ரெண்டு கேள்விகள் சார்... தெரிஞ்சா பதில் சொல்லுங்க....
ஒண்ணு :
சின்னப் பொண்ணு.. யு.கே.ஜி படிக்கறா....
கணக்குல நம்பர் நூறுக்கு மேல சொல்லிக் கொடுக்கறாங்க..
one zero zero = hundred.. = 100
one zero one = one hundred one 101
......
....
...
one zero nine = one hundred nine = 109
one zero ten = one hundred ten = 1010
எப்படி சின்ன பொண்ணுக்கு புரிய வெப்பேன்.. அவ ரொம்ப கன்பியூஸ் ஆயிடுறா.
ரெண்டு
பையன் மூணாவது படிக்கறான்.. அவன் பொறந்த மாசம் சம்மர் ஹாலிடேஸ்ல வரும்..
ஸ்கூலுல மத்த பசங்கலாம் பிறந்த நாள் சாக்லேட் தராங்களாம்.. என்னோட சின்ன பொண்ணு, கூட பர்த் டே வந்தா சாக்லேட் கிளாஸ்ல டிஸ்ட்ரிபூட் பண்ணுவா.. அதெலாம் பாத்தா என்னோட பையனுக்கு வருத்தம்.... தன்னோட பிறந்த நாளுக்கு சாக்லேட் கொடுக்க முடியல..
போன வருஷம், நவம்பர் பதினாலு, குழந்தைகள் தினத்துல ஸ்கூலுல சாக்லேட் தர ஏற்பாடு பண்ணோம்.. அவனுக்கு அதில திருப்தி இல்ல.... அவன் இப்ப கேக்குறான்
"அம்மா பர்த்-டே வ செர்டிபிகேட்ல மாத்த கவர்மென்ட்கிட்ட அப்ளை பண்ணலாமா ?"
போன வாரம் பிரண்டு ஒருத்தரோட பேர மாத்த கவர்மென்ட் கிட்ட அப்ளை பண்ணி கேசட்ல பப்ளிஷ் பண்ணலாம்னு நாங்க பேசிக்கிட்டு இருந்தத காதால கேட்டதால இப்படி கேக்குறான் போல.. !!
15 Comments (கருத்துரைகள்)
:
:((
இன்னும் இருக்கு
காத்திருக்கவும் !!!!!
சிறுவர்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு நம்மிடம் பதிலே இருப்பதில்லை நண்பரே. முதலாம் வகுப்பில் படிக்கும் என் பெண்ணும் இப்படித்தான் எதையாவது கேட்டு வைக்க நான் என்ன சொல்வது என்று யோசித்து [முழித்து என்பதே சரி!], பிறகு பதில் சொல்வேன்...
one zero ten :)))))
Students learn at School while Parents learn at home through their wards!
:))))
ஸ்டூடண்டா கொக்கா
நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா...
பசங்கள்லாம் என்னமா யோசிக்கிறாங்க....?
குழந்தைகளுக்குதான் என்னென்ன மாதிரி குறைகள்? நெருங்கிய நண்பர்கள் சிலரை அழைத்து சாக்லேட் தரலாம். அக்கம்பக்கம் சாக்லேட் தரலாம்....கவுண்டரோட 'பெட்ரோமாக்ஸ் லைட்டே...தான் வேணுமா' மாதிரி அப்புறமும் அவன் ஸ்கூலில்தான் சாக்லேட் தரனும் என்று சொல்லாமலிருந்தால் சரி!
//தன்னோட பிறந்த நாளுக்கு சாக்லேட் கொடுக்க முடியல..//
லீவு நாளாக இருந்தாலும், நண்பர்கள், தெரிந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சாக்கலேட் கொடுக்கலாம். அதே போல் பிறந்த நாள் அன்று வெளியில் எங்காவது அவருக்கு பிடித்தமான இடத்திற்கு அழைத்து சென்று, பார், மற்றவர்களுக்கு பள்ளி நாட்களில் பிறந்த நாள் வந்தால் வெளியில் எங்கும் செல்ல முடியாது. உனக்கு பார், பிறந்த நாள் விடுமுறையில் வந்ததால் நாம் ஜாலியாக வெளியில் சென்று சுற்றலாம் என அவரை மத்தி யோசிக்க வையுங்கள். மாதவனுக்கு இதெல்லாம் சொல்லியா கொடுக்க வேண்டும்.
//one zero ten = one hundred ten = 1010 //
நீங்க தப்பு தப்பா சொல்லி கொடுத்தீங்கனா அப்படிதான் கேப்பார்கள்.
நயனுக்கு அப்புறம் டென் தான் வரும் என்று சொல்லுங்கள். சோ, zero ten = one hundered ten = 1010
:)))
குழ்ந்தைகள் எப்படில்லாம் யோசிக்கராங்க. நமக்குத்தான் விளக்கமா சொல்ல் முடியல்லே.
உங்க பையன் அழகா கேள்வி கேட்டிருக்கான். பெயர மாத்திக்கிரா மாதிரி பிறந்தநாளையும் மாத்திண்டா என்ன??
அவன் என்ன வேணுணாலும் மாத்திக்கட்டும் இப்ப நீங்க மாட்டிண்டு இருக்கீங்க, மாதவன்.
ஹா., ஹா., ஹா..!!!
மாட்னீங்களா..?!!
ஆமாம் இந்த மாதிரி விடை தெரியாமல் முழிப்பது கூட சுகம்தான். அனுபவிங்க...
நீங்கள் இதுக்கு சரியான விடை
சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள்
தருவதாக தைரியமாக முரசறிவிக்கலாம்
வலைச்சரத்தில் உங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன் - http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_01.html - முடிந்த போது பார்க்கவும்!
Post a Comment