தலைகீழ்

ஃபைட்டர் ஏர்-க்ராஃப்ட் சுத்தி பறக்கும்.. ரவுண்ட் அடிக்கும் (ரெண்டும் சேம்?).. சில சமயம் அது போகுற ஸ்பீபீபீபீபீடுல தலைகீழாவும் பறக்கும். அப்படி ஸ்பீபீபீபீபீடா பறக்குறப்ப, நேர பறக்குதா இல்லை தலைகீழப் பறக்குதா அப்படீன்னு அத ஓட்டுற பைலட்டுக்கே சந்தேகம் வந்திடுமாம். அப்ப அவங்க ராடார் கண்ட்ரோல் ரூமுக்கு காண்டாக்ட் பண்ணி கேட்பாங்களாம். கண்ட்ரோல் ரூமுலேருந்து 'ஏர்-க்ராஃப்ட்' தெரியாது. எப்படி சரியா பதில் சொல்ல முடியும் ? யோசிங்க.. யோசிங்க. விடை கடைசில சொல்லி இருக்கேன்.

உங்களுக்கு 'a b c d ....' தலைகீழ அதாவது ரிவர்ஸ்ல வேகமா சொல்லத் தெரியுமா ? டைப் ரைட்டிங் கிளாசுக்கு போனவங்களுக்கு பெரும்பாலும் தெரிஞ்சிருக்கும். எனக்கும் சொல்லத் தெரியும்.... ம்ம்ம்ம். நம்பமாட்டீங்களா ? இதோ, இந்த ஆடியோ க்ளிப்பிங்க கேளுங்க.. (கீழே இருக்கும் முக்கோண / play / replay பட்டன க்ளிக் பண்ணுங்க )


எனது குரலில் zyxwvu .....
 
என்னோட பிரண்டு ஒருத்தன்... நா, தலைகீழ சொல்லுறதக் கேட்டு, 'இதென்ன பிரமாதம் நானும்தான் தலைகீழ 'a b c d ..' சொல்லுவேன் அப்படீன்னான். எனக்கு ஆச்சர்யம். அவன்தான் டைப்ரைடிங் கிளாஸ்லாம் போகலியே, எப்படி சொல்லுவான்னு கேட்டுப் பாத்தேன். சிரசாசனம் செய்தபடியே (தலைகீழ நின்னுக்கிட்டு, 'a b c d .'னு ஆரம்பிச்சு 'z' வரைக்கும் சொல்லி  ஏமாத்திட்டான்.

"இதெல்லாம் போங்கு ஆட்டம். நீ சிரசாசனம் பண்ணாம சொல்லனும்" னு சொன்னதுக்கு, அவன் என்னை தலைகீழ நிக்கச் சொன்னான்..

என்ன செய்யப் போறான்னு புரியாம நா தலை கீழ நின்னப்ப, அவன் மறுபடியும் 'a b c d .. 'னு  ஆரம்பிச்சிட்டான்..

என்னடான்னு கேட்டா, 'இப்ப உன்னைப் பொறுத்த வரை நான் தலைகீழ இருக்கேன். 'a b c d .. ',  இப்ப சொன்னா, 'தலை கீழ',  'a b c d ....' சொன்ன மாதிரிதான..  அப்படீங்கறான்.

இதுக்குத்தான் 'ஐன்ஸ்டானோட  ரிலேடிவிடி தியரி' ரொம்ப படிக்கக் கூடாது.. சரிதான ? 

சரி.. சரி. மொதல்ல கேட்ட கேள்விக்கு பதில் (தகவல்) :

கண்ட்ரோல் ரூம்லேருந்து, பிளேன 'லெஃப்ட்'ல திரும்பச் சொல்லிட்டு மானிட்டர்ல ப்ளேன் (புள்ளியாத்தான் தெரியும்) 'லெஃப்ட்'ல திரும்பினா, ப்ளேன்  நேர பறக்குது.. ஆனா 'ரைட்' சைடுல திரும்பினா, தலைகீழ பறக்குதுன்னு சொல்லுவாங்களாம். இந்த தகவலை 'ஏர்-ஃபோர்ஸ் ராடார் கண்ட்ரோல்' யூனிட்ல வேலை செஞ்ச நண்பர் ஒருத்தர் எனக்குச் சொன்னார்.

டிஸ்கி : நன்றி நவிலல்
 * mp3 எம்பெட் செய்ய டிப்ஸ் கொடுத்த நண்பர் எஸ்.கே விற்கு...
 * mp3 ஸ்டோரேஜ் கொடுத்துதவும் முஜிபோ வலைதளத்திற்கும்...
 *  ஏர்-ஃபோர்ஸ் நண்பருக்கும்..
================================

8 Comments (கருத்துரைகள்)
:

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

/////அப்படி ஸ்பீபீபீபீபீடா பறக்குறப்ப, நேர பறக்குதா இல்லை தலைகீழப் பறக்குதா அப்படீன்னு அத ஓட்டுற பைலட்டுக்கே சந்தேகம் வந்திடுமாம். அப்ப அவங்க ராடார் கண்ட்ரோல் ரூமுக்கு காண்டாக்ட் பண்ணி கேட்பாங்களாம்./////

இதுக்கு எதுக்கு கண்ட்ரோல் ரூம கேட்கனும்? பாக்கெட்ல இருந்து ஒரு ரூபாய் காயினை எடுத்து கீழ போட்டா தெரிஞ்சிட போவுது.........!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

வந்துட்டாரு ஜி.டி. நாயுடு.
காசப் போட்டு அது எக்குத் தப்பா காக்பிட்டுக்குள்ள ஏதாவது இன்ஸ்ட்ருமெண்ட டாமேஜ் பண்ணிடிச்சின்னா..?

வெங்கட் நாகராஜ் said... [Reply]

உங்க வாய்ஸில் ZYX... :)

தட்டச்சு பயின்ற போது நினைவு இருந்தது... இப்போ உங்க நண்பர் மாதிரி தான் நானும் சொல்லணும்.....

A.R.ராஜகோபாலன் said... [Reply]

உண்மையிலேயே எனக்கு தெரியாதா செய்தி மாதவன் பகிர்ந்ததற்கு நன்றி
உங்கள் குரல் சற்று மாறின மாதிரி தெரிகிறது
உங்கள் நண்பர் உங்களைப்போலவே கொஞ்சம் குசும்பர் தான் போல இருக்கு

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட் நாகராஜ்

மறந்திட்டீங்களா ? .. பரவாயில்லை.. ஜஸ்ட் ஒரு FUN தான்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@A.R.ராஜகோபாலன்

வாங்க கோப்லி.....
குறள் தான் மாறாது.
குரல் மாறும்தான.. வயசு மாறுதே..

//உங்கள் நண்பர் உங்களைப்போலவே கொஞ்சம் குசும்பர் தான் போல இருக்கு//
நம்ம நண்பர் வேறெப்படி இருப்பாரு..

சாய் said... [Reply]

//டிஸ்கி : நன்றி நவிலல்
* mp3 எம்பெட் செய்ய டிப்ஸ் கொடுத்த நண்பர் எஸ்.கே விற்கு...//

சாய்.கோபாலன்@ஜிமெயில்.காம் என்ற முகவரிக்கு எனக்கு அறிவுக்கு விளங்கும்படி சொல்லவும்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@சாய்
விரைவில் விளக்கமாக சொல்கிறேன் இ-மெயிலில்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...