எலி :
நாமெல்லாம் எலிய மொதல்ல பாத்திருப்போம்.. அப்புறமா பல வருஷம் கழித்து கம்பியூட்டர் மௌஸ்.. பாத்தோம்.. என்னோட பொண்ணு எலியப் பாத்துட்டு சொல்லுறா,"அப்பா.. இது கம்பியூட்டர் மௌஸ் போல இருக்கு.. 'இங்க ஓடுது.. அங்க ஓடுது'.. 'வால் இருக்கு'.."
# இதுவும் generation கேப் தான் !
டேபிள் டென்னிஸ் பந்து :
என்னோட பையன் இந்த வருஷம் டேபிள் டென்னிஸ் கத்துக்கறான். இந்த ஆட்டத்துல முக்கியமான பிரச்சனை... பந்து தரையில விழும்போது தெரியாம.. எக்குக் தப்பா காலை அதுமேல வெச்சிட்டா.. நசுங்கிடும். ரெண்டு பந்து அப்படி நசுங்கி போச்சு... மொதோ பந்து நசுங்கி போனப்ப.. என்னமோ நா ஒரு பெரிய 'பந்து இஞ்சினியர்' போல அதை இப்படி அப்படி அமுக்கி சரி பண்ணிடலாம்னு நெனைச்சேன்.. பந்து விரிசல் விட்டதுதான் மிச்சம். மூணாவது தடவை அப்படி கால் பட்டு நசுங்கிப் போனபோது அத கவனிச்ச ட்ரைனர் வெந்நீர்ல போட்டா சரியாகிடும்னு சொன்னாராம்.. அட.. நல்ல ஐடியா தான்.. இது மொதல்லேயே தெரியாமப் போயிடிச்சே..
சினிமா :
இந்த சொல்லுக்கு சரியான அர்த்தம் 'திரைப்படம்' --- அப்படித்தான் நானும் சின்ன வயசுலேருந்து நெனைச்சுக் கிட்டு இருந்தேன். அதை திரையிடும் அரங்கத்திருக்கும் 'சினிமா ' என்ற வார்த்தை பொருந்தும்.
நா, சினிமால(அரங்கம்), சினிமா(மூவி) பாத்து எத்தனை வருஷம் இருக்கும் தெரியுமா..? ம்ம்ம்.. 2004 ல 'விருமாண்டி' பாத்ததா ஞாபகம்.... அதுவும் தமிழ் நாட்டுக்கு வெளியில. தமிழ்நாட்டுல நா இதுக்கு முன்னாடி பாத்தா படம் 'இந்தியன்' (1996). எப்படியோ.. சினிமா ஒரு பெரிய விஷயமா எனக்குத் தெரியல.. இப்போ தெரியுதா அருண், உங்க சினிமா புதிர்ல, ஏன் என்னால 50-60% க்கு மேல வாங்க முடியலன்னு.. ?
டவுட்டு :
'நகரும் படி' அதாங்க 'escalator' .. escalator is a moving staircase).
One which drives is called driver.
One which drills is driller.
One which rotates is rotator...
அதே மாதிரி, 'One which escalates is escalator'. 'escalate' meaning 'Increase rapidly'. ஆனா எஸ்கலேடர் ஸ்மூத்தா தான போகுது.......!
எச்சூஸ் மீ.. ஒன் லாஸ்ட் டவுட்..
டீச் பண்றவரு.. டீச்சர்
ரன் பண்றவரு.. ரன்னர்..
அப்ப, ஆஃபீஸ பண்ணவரு (கட்டின கொத்தனார்) ஆஃபீஸரா ?
எச்சூஸ் மீ.. ஒன் லாஸ்ட் டவுட்..
டீச் பண்றவரு.. டீச்சர்
ரன் பண்றவரு.. ரன்னர்..
அப்ப, ஆஃபீஸ பண்ணவரு (கட்டின கொத்தனார்) ஆஃபீஸரா ?
டிஸ்கி : எதலாம் பிலாகுல எழுதலாம்னு தெரியாதோர் சங்கம்..
==========================
29 Comments (கருத்துரைகள்)
:
அந்த ஒடஞ்சுபோன பந்த எல்லாத்தையும் எடுத்து மறுபடியும் சரி பண்ணிடுங்க..
