நிலவும் செருப்பும் :நேரிசை வெண்பா (சிலேடை )


உடன்சேர்ந்து வந்திடுமே, உள்ளங்கால் தொட்டும்;
நடவாசல் சேர்ந்திடினும், நாடா - விடங்காண் ;
உயர்வாய் மழலைகா ணோவியமுங் கொண்டச்
செயலில் நிலவாஞ் செருப்பு !

செருப்பு :
(1) உடன்சேர்ந்து வந்திடுமே : அணிந்து செல்லச் செல்ல நம்முடன் சேர்ந்துவரும்.
(2) உள்ளங்கால் தொட்டும் : உள்ளங்கால் கீழ், தொடுமாரு அணியப்படும்.
(3) நடவாசல் சேர்த்திடினும், நாடா - விடங்காண் ; நடக்கும் வாசற்படி வரை வந்தாலும்... வீட்டினுள் / கோவிலினுள் செல்லாது... கண்டாயோ !
(4) உயர்வாய்த் தெரியு மோவியமுங் கொண்ட : உயர்வான / போற்றக்கூடிய ஓவியம் தன மீது வரையப்பட்டிருக்கும்.(குழந்தைகள் செருப்பு)

நிலவு :
(1) உடன்சேர்ந்து வந்திடுமே : நடந்து / ஒடி / வாகனத்த்தில் செல்லச் செல்ல நம்முடன் சேர்ந்துவரும்.
(2) உள்ளங்கால் தொட்டும் : கால் நிலவு (பிறை நிலவு) வருமாயின் அது கண்டு உள்ளம் பாய்ந்து பறித்திடத் தொடும்படி ஆசையூட்டும்.
(3) நடவாசல் சேர்த்திடினும், நாடா - விடங்காண் ; நிலவு(ஒளி) நடக்கும் வாசற்படி வரை வந்தாலும்... வீட்டினுள் / கோவிலினுள் செல்லாது... கண்டாயோ !
(4) உயர்வாய்த் தெரியு மோவியமுங் கொண்ட: உயர்வான / போற்றக்கூடிய ஓவியம் தன மீது வரையப்பட்டதுபோல இருக்கும். (பாட்டி வடை சுடுவது கேட்ட குழந்தைக்கு.)

செயலில் நிலவாஞ் செருப்பு : இவ்வாறான செய்கையினால் / ஒத்த பண்பினால் நிலவுபோல் ஆகுமே செருப்பு.

4 Comments (கருத்துரைகள்)
:

ஸ்ரீராம். said... [Reply]


​கவிதையான மீள்வரவு! வெல்கம்! சே.. தமிழ்க்கவிதை சொல்பவருக்கு ஆங்கிலத்தில் வரவேற்பா? நல்வரவு!

middleclassmadhavi said... [Reply]

Superb! seruppum nilavum.... karpanaikku oru salute!

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி. முகப்புத்தகம்-'பைந்தமிழ்ச் சோலை'யில் சேர்ந்து பயின்று எழுதியது....

நெல்லைத் தமிழன் said... [Reply]

உள்ளங்கால் தொட்டும்; - கருத்தில் பிழை இருக்கிறது. பாடலின் கடைசி வரி,
"செயலில் நிலவாஞ் செருப்பு" என்பதற்குப் பதிலாக 'செயலில் நிலவொளியாஞ்ச் செருப்பு' என்று வந்திருக்கலாமோ?
அப்படி என்றால் மூன்றாவது வரியையும் மாற்றவேண்டிவரும். நிலவொளியில் நடந்து, நிலவு என் காலைத் தொட்டது என்று யாரும் சொல்லமாட்டார்கள்.

நல்ல முயற்சி.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...