'சிரிப்பு போலீஸ்' பெயர்க் காரணம்

முஸ்கி : இந்தப் பதிவு சிரிப்பு போலீஸ், ரமேஷ் பிறந்த நாளுக்கு அற்பணிப்பு....   

ஃப்ளாஷ் நியூஸ் : 'சிரிப்பு போலீஸ்' பெயர்க் காரணம் அம்பலம்
  சுட்டப் படம் - இடம் 'சிரிப்பு போலீஸ்'

சென்னை : பிரபல (?) வலைஞர் ஒருவர் 'சிரிப்பு போலீஸ்' என தனது வலைமனைக்கு பெயர் வைத்தது ஏன் என்பது திடீரென அம்பலமானது. இது பற்றி எமது சிறப்புச் செய்தியாளர் தெருவிக்கிறார்.......

ஸ்டுடியோவிலிருந்து (ஸ்டு ) : ஹலோ.. நா பேசுறது கேக்குதா..? 
சிறப்பு செய்தியாளர் (சி. செ) : ..... வயதிலிருந்து அவர்...   ர்பம்ம்ம்மம்ம். .

ஸ்டு  : மன்னிக்கவும்  இணைப்பில் ஏதோ கோளாறு... மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிசெயகிறோம்..இதோ.. இதோ..  எமது சிரிப்பு சாரி.. சாரி.. சிறப்பு செய்தியாளர் .. சொல்லுங்க (மொக்க)ராசா..

 சி. செ : சிரிப்பு போலீஸ்' என தனது வலைமனைக்கு பெயர் வைத்தது ஏன் என்பது திடீரென அம்பலமானது. சிரிப்புக்கும், போலீசுக்கும் துளிக்கூட சம்பந்தமே இல்லாத ஒருவர் அவற்றை தனது வலைமனையின் பெயராக பயன்படுத்தி வருகிறார். இது பற்றி தற்போது திடுக்கிடும் தகவல் வந்துள்ளது. அவர் அந்த சொற்களை பயன் படுத்துவதற்கெதிராக தொடரப் பட்ட பொது நல வழக்கு விசாரணையின்போது நீதி மன்றத்தில் அவர் சார்பாக வாதாடிய வக்கீல் அந்த தகவலை நீதியரசரிடம் சொன்னார். சின்ன வயதில் திருடன் போலீஸ் விளையாட்டில் அவர் திருடனாக மட்டுமே இருக்க முடிந்ததாம். அதனால் அவர் சோகமாக வேறு விளையாட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினாரர். பின்னர் சற்று எழுதப் படிக்க தெரிந்தபின், அவர் அறுவர் விளையாடும் 'ராஜா, ராணி, மந்திரி, சேவகன், திருடன் & போலீஸ்' விளையாட்டு விளையாடினார். அதிலும் ஒரு முறைகூட போலீசாக முடியவில்லை. எப்போதும்  திருடனாகவோ, சேவை செய்யும் சேவகனாகவோ வந்து சோகம் ததும்பும் நாட்களை வெறுப்புடன் சந்தித்தார். படித்து(!) போலீஸ் வேலைக்கு விண்ணபித்து, ஒவ்வொரு முறையும் பல்வேறு காரணங்களால் அவ்வேலை கிடைக்காததால் வாழ்வில் சோகமே தொடர்ந்தது. இந்த பழைய நினைவுகளால் உந்தப் பட்டு தன்னுடைய வலைமனையிலாவது 'போலீசும், சிரிப்பும்' இருக்கட்டுமே என அப்பெயர் வைத்தார் தனது கட்சிக்காரர் என்றும் வாதாடினார் அவ்வக்கீல்...... (
ரமேஷு.. எப்போ , எந்த கட்சில சேந்தீங்க..?)


--------------------

17 Comments (கருத்துரைகள்)
:

நாய் நக்ஸ் said... [Reply]

SOOOOOOOOOO SAD...:((

நாய் நக்ஸ் said... [Reply]

பிரபல (?) வலைஞர்----- பிரபல கொலைன்கர்

நாய் நக்ஸ் said... [Reply]

ஸ்டுடியோவிலிருந்து---இது வேறையா ???

தெரு முக்குட்டு போதாது ????

நாய் நக்ஸ் said... [Reply]

அப்ப சாப்பாட்டு விஷயத்தில்----????

நாய் நக்ஸ் said... [Reply]

ரமேஷி-இக்கு நீதிபதி,,வக்கீல்,,,இதலாம் கொஞ்சம் ஓவரா இல்ல ??

நாய் நக்ஸ் said... [Reply]

ரமேஷு.. எப்போ , எந்த கட்சில சேந்தீங்க..?)////

சாப்பாட்டு கட்சிலத்தான்???

Madhavan Srinivasagopalan said... [Reply]

@NAAI-NAKKS

6 கமேண்டு போட்டா மட்டும் போதாது..
ஒரு ஓட்டாவது போடணும் இன்ட்லி, தமிழ்10ல..

குறையொன்றுமில்லை. said... [Reply]

ஹா ஹா, நல்ல கற்பனை.

வெளங்காதவன்™ said... [Reply]

ஹி ஹி ஹி ஹி

RAMA RAVI (RAMVI) said... [Reply]

சிரிப்பு போலிஸ் பெயர் காரணத்துக்கான விளக்கம் நன்னயிருக்கே.. ஹா..ஹா..

Yaathoramani.blogspot.com said... [Reply]

விளக்கம் நல்லா இருக்கே
அருமையான கற்பனை
வாழ்த்துக்கள்

எஸ்.கே said... [Reply]

நல்ல கற்பனை!

Unknown said... [Reply]

மாப்ள ...ஹிஹி!

CS. Mohan Kumar said... [Reply]

ஒரு நல்லவரை போய்...ம்ம் சிரிப்பு போலிஸ் எங்க சார் இருக்கீங்க ?
**
மாதவா உனக்கு மட்டும் இன்ட்லி பட்டை இருக்கே எப்புடி ?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said... [Reply]

ரமேஷிடம் சிறப்புச் செய்தியாளர் கருத்து கேட்காதது ஏன்.?

TERROR-PANDIYAN(VAS) said... [Reply]

Present

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

Absent

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...