmi said... [Reply]

இந்தபெட்ரோல் விலை உயர்வு ரொம்பத்தான் படுத்துது.
செயின் தொடராக கேஸ்,கெரசினும் காய்கறி விலையும்கூடஏறி பொதுமக்களுக்கு கஷ்டங்களைக்கொடுக்கிரது. இதற்கெல்லாம் என்னதான் தீர்வோ?
??

பெசொவி said... [Reply]

//விலை ஏற்றத்திருக்கு முன்னர் வாங்கினால், மூன்று லிட்டருக்கு ரூபாய் 15 மிச்சமாகுமென நினைத்த நான், 1.13 லிட்டருக்கான பணம் ரூபாய் 72 ஏமாந்திருப்பேன்.
//

கொஞ்சம் அசந்தா நம்மளை ஏமாத்தற திறமை பெட்ரோல் போடற எல்லாருக்குமே உண்டு. நாமதான் சூதானமா இருக்கோணும்!

A.R.RAJAGOPALAN said... [Reply]

காலதிர்க்கேற்ற பதிவு
நானும் அப்படிதான் நினைதிருதேன் மாதவன் இந்த முறை நம்ம ஊர் ராசி மாறிடிச்சி

ஸ்ரீராம். said... [Reply]

ஏறும் எந்த விலையும் இறங்குவதில்லை என்பது உண்மைதான். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால் போச்சு...!

சாய் said... [Reply]

உலக அரங்கில் கச்சா எண்ணையின் வேலை ஏறும்போது இந்தியாவிலும் ஏறி தானே ஆகவேண்டும் !!

இந்தியாவில் பெட்ரோல் பங்கில் ஒரே அடியாக ஆட்கள் இருக்கும்போது இப்படி ஏமாற்ற நினைப்பது நம் புத்தியில் ஊறிய விஷயம். என்னை கேட்டால் கிரெடிட் கார்டில் மொத்த டாங்கும் நிரப்புவது நல்லது.

போளூர் தயாநிதி said... [Reply]

காலதிர்க்கேற்ற பதிவுஇதற்கெல்லாம் என்னதான் தீர்வோ?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...