ஏதாவது எடக்கு மடக்கா.. நடந்தா.. உடனே நண்பர் செல்வாதான் நினைவில் வருகிறார். எனவே எனது மனதில் தோன்றியதை செல்வாவை வைத்து செல்வா கதையாக எழுதியுள்ளேன்..
மொழிகள் பல கற்பதால் என்றைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை உணர்ந்த செல்வா, ஆரம்பப் பள்ளியில் தமிழ் படித்துத் தேர்ந்தபின், நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலம் பயிலச் சென்றார். செல்வா, ஆங்கில இலக்கணம் மீது மிகுந்த பற்றும் ஆர்வமும் கொண்டிருந்ததால் வகுப்பில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.
ஒருநாள் ஆங்கில இலக்கண ஆசிரியர் வகுப்பில் "மாணவர்களே நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்.. ஆங்கில வாக்கியத்தில் Subject, Third person மற்றும் Singular ஆக வந்தால் வரும் வர்பில் (verb) 's' சேர்க்க வேண்டும். உதாரணம் 'Child plays with ball', 'Dog runs'..
வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் நமது செல்வாவைப் பார்த்து ஆசிரியர், "செல்வா, இங்க்லீஷ்ல சொல்லு.. 'முரளி விஜய் கிரிக்கெட் விளையாடுகிறார்' என்றார். அதற்கு, செல்வா, "Murali Vijay plays Cricket" என்றார். ஆசிரியர், "எனது தம்பி ஓடுகிறான்", என்றார். அதற்கு, செல்வா, "My Brother run" என்றார்.
வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் நமது செல்வாவைப் பார்த்து ஆசிரியர், "செல்வா, இங்க்லீஷ்ல சொல்லு.. 'முரளி விஜய் கிரிக்கெட் விளையாடுகிறார்' என்றார். அதற்கு, செல்வா, "Murali Vijay plays Cricket" என்றார். ஆசிரியர், "எனது தம்பி ஓடுகிறான்", என்றார். அதற்கு, செல்வா, "My Brother run" என்றார்.
கிளாஸ்னா இப்படித்தான் இருக்கும்.. |
செல்வாவின் பதில், "என்னோட தம்பிய எப்படி சார் மூணாவது(Third ) மனுசனா(person ) நெனைக்க முடியும் ?"
"நல்ல வேளை.. ஒன்னையாவது சரியா சொன்னாயே!" என்றார் ஆசிரியர்.
அதற்கு செல்வாவா, "எனக்குத் தெரியாதா சார். முரளி விஜய் இன்னும் சிங்கள் தான்.. நீங்க அவருக்குப் பதிலா Dhoniனு சொல்லி இருந்தா, 'Dhoni play cricket'னு பதில் சொல்லி இருப்பேன்.. ஏன்னா, Dhoni Single இல்லை.. அவருக்குத்தான் கல்யாணம் ஆயிடிச்சே..", என்றாரே பார்க்கலாம்.. ஆசிரியர் விட்டாரு.. ஜூட்..
diski : நன்றி வெங்கட் -படித்துவிட்டு ஆலோசனை சொன்னதற்கு..
===========================
24 Comments (கருத்துரைகள்)
:
ஹ ஹ ஹா
அருமையான நகைச்சுவை மாதவன்
உங்களுக்கே உரிய தனிதன்மையில்
:-)
Ha . . . Ha . . Ha. .
// diski : நன்றி வெங்கட் -படித்துவிட்டு ஆலோசனை
சொன்னதற்கு.. //
எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதை பண்ண
மாட்டோமா..?!
நீங்களும செல்வாவோட தான் மல்லுக்கட்டுறீங்களா?
///நன்றி வெங்கட் -படித்துவிட்டு ஆலோசனை சொன்னதற்கு.. /////
ம்ம் வெங்கட் இதெல்லாம் வேற பண்றாரா?
வாங்க ஏ.ஆர்.ஆர்.. நல்லா கருத்துள்ள கருத்து..
புன்னகைக்கு நன்றிகள், கோபி, ரமேஷ்
சிரிப்பினை எதுதிக் காட்டியமைக்கு நன்றிகள் ராஜபாட்டை..
