தேசியப் பார்வையில் நவராத்திரி - தஸரா

நவராத்திரி திருவிழா.. நான் இந்த போஸ்டுல சொன்னா மாதிரி நமக்கு கொலு-சுண்டல் தான் ஞாபகத்துக்கு வரும். நாம் கொண்டாடும் முறை பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

சற்று தமிழகத்தை விட்டு வெளியே சென்று இருந்த / இருக்கும் பொது, அந்தந்த  இடங்களில் நவராத்திரி, தஸரா , எப்படி கொண்டாடுகிறார்கள்,  எனத் தெரிந்துகொண்ட விஷயங்கள்.

குஜராத் :
நான் 11 வருடங்கள் குஜராத்தில்  இருந்திருக்கிறேன்.  இங்கு நவராத்திரி என்றால் ஆட்டமும் பாட்டும் தான்.. நவராத்திரி என்பதற்கு உண்மையான அர்த்தத்தை விளக்குவதுபோல.. எல்லா கொண்டாட்டங்களும் இரவு 9 -10 மணி முதல் ஆரம்பமாகி.. பின்னிரவு 2 -3 மணி வரை நடைபெறும். இங்கும் பெண்களுக்கான விழாவாக  இருந்தாலும்.. ஆண்களும் கலந்து கொள்ளுவார்கள். பாரம்பரிய ஆடை அணிகலன்களை போட்டுக் கொண்டு அவர்கள் ஒவ்வொரு இரவும் 9 அல்லது 10 மணி முதலில் 'ஆரத்தி' எனப்படும், வழிபாடு / பூஜையினை செய்து ஆரம்பிக்கும் ஆட்டமும், பாடும் பாட்டும் -- அவர்களது 'பாரம்பரியத்தினை பிரதிபலிக்கும்'.

'அம்பா மா' எனப்படும் அம்பாள் / அம்மன் அசுரணை அழிப்பதற்கு, 9 இரவுகள் தூங்காமல் தவமிருந்ததாகவும்.. அவளுடைய தவத்தினை போற்றும் வகையிலும், அவள் தூங்காமல் இருக்கவும் மக்கள், பாரம்பரிய நாட்டியம் 'கர்பா' ( gharbha - घर्भा ), என்ற ஆட்டம் ஆடிவருவதாகவும் சொல்லப் படுகிறது. பெரிய வட்டமாக, அம்பாளை மையமாகவும் சுற்றி வருவார்கள். நமது வழக்கமான 'பிரதக்ஷன' கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு,  முறைக்கு நேர் எதிராக (கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு என சுற்றுவார்கள்.


குஜராத்தில் தீபாவளி முடிந்த இரண்டாம் நாள் அவர்களது புத்தாண்டு தினம் வரும். ஆதலால், தீபாவளியை ஒட்டி அனைத்து கல்லூரிகள், பள்ளிகள் எல்லாம் மூன்று வாரங்கள் வரை விடுமுறை அளிக்கப் படும். ஆதாலால்.. காலாண்டுத் தேர்வுகள் முடிந்தாலும் இந்த நவராத்திரிகளுக்கு விடுமுறை இருக்காது. அப்படி பள்ளி கல்லூரி நாட்களிலும் இள வட்டங்கள் மிக்க ஆர்வமாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாகும் இந்த நாட்கள்.

புதிதாக திருமணம் ஆனவர்களும், திருமணம் நிச்சயிக்கப் பட்ட ஜோடிகளும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் இந்த விழாக்களில். நாளடைவில் காதலர்களும் ஜோடியாக ஆரம்பித்து விட்டனர் என்று அந்த ஊரு பாட்டிமார்கள் சொல்லியிருக்கிறார்கள், என்னிடம். நாளடைவில் இந்த விழாவும் விபாபார மார்கத்தில் செய்யப்படுவதாகவும் அந்த ஊர் பெரியவர்கள் சொன்னார்கள்.

தாண்டியா -- இது நமக்கு பிரியச்சமான 'கோலாட்டம்' தான். இதையும் வட்ட சுற்றுப் பாதையில் செய்வார்கள். நீங்கள் இந்த ஆட்டத்தினை சினிமாவில் பார்த்திருப்பீர்கள்.. (படம் : காதலர் தினம் -- 'தாண்டியா ஆட்டம் ஆட...' என்று துவங்கும் பாடல்)   குஜராத்தில் நடு இரவில் பெண்கள் கூட தனியாகப் போகலாம் என்பது கண்டிப்பாக இந்த தினங்களில் உண்மைதானென நான் எனது கண்ணால் பார்த்திருக்கிறேன்.

ஆந்திரா :
இரண்டு வருடங்களாக நான் ஆந்திராவில் இருந்து வருகிறேன். சென்ற வருடம் நமது தமிழ்நாட்டில் நவராத்திரியை கழித்ததால்.. இந்த வருடம் தான் இவர்கள் கொண்டாடும் முறை தெரிய வந்தது.

நான் இருக்கு பகுதியில் ஒரு 'கம்யூனிடி ஹாலில்', அம்பாளின் ஒருவத்தினை பிரதிஷ்டை செய்து தினமும் காலை, மாலை, பூஜை, புனஸ்காரம் செய்து.. பிரசாதம் விநியோம் செய்வார்கள். பின்னர் நடனம், பாட்டு, பஜன், போன்ற வித விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அம்பாளுக்கு வித விதமான அலங்காரங்கள் செய்து வருகிறார்கள். அந்த அலங்காரத்தில் என்னை மிகவும் கவர்ந்து, ஆச்சரியப் பட வைத்த ஒன்று நேற்றைய முன்தினம் நடந்தது. அம்மனுக்கு அளித்த அலங்காரம் சுமார் 20 லட்சம் மதிப்பிலானது.  அத புகைப்படத்தை கீழே கொடுத்துள்ளேன் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் அதன் மதிப்பை.... ஆனால் இந்த வித அலங்காரம் செலவினை குறைக்க உதவும்..  புரியவில்லையா ? படத்தினை பாருங்கள் புரியும்....


இதில் ஆயிரம், ஐநூறு, நூறு, ஐம்பது, இருபது, பத்து, ஐந்து, இரண்டு, ஒரு  -- புதிய கரன்சி ரூபாய் நோட்டுக்களைக் பயன்படுத்தியுள்ளனர். யூ.எஸ். டாலர் கரன்சியும் இருந்தது.... நன்றாக படத்தைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். பயன்படுத்திய பணங்களை மீண்டும் பயன்படுத்தலாமல்லவா? (so not an expenditure).

மேற்கு வங்கம் :
இங்கு தான் 'துர்க்கா பூஜா' ரொம்ப பிரபலம் எனக் கேள்வி பட்டிருக்கேன். இந்தப் பகுதிக்கு இது வரை செல்லும் வாய்ப்பு கிடைக்காதலால் அது பற்றி விரிவாக எழுத முடியவில்லை. மேலும் விபரங்களுக்கு இந்த லின்க்கினை  கிளிக்கவும்.

மைசூர் தசரா :

மைசூர் அரண்மனை - தசரா - யானைகளின் அணிவகுப்பு.. மன்னர் காலத்து முறை கொண்டாட்டங்கள்..  இதை பற்றியும் எனக்கு அனுபவமில்லை. கொடுக்கப்பட்ட இந்த லிங்க்குகளை பார்த்து மேலும் அறியவும்.

நன்றி..

10 Comments (கருத்துரைகள்)
:

R. Gopi said... [Reply]

நீங்க ONGC லதானே வொர்க் பண்றீங்க

புவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]

அம்பாள் படம் மிக அருமை.

Madhavan Srinivasagopalan said... [Reply]

கோபி : இல்லை நண்பரே.. நான் ONGC யில் இல்லை.

புவனேஸ்வரி மேடம்:அமாம், கொள்ளை (?) அழகு..

பெசொவி said... [Reply]

ரொம்ப அருமையாக சொல்லியிருக்கிறாய், வாழ்த்துகள்!

சாய்ராம் கோபாலன் said... [Reply]

அழகு மாதவன். குஜராத்தும், கல்கத்தாவும் எனக்கு தெரிந்து விமரிசை.

// Gopi Ramamoorthy நீங்க ONGC லதானே வொர்க் பண்றீங்க என்ற கேள்விக்கு, "இல்லை நண்பரே.. நான் ONGC யில் இல்லை.''//

என்று மட்டும் சொல்லி நீங்கள் எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்று சொல்லாமல் விட்டது, ஒரு மலையாள ஜோக்கை நினைவுப்படுத்தி விட்டது !! தவறாக நினைக்காமல் சிரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

பெங்களூரில் சிவாஜி நகர் அருகில் ஒரு இளைஞர்கள் தாங்கும் விடுதியில் நடந்த உண்மை சம்பவம்.

- அங்கே என் நண்பர்கள் லேட் எண்பதுகளில் நிறைய பேர் தங்கி வேலை பார்த்து வந்தார்கள். கேரளா மாநிலத்து நண்பர்களும் உண்டு.
- ஒவ்வொரு தளத்துக்கும் ஒரே ஒரு பொது குளியலறை தான் அங்கு
- காலையில் குளிக்க ஏக பிஸியாக இருக்கும்
- காலையில் குளிக்க துண்டுடன் வந்த ஒருவர் உள்ளே குளிக்கும் சத்தம் கேட்டு வெளியிலருந்து

"ஜகோப்போ" என்று கேட்டார்
உள்ளே இருந்து - "இல்லை" என்று பதில்
"கூரியனோ" மறுபடியும் "இல்லை"
"மத்தியாசோ" மறுபடியும் "இல்லை"
"டேவிட்டோ" மறுபடியும் "இல்லை"
"ஜோசெபோ" மறுபடியும் "இல்லை"
"பிலிப்போ" மறுபடியும் "இல்லை"
"கூரியன் தமொசோ" என்றதும்

"அதே !!" என்று பதில் !!

RVS said... [Reply]

தஸரா டாக்குமெண்டரி அருமை மாதவா... விவரங்களுக்கு நன்றி.

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி பெ.சோ.வி & ஆர்.வி.எஸ் --

நன்றி சாய்.. உங்கள் ஜோக்கு ரசித்து சிரிக்கும்படி இருந்தது.. நண்பர் ஆர்.கோபி எதோ ஒரு guess ல் அவ்வாறு கேட்டிருக்கலாம்.. எனவே அப்படி நான் பதிலளித்தேன்.. அவர் என்னிடம் 'எங்கு வேலை பார்க்கிறேன் / இருக்கிறேன்' என கேட்காதளால் நேரடியாக பதிலளிக்கவில்லை..

ஸ்ரீராம். said... [Reply]

நல்ல பகிர்வு...தாண்டியா ஆட்டமும், மேற்கு வாங்க "துர்கோ பூஜோ" பற்றியும் சேனல்களில் பார்த்திருக்கிறேன். இந்து கூட கங்குலி 'மந்திரு'க்கு வருகை தந்து விளக்கம் தந்தார்.

எஸ்.கே said... [Reply]

புதிய தகவல்கள்! நன்றி! இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!

Chitra said... [Reply]

நிறைய தகவல்களை தொகுத்து தந்து இருக்கீங்க... வாசிக்க சுவாரசியமாக இருக்குது.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...