அறிவிப்பு :
ஒரு வார காலமாக அலுவல் பணி நிமித்தமாக அசலூர் சென்றதால் வலைமனையில் நேரம் செலுத்த இயலவில்லை. ஒரு வார காலத்தில், எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் மறுமொழி / நன்றி சொல்ல இயலவில்லை. -- அனைவருக்கு நன்றிகள். அதே போல நான் பின்தொடரும் பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமோ, ஒட்டுக்களோ அளிக்க இயலவில்லை. -- இவற்றிற்காக போது மன்னிப்பு வேண்டும், உங்கள் 'மன்னையின் மைந்தருள் ஒருவன்'
-------------------
மன்னை எக்ஸ்பிரஸ் : (இனிமேல்தான் அனுபவிக்க வேண்டும்)
ஒரு காலத்தில் இயங்கிய எங்கள் ஊர் ரயில் நிலையம் எனக்கு நினைவு தெரிந்தது முதல் இயங்கவில்லை. அந்த சின்ன வயதில், எங்கள் ஊரில் ரயில் நிலையம் இல்லாததால், பேருந்தில் வெளியூர்களுக்கு செல்லும் வழியில் ரயில்வே கேட் கடக்கும் போது கேட் மூடப் பட்டிருந்தால், ரயிலை பார்த்து ரசிப்பேன். அவ்வளவு ஆசை ரயில் மீது. ஏக்கம் எங்கள் ஊரில் ரயில் நிலையம் இல்லாதது. கடந்த இருபத்தியேழாம் தேதி முதல் எங்கள் ஊரில் ரயில் நிலையம் ஆரம்பிக்கப் பட்டு, சென்னைக்கு நேரடியாக 'மன்னை' எக்ஸ்பிரெஸ் எனும் பெயரில் தொடர் வண்டி இயக்கப் படுகிறது. இனி எங்கள் ஊருக்கு செல்லும் போது நேரடியாக ரயிலில் செல்லலாமே ! Something to be happy about.
------------------
மும்பை எக்ஸ்பிரெஸ் ரயில் பயண அனுபவம்
அலுவல் பணி நிமித்தம் மும்பை சென்று ஊர் திரும்பும் வழியில், எனது நண்பரின்(!) செல்ஃபோன் காணாமல் போய்விட்டது. ஆதலால், (அவசியமாக!!)தேவைப்படும் போது எனது செல்ஃபோனை பயன் படுத்தலாமென (உதவி செய்வதாக நினைத்து) சொன்னேன். இருந்தாலும் அப்படியொரு நண்பர் இருக்க வேண்டாம்.. .. காலையில் சுகமாக தூங்கிக்கொண்டு இருந்த வேளையில் (சுமார் ஐந்தரை மணி போல) எனை எழுப்பி.. ஃபோன் வேண்டுமெனக் கேட்டார். தனது மனைவிக்கு ஃபோன் செய்து தான் காலையில் எழுந்து பல் தேய்த்து டீ குடித்து விட்டதாகவும் சொன்னார். இரண்டு மணிக்கொருதரம் எனது ஃபோன் மூலம், மனைவிக்கு லைவ் அப்டேட் செய்து வந்த வண்ணமிருந்தார். ரோமிங்கில் இது தேவையா? அதுவும் அடுத்தவரின் ஃபோனிலிருந்து இப்படி செய்வதா? கடைசி ஒரு மணி நேரத்தில் நான்கு முறை தனது மனைவிக்கு ஃபோனில் பேசியவண்ணம் பயணம் செய்தார். ஊர் வந்தவுடன், இறங்கிய பின்னரும் லேட்டஸ்ட் அப்டேட், எனது ஃபோன் மூலம்தான்.
இதெல்லாம் பரவாயில்லை.. கடைசியில் நன்றி கூட சொல்லாமல் ஆட்டோ பிடித்து பறந்து சென்றுவிட்டார். இத்தனைக்கும் இவர் புதுக் கணவர் அல்ல.. ஆறேழு வருட மண வாழ்க்கை அனுபவம் கொண்டவர்.
ஆண்டவா.. இனிமேல் இவருடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு வேண்டவே வேண்டாம்.. அப்படி தவிர்க்க முடியவில்லை என்றால், அவரது செல் ஃபோன் காணாமல் போக வேண்டாம். அட்லீஸ்ட் அவரோட செல்ஃபோன் பத்திரமாக இருக்க நான் பார்த்துக் கொள்ள வேண்டும்..
செல் ஃபோனால் வரும் தொந்தரவில் இதையும் சேர்த்துக் கொள்ளலாமா ?
டிஸ்கி : நல்ல வேளை.. அவரால இந்த பதிவ படிக்க முடியாது.. அவருக்கு தமிழ் தெரியாதில்ல.. !!
செல் ஃபோனால் வரும் தொந்தரவில் இதையும் சேர்த்துக் கொள்ளலாமா ?
டிஸ்கி : நல்ல வேளை.. அவரால இந்த பதிவ படிக்க முடியாது.. அவருக்கு தமிழ் தெரியாதில்ல.. !!
12 Comments (கருத்துரைகள்)
:
ரைட்-டு
ஆம் நண்பரே
பதிவு அருமை
அநாகரீகப் பட்டியலில் அவசியம்
இதையும் சேர்த்துக் கொள்ளலாம்
ஒரு சந்தோஷமான நிகழ்வு
ஒரு தர்ம சங்கடமான நிகழ்வு
சிரித்துக் கொண்டேஅழுவது போல
ஆனாலும் பதிவு சுவாரஸ்யம்
தொடர வாழ்த்துக்கள்
16179, 16180 இவை வண்டி எண்கள்! மண்ணை எக்ஸ்ப்ரஸ் செய்தி பார்த்ததும் உங்கள், ஆர் வி எஸ் நினைவுதான் வந்தது. அலைபேசி அனுபவம் கொடுமை. இப்படியும் மனிதர்கள்...!!
ஸாரி.... 'மன்னை ' மண்ணை ஆகி விட்டது!
Eagerly waiting for a foreign trip with you.
Dont forget to bring your cellphone and also i hope you are having international roaming facility!
:)))
ஆனந்த முதல் பயணத்தில் சொந்த செலவில் சூன்யம் ...
நல்ல வேளை.. அவரால இந்த பதிவ படிக்க முடியாது.. அவருக்கு தமிழ் தெரியாதில்ல.. !
ஹா, ஹா.
மன்னை எக்ஸ்பிரஸ்.... வாழ்த்துகள்....
செல்ஃபோன் தொந்தரவு... :(
//நல்ல வேளை.. அவரால இந்த பதிவ படிக்க முடியாது.. அவருக்கு தமிழ் தெரியாதில்ல.. !//
தைரியமா எழுதும்போதே நினைத்தேன்.... அவருக்குத் தமிழ் தெரியாது என....
அவரு போனா இருந்திருந்தா பேசிருக்க மாட்டாரோ ?
என் பக்கத்தில் சொன்ன மாதிரி நீங்க தில்லி வரீங்களா? அடுத்த மாதம் எப்போது? விவரங்களை எனது மடலுக்கு அனுப்புங்களேன்....
அருமை அருமை
மன்னைக்கு ரயில் விட்டதில் மிகவும் மகிழ்ச்சி
செல்போன் மேட்டர் vgood..:)
Post a Comment