அவ்வகையில் எங்கள் ஊரில் அமைந்த பெரிய குளத்தில் தெப்பத் திருவிழா மிகவும் பிரசித்தம். பரந்து விரிந்துள்ள ஹரித்ராநதி எனும் குளத்தில் வருடா வருடம் ஆனி மாதம் பவுர்ணமி நன்னாளில் நடந்தேறும் இவ்விழா (Mannargudi Haridhranadhi Theppam), பத்து நாட்கள் கொண்டது. எட்டு நாட்கள் பாம்பு, கருடன், அனுமன், பல்லக்கு, குதிரை போன்ற வாகனத்தில் (பைக், கார், சைக்கிள், லாரி.. இதெல்லாம் நமக்குத்தான்.. ), ஸ்வாமியின் நகர் வலம் நடந்தேறும். ஒன்பதாவது நாளில் தெப்பத்தில் குளம் வலம் வரும் அவனை தரிசிக்கும் நமக்கோ குலம் வளம்.
தெப்பம் ஆடி ஆடி(ஆனி மாதத்தில்) அசைந்து குளத்தில் செல்வது தெப்பத்தினுள் இருந்தாலும், குளக் கரையில் இருந்து பார்த்தாலும் இனிமையாக இருக்கும். தெப்பம் குளத்தினுள் 3 முறை வலம் வரும். ஆனால் 3 முறையும் கரை ஓரமாகவே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக பாதி கரையின் வழியாக ஒருமுறை மட்டுமே செல்லும். மற்ற பாதி வழியாக இரு முறையும்.. மையத்தில் இருக்கும் மண்டபத்தை அடைந்து அதனை ஒட்டி ஒன்றரை முறையும் செல்லும்.. (மூணு -- கணக்கு சரிதான ?). மேலும் விளக்கம் படத்தில் இருக்கிறது.. பார்க்கவும்.
தெப்பத்தினுள் இருந்த படியே இரவு முழுவதும் தூங்காமல் வெண்ணில வானையும், இதமான இயற்கை குளிரையும் அனுபவித்த சுகமும் உண்டு. பின்னிரவின் பொது.. அதிக குளிர் ஆரம்பபமாகும். மைய மண்டபத்தில் சுமார் நாற்பது நிமிட ஓய்வும் கிடைக்கும்.
எனது சிறிய தகப்பனார் வீடு இந்த குளக் கரையின் வடக்குப் பகுதியில் இருப்பதால் அந்நாட்களில், நாங்கள் இவ்விழாவின்போது அவர் இல்லம் சென்று கொண்டாடி மகிழ்வோம். ஹரித்ராநதி நண்பர்கள் குழு ஒரு சமயம் இந்நாளில், பஜ்ஜி வகை கடை போட்டனர். (வருடம் மறந்து விட்டது). நான் சென்றபோது, எனக்கு இலவசமாகத் தந்தனர் உண்பதற்கு.
வேறு ஒரு வருடம் ம்ம்.. 1990 ல், தெப்பத் திருவிழாவின்போது உலகக் கோப்பை கால்பந்து இறுதியாட்டம் நடந்தது.. எனது சித்தப்பா வீட்டில் தெப்பத் திருவிழாவிற்குப் போன நான், இரவு இங்கிருந்தே உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நேரடி ஒளிபரப்பு பார்த்ததும் நினைவிற்கு வருகிறது. ஜெர்மனி அணி, அர்ஜென்டினானை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அன்று நடந்த விம்பிள்டன் போட்டிகளிலும் ஜெர்மன் வீரர் பெக்கர் ஆண்கள் பிரிவில் பட்டம் வென்றார் .. அதற்கு முதல் நாள் ஜெர்மனியின் ஸ்டேஃபிஃகிராப் பெண்கள் பிரிவில் பட்டம் வென்றார்.
வேறு ஒரு வருடம் 'மணல் கயிறு' திரைப் படம் -- சாலையின் நடுவில் பெரிய திரை கட்டி, ஓபன் ஏர் சினி-ஷோ, இலவசமாக.. மற்றொரு வருடம் 'தங்கப்பதுமை' படம்... ஒருமுறை நாட்டிய / கிராமிய / கலை நிகழ்ச்சிகள்.. ஒருமுறை திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி..
இப்படி வருடா வருடம் வெவ்வேறு விதமாக அமையும். இன்றைய இயந்திர வாழ்வில் வெளியூரில் உழன்று வரும் நான், எனது பிள்ளைகளுக்கு இந்த மாதிரி கொண்டாட்டங்களை நேரில் சென்று காண்பித்து யாம் பெற்ற மகிழ்வை, அவர்களுக்கு அளிக்க முடியவில்லையே..! ஆதங்கம்தான் வேறென்ன செய்வது தற்போது ?

இன்று (15 July) ஆனிப் பவுர்ணமி..
படங்கள் உதவி.. கூகிள் தேடல்.
தெப்பப் பாதை படம்.. சில படங்களை வைத்து நான் கணணி உதவியுடன், x -fig மூலம் உருவாக்கியது.
========================