மிகச் சரி
முதலில் எது தெரிகிறதோ அதிலிருந்து தானே
அடுத்ததை விளக்க முடியும்
நமக்கு முதலில் எலி
தற்காலக் குழந்தைகளுக்கு
முதலில் கம்ப்யூட்டர் மௌஸ்தானே
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
டிஸ்கி : எதலாம் பிலாகுல எழுதலாம்னு தெரியாதோர் சங்கம்..
....இல்லைங்க. எதை வேண்டுமானாலும் ப்லாக்ல எழுதலாம் என்று தெரிந்தோர் சங்கம்..... யப்பா....!!!!
டீச் பண்றவரு.. டீச்சர்
ரன் பண்றவரு.. ரன்னர்..
அப்ப, ஆஃபீஸ பண்ணவரு (கட்டின கொத்தனார்) ஆஃபீஸரா ?
எனக்கும் அதே தவுட்டுதான் ............
”எதை வேண்டுமானாலும் எழுதலாம்” சங்கம் வேற இருக்கா.... அட இத்தனை நாளா தெரியாம போச்சே.... :)
மவுஸ்... ம்ம்ம்ம்.... நிச்சயமா இது ஜெனரேஷன் கேப் பிரச்சனைதான்.... :)))
சொல்லியிருக்கற அத்தனை விஷயங்களுமே சுவாரஸ்யம்தான்!
அந்த பந்து விசயம் நல்லாயிருக்கு!
சுவாரசியமான கலக்கல்.
@கோமாளி செல்வா
எங்க ஊருல மொத்தக் குப்பையையும் எங்க கொட்டுவாங்களோ.. தெரியலையே..
@Ramani
சரியாகச் சொன்னீர்கள். நன்றி வணக்கம்..
@Chitra
சபாஷ் சரியான போட்டி..
@தினேஷ்குமார்
ஆன்சர் தெரிஞ்சா இங்க மறுபடியும் வந்து சொல்லிட்டுப் போங்க..
@வெங்கட் நாகராஜ்
// அட இத்தனை நாளா தெரியாம போச்சே.... :) //
Same Blood..!!
@ஸ்ரீராம்.
உங்கள் கருத்திற்கு . -- வழக்கம்போல நன்றிகள்..
@எஸ்.கே
ம்ம்.. அதனாலத்தான்.. இங்க பகிர்ந்தேன்..
@RAMVI
நன்றி ராம்வி.... ஆதரவைத் தொடரவும்..
ஹா ஹா ஹா... ரகளை அனுபவங்கள் தான்... எனக்கு ரெம்ப சொன்னது உங்க பொண்ணு சொன்ன "மௌஸ்" தான்.. :) ஆபிஸ் பண்றவர் ஆபிசர் தான்னு சொல்றாங்க..:)
எல்லாமே சுவாரசியமான விஷயங்க தான்.
சுவாரசியமான கலக்கல். நல்லாயிருக்கு!
சுவராசியமா இருக்கு........ நான் தான் எப்படியோ மிஸ் பண்ணி இருக்கேன்........
உனக்கு நல்லா எழுத வருது மாதவா..!
சின்னச் சின்ன விசயங்களைக்கூட சுவாரஸ்யமா எழுதறே..
paaraattugaL ..!
கலக்கல் மாதவன். உங்களுக்குள்ள ஒரு பாலகுமாரன் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கான். அவன வெளிய விடுங்க
@அப்பாவி தங்கமணி
சுவாரஸ்யமாக ரசித்தமைக்கு நன்றிகள்
@Lakshmi
சுவாரஸ்யமாக ரசித்தமைக்கு நன்றிகள்
@மாலதி
சுவாரஸ்யமாக ரசித்தமைக்கு நன்றிகள்
தங்கள் முதல் வருகைக்கும், கருத்திருக்கும் நன்றிகள்..
@பன்னிக்குட்டி ராம்சாமி
லேட்டானாலும்.. லேட்டஸ்டா வந்துட்டீங்களே.. நீங்க மிஸ் பண்ணல..
@ஊசி
நல்லருந்துதுங்களா
தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நண்றிகள்..
@jaisankar jaganathan
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நண்றிகள்..
சார்.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி என்னைய ஒரு வழி பன்னுடுவீங்க போல..
பயனுள்ள செய்திகள் நன்றி பாராட்டுகள் .
Post a Comment