டவுட்டு..... (தமாசுக்குதான்)

எனது திருமணத்தின் போது, எனது சட்டத்தினுள் சகோதரர் (ப்ரதர்-இன்-லா) , ஒரு ஜோடி கைகடிகாரங்களை அளித்தார். அதனுள் இருந்த இரண்டு கைகடிகாரங்களில் ஒன்று பெரியது(big size - ஆண் அணிவது), மற்றது சிறியது (smaal size - பெண் அணிவது).
டவுட்டு  1 : அது ஏன் பெண் அணியும் கைகடிகாரங்கள் சிறியதாக இருக்கிறது ?
டவுட்டு  2 : எதற்கு சிறிய கடிகாரத்தில் 'தேதி' காண்பிக்கும் வசதி இல்லை (பெரிய கடிகாரத்தில் அந்த வசதி உள்ளது-  ஆணாதிக்கமோ )  ?  உண்மையில் இந்த டவுட்டு என்னோட மனைவி கேட்டது.
டவுட்டு 3 : கைக்கடிகாரத்திலும் ஆண், பெண் என வெவ்வேறு இருப்பது ஏன் ?
டவுட்டு 4 : சைக்கிளில் கூட ஆண், பெண் பாகுபாடு இருக்கிறது. இந்தக் காலத்தில் பெண்கள் பெரும்பாலோனோர் சுடிதார் அணிவதால் இந்தப் பாகுபாடு இனியும் தேவையா ?

ரெண்டாவது டவுட்டிற்கு, நான், எனது மனைவியிடம், "பெண்களுக்கு ஞாபக சக்தி அதிகம்.. தேதியை, கடிகாரம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அவர்கள் இல்லை", என்று சொல்லி சமாளித்தேன் (!).

சாவிகளில் கூட ஆண் சாவி, பெண் சாவி என இருவகை உண்டு, தெரியுமா, நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ?  (உண்மையில் அப்படி உள்ளது.. male pin, femal pin என்பதைப் போன்று)

கடிகள் :
டைப்ரைட்டர் ஆனா பெண்ணா ?  விடை : ஆண்  -- காரணம் : அதில் ரிப்பன் கட்டப் பட்டுள்ளதே..!

எழுதுகோல் ஆனா பெண்ணா ?   விடை : அது ஒரு pen . (சரிதான...?)

தகவல் : (உங்களுக்கு தெரியாது பாருங்க.. அதான் சொல்லுறேன்)

ஆங்கிலம், தமிழ், சமஸ்க்ரிதம் போன்ற மொழிகளில் எந்த ஒரு பொருளும், 'ஆண்', 'பெண்', 'போது(அஃ றினை)' என மூன்று வகை 'பால்'(gender )  உண்டு.

ஆனால் ஹிந்தியில் 'ஆண்' அல்லது 'பெண்' என இரு வகை மட்டுமே.
பொதுவாக 'இ' எனும் ஒலியில் முடிபவை பெண்பாலாகவும், (விதிவிலக்கு : பாணி - நீர் -- இது ஆண் பாலாகும்)
மற்றவை 'ஆண்' பாலாகவும் இருக்கும் (விதிவிலக்கு - ஹவா - காற்று -- பெண்பாலாகும்)

டிஸ்கி : இந்தப் பதிவு கணக்குல வருமா ? (சும்மா, எப்படியோ தேத்துனது..)
------------------------------------------------

14 Comments (கருத்துரைகள்)
:

middleclassmadhavi said... [Reply]

//டைப்ரைட்டர் ஆனா பெண்ணா ? விடை : ஆண் -- காரணம் : அதில் ரிப்பன் கட்டப் பட்டுள்ளதே..!// ??
பெண்கள் கை சின்னது என்பதால் சின்ன வாட்சாக இருக்கலாம்! (என் சின்ன வாட்சிலும் தேதியும் நாளும் இருக்கு!)
இப்போதைய புது மாடல் சைக்கிள்களில் எல்லாம் ஒரே மாதிரி தான்!!

மங்குனி அமைச்சர் said... [Reply]

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் mudiyala ........... இங்க என்ன பிரச்சனை ???

கோமாளி செல்வா said... [Reply]

//பாணி - நீர் -- இது ஆண் பாலாகும்)/

இது ஆண் பாலா ? தண்ணி எப்ப ஆண் ஆச்சு அண்ணா ?

A.R.ராஜகோபாலன் said... [Reply]

நல்ல கருத்துக்களை கொண்ட பதிவு
ஆனால் இங்கு நாம் நீரை பெண்ணாக அல்லவா வழிபடுகிறோம்

RVS said... [Reply]

கேள்வி எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு... கொஞ்சம் ஈசியா கேளுப்பா.... ;-))

Madhavan Srinivasagopalan said... [Reply]

@middleclassmadhavi said "இப்போதைய புது மாடல் சைக்கிள்களில் எல்லாம் ஒரே மாதிரி தான்!! " //

hmm.. சரிதான்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மங்குனி அமைச்சர்

கொஞ்சம் நிதி பிராப்ளம்..
முடிஞ்சா ஒரு பத்து லட்ச ரூபாய் தந்து என்னோட பிரச்சனைய தீர்த்துடுங்க.. (திரும்பலாம் கேக்கப்படாது..)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கோமாளி செல்வா

'பால்', 'தண்ணி' கலப்பட கேசு.. (புரியுதா ?)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@A.R.ராஜகோபாலன்

'பாணி' என்பது ஆண்பால், ஹிந்தியில்.. அம்புட்டுதான்.. தெரியும் எனக்கு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@RVS

ஈசியான கேள்வியா..?
இந்த சண்டே ஆஃப்ட்டர்நூன் ஃ ப்ரீயா?
.., நான் ஆதம்பாக்கத்துல இருப்பேன்.. சண்டே மார்னிங்.. ,
மீட் பண்ணலாமா ?

ஸ்ரீராம். said... [Reply]

பாலில்தான் எப்போதும் பானி என்று பிரச்னை வரும்! இங்கு உல்டாவா இருக்கே! உல்டா ஆண்பாலா பெண்பாலா?

வெங்கட் நாகராஜ் said... [Reply]

பொதுவாக ”இ” என்று முடியும் வார்த்தைகள் பெண்பால். பாணி அல்ல அது பானி!

மேஜை என்பது ஆண்பால் ஆனால் உட்காரும் நாற்காலி பெண்பால்...

ரொம்ப சங்கடமான விஷயம் பேசும்போது இந்தக் குழப்பம் வந்துவிட்டால்... திக்கித் திக்கி... ஒரு வழியாகிவிடும்...

இப்போது பெண்களெல்லாம் கூட பெரிய வாட்ச் தான் கட்டுகிறார்கள்...

மோகன் குமார் said... [Reply]

//சட்டத்தினுள் சகோதரர் (ப்ரதர்-இன்-லா)//

:)))

DREAMER said... [Reply]

என்னங்க, இப்படி ஒரு ஆராய்ச்சி...
அந்த வாட்ச் மேட்டருக்கு என்னோட கோணத்தில் பதில் சொல்லணும்னா, நாம பெண்களோட பேசும்போது காலநேரம் தெரியாம பேசிட்டிருப்போம், அது ரெண்டையும் தெரிஞ்சிக்கத்தான் ஆண்கள் வாட்ச் தேதியோட வருது. சில வாட்சுல North, East, West, Southனு டைரக்ஷன் கூட காட்டும் இல்லன்னா, பெண்கள் கூட இருக்கும்போது திக்கு தெரியாம பூடும்.

-
DREAMER

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...