அப்பாடா.. ஒரு வழியா பர்ஸ்ட் இயர் முடிஞ்சுது..
போன வருஷ ஆரம்பத்தில.. என்னமா சீனியர்லாம் எங்கள 'லுக்கு' உட்டாங்க.. சொல்லி மாளாது..
காம்பஸ் முழுசா எல்லாமே புதுசா இருந்திச்சு.. யாரப் பாத்தாலும் பயந்து பயந்து மரியாதையா நடந்துக்கணும்..
நல்ல வேலை.. எங்க காம்பஸ்ல 'ராகிங்' கலாச்சாரம்லாம் இல்லை..
அது மட்டும் இருந்திருந்தா.. ம்ம்ம்.. இப்ப நெனைச்சாலும் பயங்கரமா இருக்கு !
வராண்டா பக்கம் தெரியாமப் போனாக் கூட திட்டு. அடி மட்டும்தான் வாங்கலை. அழுகை அழுகையாவரும். அழுதாலும் எங்கள, எங்க போக்குல விட மாட்டங்களே.. அவ்ளோ கண்டிப்பு....
மொதோ மூணு மாசம் எங்கள்ல யாராவது படிக்க ஆரம்பிச்சாங்க..? இல்லையே.. எப்படி முடியும்.. அழுகை, துக்கம், பயம்,... வேற என்னத்த அனுபவிச்சோம். அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமா என்ன செய்யணும் புரிய ஆரம்பிச்சுது.
இப்ப அடுத்த வருஷம் ஆரம்பம். இப்ப பயம், கவலை, அழுகை எதுவுமே இல்லை.. எப்படி நடந்துக்கணும்னு ஒரு வழியா ஐடியா கெடைச்சிடிச்சே. போன வருஷ அனுபவம்தான்..
இப்ப.. நாங்களும் சீனியர் தான்..... இல்லை இல்லை,
"நாங்க மட்டும்தாம் சீனியர்.....
எங்களுக்கு உண்டு ஜூனியர்.. "
போன வருஷ 'சீனியர்' இப்ப நோ மோர் 'சீனியர்'.. அவங்களாம் இப்போ ஏதோ ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்டாம்....................
"நானு யாரா ?", இந்த வருஷ சீனியர் கே.ஜி கிளாஸ்ல நானும் ஒரு ஸ்டூடன்ட் சார்.
டிஸ்கி : பொண்ணு ஜூனியர் கே.ஜி லேருந்து சீனியர் கே.ஜி போயிருக்கா.. அவ சார்பா, நா திங்க் (?) பண்ணி எழுதினது இது.
நன்றி : கூகிள் இமேஜெஸ்..
================================
17 Comments (கருத்துரைகள்)
:
அண்ணாத்த வணக்கம் .சீனியருக்கு இந்த ஜீனியரின் மரியாதை தலைவா . பட்டையக் கேளப்புங்க .
ராக்கிங் ....அருமை...
Ha ha ha Nice Thinking....
மாதவன் மனம் மகிழ்ந்த மதி நிறைந்த வாழ்த்துக்கள் குட்டிக்கு வாழ்த்துக்கள்
தமிழ்மணம் மூலமாகவும் கொடுத்தாச்சி
ஆஹா நல்ல பதிவு.சீனியருக்கு வாழ்த்துக்கள்.
சீனியருக்கு வணக்கம் சொல்லிக்கிறேன், கூடவே வாழ்த்தும்!
@ சங்கர் : உங்கள் மரியாதையை, நான் மரியாதையாக சீனியரிடம் சொல்லிவிட்டேன்
கோவை நேரம் : ராகிங்கா.. சத்தமா சொல்லாதிங்க.. போலீசு (சிரிப்பு போலீசு அல்ல) வந்துடப் போறாங்க..
பலே பிரபு : அட... நம்ம திங்கிங் கூட நல்லா இருக்கா ?
ஏ.ஆர்.ஆர், லெட்சுமியம்மா & மிடில்..mathavi : உங்கள் வாழ்த்துக்கள் சொல்லப் பட்டு விட்டது..
அனைவருக்கும் நன்றி..
// பொண்ணு ஜூனியர் கே.ஜி லேருந்து
சீனியர் கே.ஜி போயிருக்கா.. //
ம்ஹூம்.. உங்க பொண்ணெல்லாம்
ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சிடுச்சு..
நீங்க எப்ப தான் கட் அடிக்காம
முதியோர் கல்வி கிளாஸ்க்கு
போக போறீங்களோ..?!!
@வெங்கட்
ஆமாமாம்..
இப்பலாம் முன்னைய மாதிரி பெரியவங்க(முதியோர் கல்வி ஸ்டுடென்ட்) இல்லை.. கண்டபடி கேள்வி கேக்குறாங்க..
அவங்களுக்கு விளக்கம் சொல்லுறதுக்கு பதிலா கட் அடிப்பதே மேல் னு தான் இப்படிலாம் செய்ய வேண்டி இருக்கு..
-- இப்படிக்கு முதியோர் பள்ளிக் கல்வி இயக்குனர்..
Nice. I thought you were writing about completing an year in blogging.
@மோகன் குமார்
அட.. அப்ப நீங்க எதிர்பாராத முடிவா ? நன்றி..
:) nice
சீனியராகிவிட்ட உங்கள் மகளுக்கு வாழ்த்துகள்.
இப்படி கூட ட்விஸ்ட் வைக்கலாமோ ?
ஹி ஹி! நல்லா இருக்கு னா :-)
நான் இத எதிர்பார்க்கல! உங்க கல்லூரி அனுபவம்னு நினைச்சேன்..
எல்லா ஜூனியர்களும் நாளைய சீனியர்களே...எல்லா மருமகள்களும் நாளைய மாமியார்களே...
எல்லா சீனியர்களும் நேற்றைய ஜோநியர்களே...எல்லா மாமியாரும் நேற்றைய மருமகள்களே... (என்னமோ..... சொல்லணும்னு தோணிச்சு..)
சாரி ஜூனியரை கூகிள் கோச்சுகிட்டு 'ஜோநியர்' ஆக்கி விட்டது...
சினியருக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment