சென்ற பதிவினை பார்த்துவிட்டு, கமென்ட் எழுதிய, சித்ரா, ஸ்ரீராம், வருடங்களுக்கு ஊகித்த, பெ.சொ.வி, பின்னர் அதனை சரியாக கணித்துபின்தொடர்ந்த, (கமெண்டு பகுதியில்) அனு, அருண்., இந்தப் பதிவினை எழுதிக் கொண்டிருக்கும்போது, சரியாகச் சொன்ன 'சாய்', ஆர்.வீ.எஸ் -- உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
இப்போது 'நவராத்திரி'/ 'கொலு' பற்றி ஒரு பார்வை..
மேலும் ஒரு படம்.. இதனை அந்த பதிவில் கொடுத்திருந்தால் கணிப்பது சுலபமாக இருந்திருக்கும்...
மேலும் ஒரு படம்.. இதனை அந்த பதிவில் கொடுத்திருந்தால் கணிப்பது சுலபமாக இருந்திருக்கும்...
'நவராத்திரி' / 'தசரா' என்றாலே நமக்கு 'கொலு' தான் ஞாபகம் வரும். சின்ன வயதில் முதலில் அக்கா மற்றும் அக்காவின் நண்பிகள், நண்பிகளின் தம்பிகள், ஆகியோருடன் இந்த ஒன்பது நாட்களிலும் எங்கள் குடியிருப்பு பகுதியில், 'கொலு' வைத்திருக்கும் வீடுகளுக்கு சென்று.... அவர்கள் பாடும்போது, Mr. பீனின் "HAAALELUUUUJA, HAALELUUUJA!!" போலத் தெரிந்த வார்த்தை வரும் பொது 'சத்தமாக' பாடி... முக்கியமாக பலவிதமான 'சுண்டல்' வாங்கி.., பல வருடங்களுக்கு முன்னர் நடந்த நல்ல பொழுதுகளின் நினைவு வருகிறது.
அந்த நாட்களில்.. எனது அக்கா, எனக்கு கிருஷ்ணன், ராமன், பெண், மற்றும் பலவிதமாக வேடமிட்டு அழைத்துச் செல்வார். அந்த நாட்களில் புகைப் பட கருவி, இல்லாததால் அந்த வேஷங்களை இப்போது உங்களுக்கு காண்பிக்க முடியவில்லை.... (நல்லவேளை.. தப்பிச்சேன்.. இல்லேன்னா அதெல்லாம் பாத்து கலாய்ச்சிருப்பீங்க)
பின்னர் சற்று வளர்ந்தவுடன்.... பெண்களுடன் செல்லத் தடை(நாங்களா போட்ட தடைதான்).... அதாவது.. எங்கள் நண்பர் குழு எங்களது தனித் திறமையை நிரூபிக்க.(வேஷம்லாம் கிடையாது. கெட்டப்பு, பாடுவது எல்லாமே ஒரிஜினல்தான்), ஆண்கள் மட்டுமே தனிக் குழுவாக அதே வீடுகளில் சென்று, (Mr. பீனின் "HAAALELUUUUJA, HAALELUUUJA!!" போலல்லாமல்), பாட்டுப் பாடி -- கொண்டாட்டம்தான். இதில் சில சமயங்களில் எனது அண்ணன் கூட வருவார். அவர் நல்லா பாடுவார், பாடல் எழுதுவார் -- வித்தியாசமான அனுபவங்கள்..
ஒன்பதாம் வகுப்புக்கு பின்னர் 'கொலு' வெல்லாம் எங்க வீட்டோடுதான். அதன் பின்னர் எங்களைப் போல வரும் குழுவிற்கு எங்கள் வீட்டில் அனுசரிப்பு நடக்கும். கண்டிப்பாக ரெண்டு பாட்டாவது பாடவேண்டும்.
நவராத்திரி வெள்ளிக்கிழமை 'இனிப்பு புட்டு' செய்வார்கள், அம்மா. ரொம்ப ருசியாக இருக்கும். நவராத்திரி-கொலு 'பெண்கள்' மற்றும் 'குழந்தைகள்' ஸ்பெஷல். ஆமாம் நா கொழந்தையா இருந்தப்ப என்ஜாய் பண்ணேன்.. இப்ப.. கொலு படி, பொம்மை செட் செய்வது நமது பொறுப்பாகிடுச்சு .... இந்த தடவை கொலுப் படி அரேஞ்சு செய்ய3 மணி நேரமாச்சு.... நான் வைத்திருக்கு அட்டைப் பெட்டிகளை (கார்ட்டன் பாக்ஸு) வைத்தே படி செட் பண்ணேன். என்னிடம் இருக்கும் பொம்மைகள் லைட் வெயிட் ஆனதுனால இந்த படியே போதும்.
