ம்ம்ம்.. அந்த ஃ பீலிங்க்சலாம் எப்படி விவரிப்பேன் ?
நேத்து ராத்திரி சந்திரக் கிரகணம் பாத்து என்ஜாய் பண்ணீங்களா..?
இதோ என்னோட அனுபவம்.. (!)
நேத்து
வலைதளத்துல, ராத்திரி நடக்கப்போற சந்திரக் கிரகணம் பத்தி விரிவா
படிச்சேன்.. அத ராத்திரி பாக்குறதுக்கு ரொம்வ ஆர்வமா இருந்தேன்.. ஆர்வம்
தாங்கல..
இல்லையா
பின்னே.. இந்த நூற்றாண்டுல அதிக நேரம், அதிக இருட்டான (longest &
darkest) பூரண கிரகணம்.. அதாவது 100 நிமிஷம்.. ம்ம்ம்.. யோசிச்சுப்
பாத்தப்பவே பிரமிப்பா இருந்திச்சு.. அதுவும் கலர் கலரா.. இருக்கும்னு படிச்சேன்...
மத்திய சந்திரக் கிரகணம்னு இதுக்கு பேரு. அதாவது.. பூமியின் நிழலோட மத்தியப் பகுதி சந்திரணுல படுமாம்.. அதனால ரொம்ப இருட்டாவும்.. கலராவும் இருக்குமாம்.. இடது எப்பயாவது தான் நடக்குமாம்.. (rare occasion ) (நன்றி : விக்கிப்பீடியா )
மத்திய சந்திரக் கிரகணம்னு இதுக்கு பேரு. அதாவது.. பூமியின் நிழலோட மத்தியப் பகுதி சந்திரணுல படுமாம்.. அதனால ரொம்ப இருட்டாவும்.. கலராவும் இருக்குமாம்.. இடது எப்பயாவது தான் நடக்குமாம்.. (rare occasion ) (நன்றி : விக்கிப்பீடியா )
இந்த மாதிரி அதிக நேர பூரண கிரகணம் இனிமே 2141 லதான் வருமாம்.. அடேங்கப்பா..!
நேத்து நாதரி பத்து
மணிக்கே தூங்கப் போயிட்டேன்.... கொஞ்சமாவது தூங்கினா நல்லா முழிச்சிக்
கிட்டு கிரகணத்த பாக்கலாமே அதான். மொபைல் போனுல அலாரம் செட் பண்ணியாச்சு
கவலை இல்லை.
வானத்தைப் பாத்தேன்.. சந்திரன் மறைஞ்சு இருந்திச்சி.. அட.. லேட்டா எழுந்திட்டமோ.. பூரண கிரகணம் ஆரம்பிச்சிடிச்சு போல.. சரி.. வெயிட் பண்ணலாம்.. ஆஹா பௌர்ணமியா இருந்தாலும் என்ன இருட்டு. சரியாத்தான் சொல்லி இருக்காங்க 'இருட்டு கிரகணம்'ன்னு.. அரைகுறை தூக்கக் கலக்கத்துல வானத்தையே பாத்திட்டு இருந்தேன்..
வெயிட் பண்ணேன்.. பண்ணேன்.. பூரண கிரகணம் விடவே இல்லை..
டவுட்
வந்து மூஞ்சில தண்ணி விட்டு அலம்பி தெளிவா பாக்கலானும்னு நெனைச்சேன்.. அட.. என்னாது.... நாம நேனைச்சதுலாம் நடக்குது .. என்னோட மூஞ்சில தண்ணி கொட்டுது.. அட.. என்னாது வானத்துல..
ரொம்ப பெரிசா, கும்மிருட்டா இருக்குது.. அட.. அட.. அது மேகமா, மழையே ஆரம்பிடிச்சா..?
இப்ப பௌர்ணமிதான்.., சந்திரன் (மேகத்தால) மறைஞ்சு இருக்கு.. அப்ப, நா பாத்ததும், சந்திரக் கிரகணம்தான ..?
படங்களுக்கு நன்றி |
===================================
14 Comments (கருத்துரைகள்)
:
http://faaique.blogspot.com/2011/06/normal-0-false-false-false-en-us-x-none.html
கவலைய விடுங்க பாஸ்... போட்டோக்கள் இணைத்துள்ளேன் பாருங்கள்
@Mohamed Faaique
நன்றி நண்பரே..
படங்களைப் பார்த்தேன்..
கருத்தும் சொல்லியுள்ளேன்
நீண்ட இடைவெளிக்கு பின்
மீண்டப் பதிவு
அழகு மாதவன்
ஆனா நான் இதப்பதிஎல்லாம் யோசிக்கவே இல்லை
நல்ல தூங்கிட்டேன்
ஹி ஹி ஹி
நான் பார்க்கணும்னு யோசிக்கவே இல்லை... 09.30 க்கே கண்ணை அசத்தும் தூக்கம்.... அதனால காலையில் தொலைக்காட்சியில் பார்த்தேன்...
@A.R.ராஜகோபாலன்
என்ன பண்ணுறது.. சரக்கு இல்லை..
வருகைக்கு நன்றி கொப்லி..
@வெங்கட் நாகராஜ்
நல்ல முடிவு.. நீங்க பெரிய ஆளுதான்..
//இனிமே 2141 லதான் வருமாம்
நானும் பார்க்கிறேன் ஒவ்வொரு வருஷமும் இதையேதான் சொல்றாங்க. ஆனா வருஷா வருஷம் கிரகணம் வந்துட்டுதான் இருக்கு #டவுட்டு
@பாலா
கிரகணம் அடிக்கடி வருது.. (வருஷத்துக்கு ரெண்டு - மூணு).
நான்சொன்னது அடுத்து வரப்போற 'நீண்ட நேர' சந்திர கிரகணம் (2141)
Thanks for ur visit & comment
சந்திரகிரகணம் பார்க்க இங்கேயும் ஒரு கூட்டம் விடா முயற்சியுடன் போராடியது. நான் அந்த நேரத்துல சொர்க்கத்துல இருந்தேன். (ஐ மீன் தூங்கிட்டேன்)
நான் பார்க்க மறந்துட்டேன்.
//"இனிமே 2141 லதான் வருமாம்"//
விடுங்க..அப்போ பார்த்துக்கலாம்...!
@அருண் பிரசாத்
:-)
:-)
@ஸ்ரீராம். //
விடுங்க..அப்போ பார்த்துக்கலாம்...! //
அட.. நல்லா ஐடியாவாத்தான் இருக்கு..
அண்ணா ரெம்பே சூப்பரா தான் இருக்கு .நாங்களும் வந்துட்டோம்லே .. ஹா ஹா ஹா .......
Post a Comment