ஊருல விசேஷங்க


என்னதான் சொல்லுங்க... எந்த ஒருத்தருக்கும், தான் பிறந்த ஊரும், வளர்ந்த ஊரும் ரொம்பப் பிடிக்குமுங்கோ.. அதுல, பிறந்து வளர்ந்தது ஒரே ஊரா இருந்தா.. சொல்லவே வேணாம்.. நம்ம ரஜினி காந்த் 'படையப்பா படத்துல சொல்லுற மாதிரி' ... 'ரொம்ப.. ரொம்ப.. ரொம்பவே' பிடிக்குமுங்கோ..

நா பிறந்து, வளர்ந்து.. படிச்ச (எனக்கு பிடிச்ச) ஊரு மன்னார்குடி. எங்க ஊருக்கே ரொம்ப பெருமை சேக்குற விஷயம், அழகான மதில்கள் சூழ்ந்த பெரிய கோவிலும் (மன்னார்குடி மதிலழகு), அதன் திருவிழாக்களும்.. ஆமாங்க, வருஷம் பூராவும் அதாவது எல்லா தமிழ் மாசத்துலயும், ஏதாவது ஒரு திருவிழா உண்டு, எங்க ஊரு கோவிலுல. இருந்தாலும் பல வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கும் 'கும்பாபிஷேகம்' ஒரு தனி விஷேஷந்தான ?

இது முன்னால 1995 ம் வருஷம் ஜூன் மாசத்துல 'கும்பஷிஷேகம்' ரொம்ப விமரிசையா நடத்தினாங்க.... அந்த நாள் ஞாபகம் இப்ப ரொம்ப வருது.. ஏன்னா.. நாளைக்கு (22 ஆகஸ்டு 2010), அதாவது 15 வருஷத்துக்கு அப்புறம், எங்க ஊரு பெரிய கோவிலுல 'கும்பாபிஷேகம்' நடக்க போகுது. நான் 1200 கிலோமீட்டருக்கு அப்பால இருந்தாலும், என்னோட மனசு மன்னர்குடிலதான் இருக்குது.. ஆமாம் நேர்ல இந்த விசேஷத்துக்கு போக முடியலேன்னு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.. இந்த விழாவில் பங்கு பெரும் அனைத்து மக்களும் என்னைப் பொறுத்தவரை ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க தான்.. எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு அவங்க மேல. இருந்தாலும், 'ஸ்ரீ செங்கமலத் தாயார் சமேத ஸ்ரீ ராஜகோபாலன்' (எங்கள் தெய்வம்) எப்பவுமே எங்களோட இருப்பதாக அணுவளவும் சந்தேகமின்றி சொல்லுவேன்.

மேலும் ஆர்வமிருந்தால் பின்வரும் வலை-நிலையங்களை பார்க்கவும்...
  1. http://www.thehindu.com/arts/history-and-culture/article582320.ece?homepage=true
  2. http://www.divyadesam.com/purana-temples/mannargudi-temple.shtml
  3. http://www.onlytravelguide.com/tamilnadu/spiritual/mannargudi-temple.php
  4. http://www.templenet.com/Tamilnadu/rajamann.html
அட தேவையில்லாம என்னத்தையோ சொல்லிப்புட்டு இருக்கேன்... சிம்பிளா கூகுள்ள 'மன்னார்குடி temple'ன்னு சர்ச் பண்ணத்தெரியாத உங்களுக்கெல்லாம் ?


திருவிழாக்களும், பண்டிகைகளும் மக்களை, மொழி-இன-மத வேறுபாடின்றி, மகிழ்வோடு வாழ வைப்பதற்கே என நினைத்து வாழும் உள்ளம்,
-- ஸ்ரீ. மாதவன்

எங்கள் மண்ணின் தெய்வத்தின் காலடியில், இப்பதிவினை சமர்ப்பிக்கிறேன்.

9 Comments (கருத்துரைகள்)
:

அருண் பிரசாத் said... [Reply]

நம்ம பொதிகைல லைவ் இல்லயோ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

எதுக்கும், நாளைக்கு காலைல எல்லா சானல்லேயும் ஒரு டிரை பண்ணிப் பாக்கலாம்.. யாரவது அப்புறம் நிச்சயமா 'யூ-டுபுல' போடுவாங்க..

நன்றி அருண்

ஸ்ரீராம். said... [Reply]

திருவிழாக்களும், பண்டிகைகளும் மக்களை, மொழி-இன-மத வேறுபாடின்றி, மகிழ்வோடு வாழ வைப்பதற்கே என நினைத்து வாழும் உள்ளம்...//

உண்மை...

கும்பாபிஷேகம் ஒரு இடத்தில், தெரியாதா என்று ஒரு இடத்தில் மாற்ற வேண்டும்!

புவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]

//திருவிழாக்களும், பண்டிகைகளும் மக்களை, மொழி-இன-மத வேறுபாடின்றி, மகிழ்வோடு வாழ வைப்பதற்கே என நினைத்து வாழும் உள்ளம்.//

அருமை.

CS. Mohan Kumar said... [Reply]

ஊர் நினைவை கிளறி விட்டுடீங்க

பெசொவி said... [Reply]

இந்த கும்பாபிஷேக விழாவினை நேரில் கண்டு களித்தேன். அற்புதமான அந்த தருணங்களைப் பற்றி நானும் எழுதப் போகிறேன்.

RVS said... [Reply]

மாதவா கவலையை விடு... பெ.சொ.வி எழுதுவார்.. லைவ் மாதிரி இருக்கும். படிக்கலாம் இன்புறலாம்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆறுமுகம் said... [Reply]

அண்ணே நானும் ஹைதராபாதில் தான் இருக்கிரேன். என்ன செய்ய பொழப்பு அப்படி.

ஆறுமுகம்

ஆறுமுகம் said... [Reply]

அண்ணே நானும் ஹைதராபாதில் தான் இருக்கிரேன். என்ன செய்ய பொழப்பு அப்படி.

ஆறுமுகம்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...