ராத்திரியில் சூரியன்

இந்தியாவில் வருடத்தில் இரண்டு நாட்கள் இரவில் சூரியன் வரும்.. எங்கு தெரியுமா ?

முன்னுரை :
நள்ளிரவு சூரியன் (Midnight Sun) நாடு எது உங்களுக்குத் தெரியுமா ?
'நார்வே' என்று நீங்கள் படித்திருக்கலாம்.
கனடா, அலாஸ்கா (யு.எஸ்), டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து, ரஷ்யா போன்ற பகுதிகளும் இந்த வகையில் இருப்பதாக விக்கிபீடியா சொல்லுகிறது. இந்தப் பகுதிகள் ஏன் இப்படி அழைக்கப் படுகிறது என்பதையும் விவரமாக சொல்லுகிறது. 
ராத்திரி சூரியன் - நார்வே
சரி இப்போது முதல் வரியில் சொன்ன கேள்விக்கு வருகிறேன். தமிழ் நாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி(மதிலழகு) என அழைக்கப் படும் ஊரில், ஹி.. ஹி.. பில்ட் அப் போதுமா.. நா பொறந்த வளர்ந்த ஊருதான்..  அங்க தான் ராத்திரியில் சூரியன் வரும்.. அதுவும் வருஷத்துல ரெண்டு நாளு வரும்.. 

அந்த ரெண்டு நாளுல ஒரு நாள் -- இன்றே.. இன்றுதான்.. ( 1st ஏப்ரல் 2011 ). அட.. உங்களலாம் முட்டாளாக்க இப்படி சொல்லலை.. உண்மையத்தான் சொல்லுறேன். அட நம்புகப்பா..  நம்புங்க.. நா அந்தளவுக்கு டுபாக்கூர் ஆசாமி இல்லை.

ஊர் பேரு ராஜ மன்னார்-குடி, 'குடி' என்றால் கோயில், தெலுங்கு மொழியில். எங்க ஊரு ராஜா ஸ்ரீராஜகோபாலஸ்வாமிக்கு, பங்குனிப் பெருவிழா என்று வருடந்தோறும் திருவிழா வரும். பங்குனி மாதத்தில் ரோஹிணி  நக்ஷத்திரம் வரும் நாளில் தோரோட்டம் நடைபெறும். அது இவ்விழாவின் பதினேழாவது நாளாகும்.  அதாவது தேரோட்ட நாள் வருவதைப் பொறுத்தே மற்ற விழாநாட்கள் அமையும். முதல் பதினெட்டு நாட்கள் வெளி உலாவிலும் பின்னர் பன்னிரண்டு நாட்கள் கோவிலுக்கு உட்பட்ட வெளிப் புறத்திலும், ஆக ஒரு மாதம் முழுவதுமாக கொண்டாட்டம்தான். இறுதி நாளான முப்பதாவது நாளில் தெப்பத் திருவிழா அமையும்.

அந்த விழா நாட்களில் ஒருநாள், அதாவது பத்தாவது நாளில் சூரியப்ரபை எனும் வாகனத்தில் எங்களூர் அரசர் அமர்ந்து வருவார். இந்த நிகழ்ச்சி இரவில் நடைபெறும். அதாவது சூரியனின் மீதமர்ந்து இரவில் வீதி உலா வருவார் எங்க மஹாராஜா. இந்த வருடம் அத்தகைய நாள், இன்றேயாகும். அந்த ராத்திரி சூரியனைப் பார்க்க வேண்டுமா.. இதோ வலது புறத்தில், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளால் செய்யப்பட்ட சூரிய வட்டத்தின்(சூர்யப்ரபை)  நடுவே புல்லாங்குழலூதும் கண்ணன், எங்களூர் மன்னன்.
 
டிஸ்கி :
படங்களுக்கு நன்றி ---
======================================

11 Comments (கருத்துரைகள்)
:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

ur DMK. Right?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

நல்லா பாருங்க.. நா சொன்னது ராத்திரி சூரியன்....
இது வேற.. நீங்க பாத்திருக்க மாட்டீங்க..

கோமாளி செல்வா said... [Reply]

vadai

கோமாளி செல்வா said... [Reply]

இந்தப் பதிவிலிருந்து வரும் நீதி என்னவோ ?

# கவிதை வீதி # சௌந்தர் said... [Reply]

ம்.. நடத்துங்க..

# கவிதை வீதி # சௌந்தர் said... [Reply]

///
கோமாளி செல்வா said... [Reply] 4

இந்தப் பதிவிலிருந்து வரும் நீதி என்னவோ ?
//

அதை அடுத்த பதிவில் சொல்லுவார்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கோமாளி செல்வா

மொக்கையும் மொக்கை சார்ந்த பதிவுகளுக்குமே நீதி (தனியாக) இருக்கும். இந்த மாதிரி பதிவிற்கெல்லாம் நீதி அந்தந்தப் பதிவேயாகும்..

ஸ்ரீராம். said... [Reply]

பெருமாளே....

cho visiri said... [Reply]

//ரோஹினி//

It is no Irandu Suzhi Ni. It should have been Moodru suzhi Ni.

cho visiri said... [Reply]

//ரோஹினி//
t is not Irandu Suzhi Ni. It should have been Moodru suzhi Ni.

Gopi Ramamoorthy said... [Reply]

எது எப்படியோ பெருமாள் சேவை ஆச்சுது. நன்றி

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...