ஐம்பத்தி இரண்டு வயதான பெண் ஒருவர் மருத்துவரால் குணப் படுத்த முடியாத வியாதியினால் மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டார். அவரது கண்ணிற்கு இறைவன் புலப்பட.. அவரிடம் கேட்டார்,
"எனது இந்தப் பிறவி முடியும் தருவாயிற்கு வந்து விட்டதா ?"
"இல்லை இல்லை.. இன்னும் நாற்பத்தாறு ஆண்டுகள், அறுபத்தி மூன்று நாட்கள் மற்றும் எட்டு மணி நேரம் பாக்கி இருக்கிறது".
இதனைக் கேட்ட அப்பெண்மணி, உடல் நிலை சற்று சரியானதும் தனது முகத்தில் விழுந்த சுருக்கங்களை நீக்கும் விதமாக முகத்தினை பிளாஸ்டிக் சர்ஜரியும், நரை முடியினை 'டை' செய்தும், பிரெஸ்ட் இம்ப்லான்ட்டும் இன்னும் பல விதமான காஸ்மெடிக் சர்ஜரியும் செய்து கொண்டு தன்னை ஒரு 20 வயது யுவதியாகவே மாற்றிக் கொண்டார். எப்பவுமே மாடர்ன் ட்ரெஸ்தான்....
ஆனாலும் விதி, சதி செய்து விட்டது.. ஆம்.. இரு மாதத்தில், 'ஷாப்பிங்'(!) சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் சாலையைக் கடக்கும் பொது, கட்டுப்பாடு இழந்து வந்த ஒரு கணரக வாகனத்தால் தூக்கி எறியப்பட்டு இறந்து விட்டார். இதனை சற்றும் எதிர்பாராத, அப்பெண்மணி இறைவனிடம் நியாயம் கேட்கச் சென்றார். அதற்கு இறைவன் சொன்ன பதில்.........
"அடாடா.. அப்போது உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை"
--------------------------------------------------------------------------------
ஆசையே அலைபோலே.. :
கணவன் : வர 'வெட்டிங்-டே'க்கு, ஒனக்கு என்ன கிஃப்ட் வேணும் ?
மனைவி : ( மனசில புதிய காரை நினைத்துக் கொண்டு ) ம்ம்.. நா ஏறி மிதிச்ச சில செகண்டுக்குள்ள ஜீரோலேருந்து அறுபதுக்கு போகணும்.. அவ்ளோ ஸ்பீடா...
கணவன் : ம்ம்ம் ஓகே.. புரியுது.. புரியுது..
மறுநாள் வீடு திரும்பிய கணவன் மேஜை மீதி வைத்த காம்பாக்ட் சைஸ் கிஃப்ட் பாக்ஸை கண்டதும் மனைவி மனசுக்குள்.. "அட.. சின்னதா டாய் கார் வாங்கிட்டு வந்துட்டாரா ?" என நினைத்துக் கொண்டே, அவரிடம் ,"என்னது விளையாட்டு பொம்மையா ?"
கணவன் : இல்லை.. நிஜம்..
மனைவி, மனதினுள் அது காரின் சாவியாக இருக்கலாம் என கற்பனை செய்து கொண்டு மேஜை மீதிருந்த பாக்ஸ்ஸினை பிரிக்க ஆரம்பித்தாள்........
பாக்ஸினுள் இருந்தது.....
----------------
-------------
-------- இன்னும் கீழ இருக்கு பாருங்க..
------------------------
------
---------
------
------------------------
------இன்னும் கொஞ்சம் கீழ........
---------
------------------------
------
---------
------------------------
------
--------- இதோ.. இதுதான்.. பாருங்க..
வெயிங் மெஷின் -- 0 to 60 in seconds |
டிஸ்கி : நன்றி - மூலம் ஆங்கிலம்.. தமிழாக்கம் -- நானே
சரியான ஞாபகம் இல்லாததால் சுட்டி கொடுக்க முடியவில்லை ..
படங்கள் உதவி : கூகிள் இமேஜெஸ்..
===========================================
25 Comments (கருத்துரைகள்)
:
ஹா...ஹா.....
தமிழ் பத்து மட்டும்தான் இணைக்கப் பட்டிருக்கு. எனவே அதில் மட்டுமே ஓட்டுப் போட முடிஞ்சுது...
ஹா...ஹா...ஹா...
