கடற்படை தினம் - 2011

நன்றி : cityofvizag.com
1971ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி,  இந்திய கடற்படை பாகிஸ்தான் கடற்படை மீது, கராச்சி கடல்தளம் அருகில் அதிரடித் தாக்குதல் நடத்தி வெற்றி கண்டது. அதனை நினைவூட்டும் தினமாக கடற்படை தினம், விசாகப்பட்டினத்தில் வருடாவருடம் டிசெம்பர் நான்காம் தேதி கொண்டாப்படுகிறது. இவ்வருடமும் அவ்வாறு கொண்டாடப்படும் வேளையில் சென்ற வருடம் போல குடும்பத்துடன் சென்று கண்டு களித்து வந்தேன். சென்ற வருடம் அதனை ஒரு குறுஞ்செய்தியாக இந்தப் பதிவில் சொல்லி பின்னர் விளக்கமா எழுதுவதாகச் சொன்னேனே தவிர அதனை சொன்னதுபோல செய்யவில்லை. தற்போது சொல்லாமலே(No BuildUp), நேரடியாக அது பற்றி இந்தப் பதிவில்... 

பிற்பகல் மூன்றரை மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றோம்.. இல்லையென்றால் சரியான இடம் கிடைக்காதே. அகண்டு விரிந்த பீச்சாங்கரை என்றாலும் முக்கியமான நிகழ்ச்சிகளான பாம் வெடிப்பது, ஹெலிகாப்டலிருந்து கடலில் இருக்கும் சிறிய போட் மீதுள்ள ஆட்களை காப்பாற்றி ஹெலிகாப்டரில் ஏற்றுவது.. இதெல்லாம் பார்க்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட இடத்தில் முன்னரே சென்று இடம் பிடிக்க வேண்டும்.

சுமார், மாலை 4:30 மணியளவில் விண்ணை பிளந்து கொண்டு கடற்படை விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சிறிய இடைவெளி விட்டு வந்தபடி இருந்தன.
 
முன்பொருமுறை அகமதாபாத்தில் ஏர்-ஷோ (Air-Show) பார்த்திருக்கிறேன். விண்ணைப் பிளக்கும் சத்தத்துடன் சிறப்பு விமானங்கள் அதில் 'maneuvers '  எனப்படும் வேகமான குட்டிக் கரணங்கள் இருக்கும். அது விமானப் படையின் சாகசங்கள்.

இதிலோ, அந்தளவிற்கு விமான குட்டிக்கரண சாகசங்கள் இல்லை, இது கடற்படைதானே.  ஆனாலும் வேக வேகமாக விமானங்க சத்தத்துடன் கடற்கரை  வான்வெளியில் சென்றது பார்க்க நன்றாக இருந்தது. இடையிடையே சில ஹெலிகாப்டர்களும் வந்து சென்றது. விண்ணைப் பார்த்தபடியே இருந்த கண்கள் கீழே கடல் நீரில் கடற்படை கப்பல்கள் வருவதை முதலில் கவனிக்கவில்லை. ஆயினும் பரவாயில்லை, கப்பலின் வேகம் மிகவும் குறைவானதே.. அதனால் நன்றாக கப்பலை கவனிக்க முடிந்தது.. சுமார் இருபது கப்பல்கள் அணிவகுத்து சென்றன. அவசர வேலை இருந்தால் கல்யாணத்திற்கு சென்று 'தலை காண்பிப்பது' போல, ஒரு நீர்மூழ்கி கப்பலும் தலை(யை மட்டும்) காண்பித்தது. முழுவதுமாக வெளியே தெரிந்தால் அதனுடைய சிறப்பு வெளியே தெரியாமல் போய்விடுமே.
 


மன்னையில்(பிறந்த ஊர்)  இருக்கும் பெரிய குளக்கரையில் அமாவாசை, அந்தி சாய்ந்த வேளை, தெரு விளக்கு இல்லாத போது எதிர் தெருவில் இருக்கும் வீடுகளின் விளக்குகள் குளத்திலுள்ள நீர் மீது பிரதி பலிப்பதுபோல, கடற்கரையிலிருந்து சுமார் இருநூறு மீட்டர் தொலைவில், அக்கரையில் வரிசையாக வீடுகள் இருப்பது போல, கப்பல்களில் ஏற்றப்பட்ட மின்விளக்குகள் அழகாக கடல் தண்ணீரில் பிம்பமாகவும் தெரிந்தது. அந்த இருட்டு நேரத்தில் கடற்கரை மற்றும் மலைப்பகுதி சேரும் மேற்கு திசையிலிருந்து வான வேடிக்கைகள் சுமார் பத்து நிமிடம் நீடித்தது.. அத்துடன் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.....