ம்ம்.. மறக்காம 'அழகிய தமிழ் மகன்' வசனகர்த்தாக்கு உங்க நன்றிய சொல்லிடுங்க.. வெங்கட்
@பன்னிக்குட்டி ராம்சாமி
செல்வாவ இன்னைக்கு காணோம்.. செல்வா கதை இல்லாம நம்ம நண்பர்கள் கஷ்டப் படுவாங்கனுதான் இந்த ஏற்பாடு, ராம்ஸ்..
//Paன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply] 7
///நன்றி வெங்கட் -படித்துவிட்டு ஆலோசனை சொன்னதற்கு.. /////
ம்ம் வெங்கட் இதெல்லாம் வேற பண்றாரா? //
அவரு இதுவும் பண்ணுவாரு..இதுக்குமேலவும் பண்ணுவாரு.
கிண்டல் பண்ணுறதுக்கு இந்த பக்கம் ரமேஷ் & நரி
அந்த பக்கம் செல்வா.........சூப்பர்
நல்ல நகைச்சுவை!
ஹா....ஹா...ஹா....தம்பி ஜோக்தான் டாப். முரளி விஜய் ஜோக்கில் ஒரு வேளை முரளி, விஜய் என்று இரண்டு பேர் என்று எதாவது வருமோ என்று பார்த்தேன்!
இப்போதெல்லாம் நகைச் சுவை என்றாலே அர்த்தமற்றும் அர்த்தம் கெட்டும்
இருப்பதுதான் என்கிற எண்ணம் வளர்ந்து வருகிறது
நகைச்சுவையிலும் அர்த்தம் உள்ள நகைச் சுவை என
ஒரு பிரிவை உண்டாக்கலாம்
நிச்சயம் தங்கள் நகைச்சுவை அதில் சேரும்
தரமான அர்த்தமுள்ள நகைச்சுவைப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
@மாலுமி
செல்வா தி பியூச்சர் ஆர்.ஜே.. ராக்கிங்..
@எஸ்.கே
நன்றி எஸ்.கே.. இதை நகைச்சுவைன்னு ஒத்துக் கொண்டதற்கு..
@ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம்.
முரளி - விஜய் -- ஆஹா அப்படி ஒண்ணு இருக்கா. நம்ம செல்வாக்கு தெரியலையே..
மற்றபடி முரளி, விஜய் ஏதாவது ஒன்ன மட்டும் சொன்னா, சினிமா ஆளுங்கள நேனைச்சுடுவாங்களே.. .. அதான் .....
@Ramani
நன்றி சார்..
நல்லவேளை.. நல்லதொரு நகைச்சுவையாக கருதியமைக்கு.
ஆமாம்.. நகைச்சுவை என்பது அர்த்தமுள்ளதாகவும்.. எவரையும் புண்படுத்துவதாகவும் இருக்கக் கூடாது..
செல்வா நம்ம பிரண்டுதான்.... அவரு இதலாம் தப்பா எடுத்துக்க மாட்டாரு..
2011/7/18
வந்துட்டுப் போனேன் மகராசா!வந்துட்டுப் போனேன் மகராசா!
@வெளங்காதவன்
வாங்க.. வெளங்காதவரே..
அடிக்கடி வந்து போங்க.. வெளங்கிடும்..
செல்வா இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல. நகைச்சுவை அருமை.
//செல்வாவின் பதில், "என்னோட தம்பிய எப்படி சார் மூணாவது(Third ) மனுசனா(person ) நெனைக்க முடியும் ?"//
ஹி ஹி ஹி.. சூப்பர்னா :-) ரொம்ப நல்லா இருக்கு!
//செல்வா நம்ம பிரண்டுதான்.... அவரு இதலாம் தப்பா எடுத்துக்க மாட்டாரு//
ஒன்னும் பிரச்சினை இல்லை. :-) எனக்கு மகிழ்ச்சியே அண்ணா :-)
@பாலா
அமாம்.. செல்வா ஈஸ் ரியலி கிரேட்..
@கோமாளி செல்வா
நன்றி செல்வா....
ரேடியோ ஜாக்கி ஆனதுக்கப்புறம் இந்த ஜோக்க மறக்காம நீ சொல்லு ஏதாவது நிகழ்ச்சியில..
Post a Comment