அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் :
பன்னிரு ஆழ்வார்கள் : (விளம், மா, விளம், மா, விளம், காய் )
*************** ***************
சோழசே ரநாட்டொ டுபாண்டிய நாடு,
..தொண்டையில் கண்டதனை ;
ஆழ்கட லமுதை; நடுவட தேச
...மடைந்துதாங் கண்டதனை;
வாழவைக் குந்தெய் வந்தனை, விண்ணில்
...வைத்துவாழ்த் துப்பாடி;
ஆழமா யாழ்ந்த ஆறிரு ஆழ்வா
...ரவர்புகழ் போற்றுதுமே !
*****************
நன்றி : பைந்தமிழ்ச் சோலை, முகப்புத்தகம்:
"அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்."
(விளம்,மா,விளம் ,மா,விளம்,காய்)
பொது இலக்கணம்:
*************** ******
* ஆறு சீர்கள் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து,
* நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த இரண்டு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று, (ஆறு சீர்களை ஓரடியாகத் தொடர்ச்சியாகவும ் எழுதலாம்.)
* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,
* ஓரடிக்கு " விளம், மா, விளம்,மா,விளம், காய்." என்ற சீர் வரையறையைக் கொண்டும், நான்கடிகளைப் பெற்றும்,
* ஈற்றுச்சீர் ஏகாரத்திலோ அல்லது எப்படியும் முடியலாம்.
தனிப்பாடலாயின் (முத்தகம்) ஏகாரமே சிறப்பு.
தொடர்பாடலாயின்( குளகம்) இறுதிப் பாடலின் இறுதிச்சீர் ஏகாரம் பெறல் சிறப்பு.
விளச்சீரெனில் (முதல்சீர்.)கூவ ிளம், கருவிளம் இரண்டில் எதுவும் வரலாம்
மாச்சீர் எனில்தேமா, புளிமா எதுவும் வரலாம். காய்ச்சீர் எனில் எந்தக் காயும் வரலாம்.
***************************************
பன்னிரு ஆழ்வார்கள் : (விளம், மா, விளம், மா, விளம், காய் )
***************
..தொண்டையில் கண்டதனை ;
ஆழ்கட லமுதை; நடுவட தேச
...மடைந்துதாங் கண்டதனை;
வாழவைக் குந்தெய் வந்தனை, விண்ணில்
...வைத்துவாழ்த்
ஆழமா யாழ்ந்த ஆறிரு ஆழ்வா
...ரவர்புகழ் போற்றுதுமே !
*****************
நன்றி : பைந்தமிழ்ச் சோலை, முகப்புத்தகம்:
"அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்."
(விளம்,மா,விளம்
பொது இலக்கணம்:
***************
* ஆறு சீர்கள் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து,
* நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த இரண்டு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று, (ஆறு சீர்களை ஓரடியாகத் தொடர்ச்சியாகவும
* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,
* ஓரடிக்கு " விளம், மா, விளம்,மா,விளம்,
* ஈற்றுச்சீர் ஏகாரத்திலோ அல்லது எப்படியும் முடியலாம்.
தனிப்பாடலாயின் (முத்தகம்) ஏகாரமே சிறப்பு.
தொடர்பாடலாயின்(
விளச்சீரெனில் (முதல்சீர்.)கூவ
மாச்சீர் எனில்தேமா, புளிமா எதுவும் வரலாம். காய்ச்சீர் எனில் எந்தக் காயும் வரலாம்.
***************************************
2 Comments (கருத்துரைகள்)
:
'நல்லா வந்திருக்கு. ஆனால் முதல் வரி மாற்றி எழுதவேண்டும். பொது வழக்கு, 'சேர சோழ பாண்டிய நாடு, தொண்டை நாடு-இது திவ்யதேசத்துக்காகச் சொல்லப்படுவது.
சோழசே ரநாட்டொ டுபாண்டிய நாடு,
..தொண்டையில் கண்டழகை;
இதனை, சேர சோழ பாண்டிய நாட்டொடு தொண்டை வள நாட்டில் கண்டவழகை (இதில் சீர் நான் பார்க்கவில்லை.. ஆனால் இந்த வரிசையில் சீரொடு அமைப்பது சிறப்பு) என்று தொடங்கியிருந்தால் ரொம்ப நன்றாக அமைந்திருக்கும்.
@நெல்லைத் தமிழன்
ஆமாம் 'சோழ, சேர, பாண்டிய, தொண்டை ...' என்பதே மரபு. எதுகை வேண்டி
சேர என ஆரம்பித்தேன் . தங்கள் கருத்திற்கு நன்றி.
Post a Comment