மொத்தத்தில் வித்தியாசமான ஒரு மாலை நேரம், குடும்பத்துடன் கழிக்க முடிந்தது. இந்த ஊரில் இருக்கும் வரையில்.. இந்த நிகழ்ச்சியை வருடா வருடம் பார்த்தாலும் அலுப்பு தட்டாத ஒன்று என்றே தோன்றியது.

எதிரிகளிடமிருந்து நாட்டினை காக்கும் பொறுப்பில் இருக்கும் முத்தரப்பு  பாதுகாப்பு படை வீரர்களின் தொண்டும் (service), தியாகமும் (sacrifice) இந்தப் பதிவு எழுதும் / படிக்கும் போது நன்கு நினைவில் வருகிறது, இல்லையா ?
 --------------------------------------------------------

12 Comments (கருத்துரைகள்)
:

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

நல்ல அனுபவம் மாதவன், போட்டோக்கள் நீங்கள் எடுத்ததா?

ஷைலஜா said... [Reply]

அனுபவத்தை அழகா சொல்லிருக்கீங்க...

வெங்கட் நாகராஜ் said... [Reply]

நல்ல அனுபவம்... எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே....

நாய் நக்ஸ் said... [Reply]

Vedio-va pottirunthal
innum nalla irukkum....

குறையொன்றுமில்லை. said... [Reply]

நல்ல அனுபவம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ பன்னிக்குட்டி ராம்சாமி
மங்களா தெரியுற போட்டோ நா கிளிக் பண்ணது.. மத்ததுலாம் நெட்ல சுட்டது.

@ ராம்சாமி , ஷைலஜா, வெங்கட், நாய்-நக்ஸ், லெஷ்மி மேடம். -- நன்றி.. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் .

A.R.ராஜகோபாலன் said... [Reply]

’’’அவசர வேலை இருந்தால் கல்யாணத்திற்கு சென்று 'தலை காண்பிப்பது' போல, ஒரு நீர்மூழ்கி கப்பலும் தலை(யை மட்டும்) காண்பித்தது. முழுவதுமாக வெளியே தெரிந்தால் அதனுடைய சிறப்பு வெளியே தெரியாமல் போய்விடுமே.’’’

இந்த சொல்லாடலை மிகவும் ரசித்தேன் மாதவன்
அருமையான பகிர்வு

RAMA RAVI (RAMVI) said... [Reply]

அருமையான தகவல்கள்.படங்கள் அழகாக இருக்கு.பகிர்வுக்கு நன்றி,மாதவன்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ ARR -- >அந்த சொல்லாடல், நீங்கள் ரசிக்கும்படி இருந்தது கண்டு மகிழ்ச்சி நண்பரே.

@ Ramvi : ஏதோ... நம்மளால முடிஞ்சது பதிவா வந்திருக்கு..

ADHI VENKAT said... [Reply]

நல்ல பகிர்வு. படங்களுடன் நன்றாக இருக்கிறது.

எங்க ஊரு கோவையில் ரெட் பீல்ட்ஸ் என்று ஒரு இடமுண்டு. இது எங்கள் வீட்டிலிருந்து நடக்கும் தொலைவில் இருக்கும் இடம். இங்கு தரைப்படை,கடற்படை ஆகியவற்றின் பயிற்சித் தளம் மற்றும் விமானப்படையின் பயிற்சி கல்லூரி ஆகியவை இருக்கும். இங்கு சென்று கடற்படை தினம் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். ஆனால் கடலில் நடக்கும் சாகசங்கள் இப்போ உங்கள் பதிவில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

rajamelaiyur said... [Reply]

வாழ்த்துகள் ...
இன்று

விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.

ஸ்ரீராம். said... [Reply]

நல்ல அனுபவங்கள்தான். உண்மையில் சொல்லணும்னா எனக்கு இவற்றை உட்கார்ந்து பார்க்கப் பொறுமை இருக்காது. உங்கள் பதிவு பார்த்து/படித்து தெரிந்து கொண்டேன்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...