பழமொழி - தமிழ்
ப்ராவர்ப் - ஆங்கிலம்
கஹாவத் - ஹிந்தி
இது பெரும்பாலும் எல்லா மொழிகளிலுமே இருக்குறதா தெரியுது..
எனக்குத் தெரிந்த தமிழ் - சில பழமொழிகளை ( சொல்லும் வழக்கு) வைத்து கீழ்வருவன அமைந்துள்ளது.. ஒவ்வொன்றிலும் இரு பழமொழிகள் புதைந்துள்ளது.. முடிந்தால் கண்டுபிடியுங்கள்..
- சுத்தமா இருக்குற ஆள், பொய் சொன்னா அவருக்கு பாதிப்பு வருமா ? வராது.. எப்படி ?
- மறக்குறதா.. இல்லை தொடர்ந்து முயற்சி செய்யுறதா ஒரே குழப்பமா இருக்கு இப்படி சொல்லிட்டாங்களே !!
- இருக்குற பணத்துல ஏதாவது ஒரு வேலைய செய்ய ட்ரை பண்ணலாம்.. இப்படி சொல்லிப் புட்டாங்களே.. ரெண்டையும் ஒரே நேரத்துல செய்ய முடியுமா...?
- அட இப்படியில்ல சொல்லணும்.. இதைத்தான் எல்லாரும் செய்ய விரும்புவாங்க.... 'சாப்பிட ரெடி'...
சரி.. சமீபத்துல நான் ரசிச்ச ஒரு பட ஜோக்கு... இதோ
இப்ப மேல கேட்கப்பட்ட கேள்விகளுக்கு..
- சுத்தம் சோறுபோடும் -- பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.
- நீதி : பொய் சொல்லு.. ஆனா சுத்தமா சொல்லு.. சோறு கிடைச்சுடும்.. :
- கிட்டாதாயின் வெட்டென மற -- முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
- நீதி : ஹி.. ஹி.. இந்த மாதிரிலாம் எழுதினா பிரபலம் ஆக முடியாது.. ஆனா முயற்சி இருந்தா முடியாதா என்ன ?
- கல்யாணம் பண்ணிப்பார் -- வீட்டை கட்டிப் பார்.
- நீதி : கந்து வட்டி அல்லது பாங்க் லோன் .. ம்ம் பாப்போம்..
- பந்திக்கு முந்து --- படைக்குப் பிந்து..
- நீதி : சாமி.. சோறு.. சோறு.. ஐ.. நாந்தான் பர்ஸ்டு! .. -- என்னது எல்லாரும் கெளம்பிட்டாங்களா(சண்டைக்கு) .. இதோ நானு பின்னாலேயே வாரேன்..
==========================================
24 Comments (கருத்துரைகள்)
:
என்னமோ சொல்லிருக்காங்க .. ஆனா கொஞ்சம் கொயப்பமா இருக்கு :-)
@கோமாளி செல்வா
ஆஹா சக்சஸ்.. சக்சஸ்..
வித்தியாசமான பதிவு மாதவன்
அழகு
சே நீங்களே வடைய..சே விடைய போட்டுக்கிட்டீங்கன்னா நாங்க என்னதான் பண்றது?
/////Madhavan Srinivasagopalan said... [Reply] 2
@கோமாளி செல்வா
ஆஹா சக்சஸ்.. சக்சஸ்..//////
என்னா ஒரு வில்லத்தனம்?
சீ...சீ...இந்த பழம் புளிக்கும்.... ஹி ஹி ஹி விடை கண்டுபிடிக்க முடியலை.... நல்லவேளை நீங்களே சொல்லிட்டீங்க
Find "X"! நல்ல ஜோக்....
பழமொழிகளை விட நீங்கள் அளித்திருக்கும் நீதி நன்றாக இருக்கிறது....
@A.R.ராஜகோபாலன்
தங்கள் வருகைக்கும் மேலான கருத்திற்கும் நன்றி..
@பன்னிக்குட்டி ராம்சாமி
//சே நீங்களே வடைய..சே விடைய போட்டுக்கிட்டீங்கன்னா நாங்க என்னதான் பண்றது?//
விடை கொடுத்தாலும்.. கொடுக்காவிட்டாலும்.. கும்மி அடிப்பதுதான் நமது மரபு..
மியூசிக் ஸ்டார்ட் ஆகலையா ?
@பன்னிக்குட்டி ராம்சாமி
//என்னா ஒரு வில்லத்தனம்? //
ம்.. எனக்கு வில்லன் கேரக்டர்தான் நல்லா வரும்னு சொன்னா நம்பாம.. என்னையப் போயி ஹீரோ வா நடிக்க கம்பெல் பண்ணுறானுக சில ப்ரோடியூசருங்க.. .
@அருண் பிரசாத்
உங்க நேர்மை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு..
@வெங்கட் நாகராஜ்
தங்கள் பாராட்டிற்கு.. நன்றி வெங்கட் நாகராஜ்..
நல்லவேளை நீங்களே சொல்லிட்டீங்க........
@இம்சைஅரசன் பாபு..
ஹி.. ஹி.. அந்தளவுக்கு உங்களுக்கு கஷ்டம் தருவேனா என்ன..?
கண்டுபிடிக்க முடியவில்லை
ஆனால் விடைகள் ரசிக்கும் படியாகத்தான் இருக்குது
வாழ்த்துக்கள்
@Ramani
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள்..
நல்ல விடைகள்!! :-)
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.. தாங்க முடியல..
ஹலோ....கேள்வின்னு கேட்டிருக்கீங்களே பதில் சொல்வோம்னு கீழேயே வராம மேலே உட்கார்ந்து மண்டயக் குடைஞ்சு விடயக் கண்டு பிடிச்சிக் கீழ இறங்கினால் ....விடைகள்....ஏமாத்திப் புட்டீங்களே...(விடை கொடுத்து விட்ட தைரியம்தான்...!)
@middleclassmadhavi
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
@சந்ரு
இதுக்கே இப்படியா ?
மத்ததலாம் படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க..
@ஸ்ரீராம்.
ஹி.. ஏமாத்தணும்னு ப்ளான் பண்ணி பண்ணலை..
அதுவா அப்படி அமைஞ்சிடிச்சி..
// நீதி : சாமி.. சோறு.. சோறு.. ஐ..
நாந்தான் பர்ஸ்டு! .. -- என்னது
எல்லாரும் கெளம்பிட்டாங்களா ..
நானு பின்னாலேயே வாரேன்.. //
இது ரமேஷ்க்காக எழுதின பழமொழியா
இருக்குமோ..!? # டவுட்டு
அடேங்கப்பா... பழமொழி இப்படி கூடவா? அசத்து மாதவா.... அசத்து... ;-))
Post a Comment