சிலேடைக் குறள் வெண்பா


குறள்  வெண்பாவின் இலக்கணப்படி அமைந்தது..
ஈரடியாய், அடிக்கோர் பொழிப்பு மோனையமைந்தும், நாற்சீர், முச்சீராய் அமைந்தது.





********
உண்ணுமுண வாய்த்துள்ளி, ஊன்தாங்கு புள்ளிகளால்
கண்ணுவமை மீன்மானே, காண்

(1) உண்ணுமுன வாய் -- பிற உயிர்களுக்கு உணவாதலால்
(2) துள்ளி  --  துள்ளி குதித்து அங்குமிங்கு ஓடுவதால்
(3) ஊன்தாங்கு புள்ளிகளால் -- உடல் மீதமைத்த புள்ளிகளால்..
(4) கண்ணுவமை ::  அழகிய கண்ணிற்கு உவமையாகச் சொல்வதானால்...
'மீன்', 'மான்' போன்று இருப்பதை காண்பாயோ !
********

5 Comments (கருத்துரைகள்)
:

ஸ்ரீராம். said... [Reply]


​உண்ணுமுண வாய் என்று இருக்க வேண்டுமோ? - "ண"

வெங்கட் நாகராஜ் said... [Reply]

ண - அது தான் எனக்கும் தோன்றியது.

பாராட்டுகள்.

அப்பாதுரை said... [Reply]

நல்ல கற்பனை. சொல்லில் ஏதோ நெருடல்.
நயத்துக்கு பாராட்டுக்கள்.
மீன் மான் போலிருப்பதாகச் சொல்லியிருக்கலாமோ? மான் அத்தனை பரவலான உணவில்லையே?

நெல்லைத் தமிழன் said... [Reply]

சரியாகத்தான் இருக்கிறது. ஒப்புமை நன்று. 'மாரணம் அல்லது மாறணம்' - எது மானைக் குறிப்பது? (வதனமே சந்த்ர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ.... மாரணம்போல் நீள் விழியோ மதுர கானமோ)

அப்பாதுரை said... [Reply]

என்னாது? வதனமே சந்த்ர பிம்பமோவா?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...