Super jokes
Ha. . . Ha. . . Ha. . .
ரெண்டு ஜோக்கும் சூப்பர்..!
ரெண்டாவது ஜோக்கு என் Draft-ல
இருக்கு.. நீங்க முந்திக்கிட்டீங்க..
ஹூம்..!
Ha. . . Ha. . . Ha. . .
(Copy paste comment)
//வெங்கட் said... [Reply] 5
ரெண்டு ஜோக்கும் சூப்பர்..!
ரெண்டாவது ஜோக்கு என் Draft-ல
இருக்கு.. நீங்க முந்திக்கிட்டீங்க..
ஹூம்..!
//
அது கூட என் பிரெண்ட் வீட்டுக்கு போனேன், அவன்.....அப்படின்னு நேர்ல நடந்தா மாதிரி ஒரு பில்ட்-அப்போட எழுதி இருப்பீங்க, அதுனால தனி போஸ்ட் மாதிரிதான் தெரியும், தைரியமா போடுங்க.
நல்லாதான் யோசிக்கிரீங்க. ஹா, ஹா, ஹா
மனம் விட்டு சிரித்தேன் மாதவன்
நல்லப் பதிவு
மனம் லேசானது
@ஸ்ரீராம்.
இன்டலி லிங்க் ப்ராப்ளம்..
இப்ப இணைச்சிட்டேன்.
நன்றி.
@ கலா நேசன், ராஜ பாட்டை. -- நன்றி.
ஜோக்கு மற்றும் கணக்கு இவை இரண்டுக்கும் நீங்கள் இந்த ப்ளாகை அர்ப்பணித்து விட்டீர்கள் என்று சொல்லலாம்
@ வெங்கட்
அதனால என்ன..
ஒரு மாசம் கழிச்சி..
"நெட்டில் நான் படித்து ரசிச்ச ஜோக்கு" னு தலைப்பு போட்டு
பப்ளிஷ் பண்ணிடுங்க..
நன்றி காப்பி பேஸ்ட் பி.எஸ்.வி.. , Lakshimi madam
மனம் மகிழ்ந்ததா.. ?
நன்றி கொப்லி..
ஹி.. ஹி..
காப்பி அடிக்குறது இந்தப் பேரு வேறையா ?
இப்படியே சொல்லி உசுப்பேத்தி விடுறீங்க..
நன்றி மோகன்.
இரண்டு ஜோக்கும் ஏற்கெனவே படித்திருந்தாலும் மறுபடி சிரிக்க வைத்தன!
//////ரசித்த ஜோக்குகள் ///////
ரசிச்சாத்தானே அது ஜோக்கு?
//////நா ஏறி மிதிச்ச சில செகண்டுக்குள்ள ஜீரோலேருந்து அறுபதுக்கு போகணும்../////////
ரொம்ப்பக்கம்மி, ஜீரோவுல இருந்து நூறுக்கு போகனும்னு சொல்லனும்.............
தமிழ்மணத்துக்கு ஆப்பா? காணோமே?
@middleclassmadhavi
ஹி.. ஹி.. ஓல்ட் ஈஸ் கோல்ட் மாதிரி..
பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply] 18
//////ரசித்த ஜோக்குகள் ///////
ரசிச்சாத்தானே அது ஜோக்கு? //
ஓஹோ.. அப்படி ஒண்ணு இருக்குதா.. மறந்திட்டேன்.. .
//
ரொம்ப்பக்கம்மி, ஜீரோவுல இருந்து நூறுக்கு போகனும்னு சொல்லனும்............. //
ஒரு பொண்ணு 100 கேஜி. இருந்தா.. தாங்குமா.. அதான் ஜஸ்ட் 60 கே.ஜி.ல நிறுத்திகிட்டேன்..
//தமிழ்மணத்துக்கு ஆப்பா? காணோமே? //
தமிழ்மணம் லோடிங் பிராப்ளம்.. அதான் தற்காலிகமா எடுத்திட்டேன்..
இரண்டுமே நல்ல ஜோக்ஸ்... நன்றி நண்பரே....
முதல் ஜோக் சூப்பர்.
எஸ்.வி. சேகரின் ஒரு நாடகத்தில் பக்கத்து வீட்டு ஆளை தூக்கி சென்ற எமனின் கலாட்டா நினைவுக்கு வருகின்றது.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பர்களே..
@ வெங்கட் அண்ட் சாய்
Post a Comment