ஆனால் எங்கள் அன்னை வைக்கும் கொலுவில், அந்தக் காலத்து பொம்மைகள் உயமாகவும் கனமாகவும் இருக்கும் . அதற்கு மரப் பலகை, ஸ்டீல் ப்ளைப் படிதான் சரியாக இருக்கும். ஏழு படிகள் வைப்பது எங்கள் வீட்டு வழக்கம். படிகளின் எண்ணிக்கை ஒத்தை படையிலிருக்கும், காரணம் தெரியவில்லை. அதனுடன், எனது அண்ணன் செய்யும் 'பார்க்', ரொம்ப நல்லா இருக்கும். பார்க்கில் விலங்குகள் (ஜூ), மனிதர்கள் (visitors), பப்ளிக் டெலிஃபோன், ராட்டினங்கள்.. பலவகை பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும். பக்கத்தில் 'ரயில்வே track', over-bridge, எல்லாம் இருக்கும்.
வெளியூரில் வேலைக்கு போன பின்னர், கொலு டச்சே (ஆமாம், கொலு வெச்சிட்டா நவராத்திரி முடியற வரைக்கும் 'டச்சு' பண்ணக் கூடாது...) இல்லாமல் இருந்தேன், எனது திருமணம் வரை. அதற்குப் பின் இல்லத்துனைவியுடன் 'கொலு' கொண்டாட்டம் ஆரம்பமானது. முதலில் மூன்று படிகளுடன் துவங்கிய கொலு, மூன்றாம் வருடம் ஐந்து படிகளானது..இந்த முறை ஒருசில பொம்மைகள் வைக்கவில்லை... அனேகமாக வரும் காலங்களில் மேலும் சில பொம்மைகள் வாங்கி ஏழு படியாக வைக்கவேண்டும்.
சரி.. கீழே உள்ள எங்கள் வீட்டு கொலுவை கண்டு, (கண்டிப்பாக) பாட்டு பாடி.. நீங்கள் செய்த சுண்டலை சாப்பிட்டு, நவராத்திரி கொலுவை கொண்டாடுங்கள்..
நன்றி..
நன்றி..
10 Comments (கருத்துரைகள்)
:
உங்க வீட்டில் மட்டும் இல்லை. எல்லார் வீட்டிலும் ஒற்றை படையில்தான் வைப்பார்கள்.. நல்ல விவரிப்பு. படம் அருமை
எங்க வீடு கொலுவையும் பார்க்கவும்
நல்லா இருக்கு. (எங்க வீட்டு சுண்டலும்தான்......)
நல்ல இருக்குங்க அனைத்துக் கொலு பொம்மை அலங்கரிப்பும் . ஆமா ! இந்த சுண்டல் எதுவும் தரமாட்டிங்களா !?
உங்கள் வீடு கொலு ஒன்பது படியாக வருங்காலத்தில் வளர்வதற்கு வாழ்த்துக்கள்.
நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!
ஆஹா..... அழகாக இருக்கிறதுங்க..... சூப்பர்!
அழகிய சுண்டல் காலங்கள்...
நவராத்திரி நல்வாழ்த்துக்கள்! எனக்கு எங்க சுண்டல்.
@ LK --- அதான் சார்.. என் ஒத்தை படை படிகள் ? உங்கள் வீடு கொலு லிங்க் தரவும்
@ பெ.சோ.வி .... ஒக்கே.. ரைட்டு
@ சங்கர் ..பாராட்டிற்கு நன்றி.. சுண்டல் இன்டர்நெட் மூலம் தரமுடியர காலம் வந்தாலும் வரலாம்.. அப்பா கண்டிப்பா தருகிறேன்.
@ ஸ்ரீராம், சித்ரா, RVS -- நன்றி
@ ஜெய்சங்கர் ஜெகந்நாதன் -- தங்கள் வாழ்த்துக்களை நந்தியோடு ஏற்கிறேன்..
(டு ஆல்) அடிக்கடி வாங்க..
Post a Comment