Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

நான் -ஸ்டாப் நான்சென்ஸ் !


ஒரு முறை செல்வா வேலை நிமித்தமாக சென்னைக்கு அருகில் இருக்கும் கூடுவாஞ்சேரி  செல்ல நேரிட்டது. அவர் இருக்கும் ஊரிலிருந்து கிளம்பி சென்னைக்கு நேரடியாச் செல்லும் பேருந்தில் செல்வா ஏறிக்கொண்டார். கண்டக்டர் வந்ததும், அவரிடம். 

செல்வா     : இந்த பஸ் சென்னை போகும்தான ?

கண்டக்டர் : போர்டை பாக்காம ஏற வேண்டியது.
கேள்வியப் பாரு.. கேள்விய.. ம்ம்.. போகும்.. போகும்.

செல்வா     : கூடுவாஞ்சேரி வழியாத் தான போகும் ?

கண்டக்டர் : போகும்.. ஆமா.. அமா..    ம்ம்..  வந்துட்டானுக.. கூடுவாஞ்சேரி.. கூம்மிடிப்பூண்டினு.. சொல்லிக்கிட்டு..

செல்வா     : எனக்கு கூடுவாஞ்சேரி ஒரு டிக்கட் தாங்க.

கண்டக்டர் : ஸ்ஸ்ஸ்.. கூடுவாஞ்சேரிலாம்  நிக்காது..  ஒன்லி சென்னை டிக்கெட் தருவேன்..  சென்னை மட்டும் ஏறு..

செல்வா     : ஏன். ஏன்.. அது வழியாத் தான போகுது.. அங்க போனதும் வண்டிய நிறுத்த வேண்டியதுதான.. நா இறங்கிப்பேன்..

கண்டக்டர் : இவரு பெரிய ------------------ ? வந்துட்டானுக.. யோவ், இது 'Non-Stop' வண்டி.. மொதல்ல முன்னாடி போயி  போர்டைப் பாத்துட்டு வா..

செல்வா முன்புறம் சென்று 'சென்னை' மற்றும் 'Non-Stop' போர்டுகளை பார்த்து விட்டு கண்டக்டரிடம் மீண்டும்..

செல்வா : இது 'Non-Stop' தான். ஆனா,  அதுக்கு என்ன அர்த்தம் ?

கண்டக்டர் : அப்படிக் கேளு.. ஜிம்பலக்கடி பம்பா.. -- இந்த வண்டி கெளம்பினா எங்கயுமே நிக்காது.... அதாம்பா.. நோ ஸ்டாப்பு.. -- நான் ஸ்டாப்பு..

செல்வா : அப்போ சென்னையில  மட்டும் எப்படி நிக்கும் ?

கண்டக்டர் : (கடுப்பாகி) ம்ம்.. சென்னை போன ஒடனே.. இந்த போர்டை எடுத்துடுவோம்..  வண்டி தானா நின்னுடும்..

செல்வா : (நன்றாக யோசித்து) ஓகே.. எனக்கு சென்னை ஒரு டிக்கட் கொடுங்க.. நா கூடுவாஞ்சேரில இறங்கிக்கறேன்..

கண்டக்டர் : யோவ்.. சொல்லுறது புரியலையா.. அங்க வண்டி நிக்காது..

செல்வா : அத நா பாத்துக்கறேன்.. நீங்க டிக்கெட் கொடுங்க..

பயணம் இனிதே(!) ஆரம்பித்தது ..
------------------------- தொடர்ந்தது..

இன்னும் சற்று நேரத்தில் கூடுவாஞ்சேரி வரவிருந்தது..

செல்வா தனது மூட்டை முடிச்சுக்களை எடுத்துக் கொண்டு.. வண்டியின் முன்புறம் நோக்கி நடந்தார்.. நேரே சென்று 'Non-Stop' என்று எழுதி இருந்த பலகையை எடுக்க முயற்சித்தார்.. பலனில்லை.. போல்ட் நெட் போட்டு இரும்புப் ப்ளேட்டில் நன்கு  ஃபிக்ஸாகி இருந்தது. 

திடீர் யோசனை..  உடனே செயல் படுத்த செல்வா ரெடி..

தனது பையிலிருந்து ஒரு  ப்ளாங்க்   பேப்பர் மற்றும் ஃபெவி-ஸ்டிக் எடுத்தார். பேப்பரில்  ஒரு பக்கம் ஃபெவி-ஸ்டிக் தடவி பலகையில் எழுதி இருந்த 'Non-' என்பதன்மேல், பேப்பரை ஒட்டும் பணியில் தீவிரமாக இறங்கினார்....
============================ 

சுத்தமா ஒழுக்கத்த ஃபாலோ பண்ணு..

நண்பரோட வீட்டுக்கு போயிருந்தேன்..
நண்பர் அவரோட ஏழு வயசு பையனுக்கு ஒழுக்கம் கத்துக் கொடுத்துக் கிட்டு இருந்தாரு.  அட.. நல்லதுதான.. காது கொடுத்து கேட்டேன் அவர் சொல்லுறத..

"நல்லா கேட்டுக்கோ.. எந்த இடத்துக்குப் போனாலும், அங்க ஏதாவது எழுதி இருந்தா சரியா அத கடை பிடிக்கணும்..... உதாரணமா.. லைப்ரரில 'Silence / சத்தம் செய்யாதீர்'னு இருக்கும்.. அங்க அமைதியா இருக்கணும்..,  'வரிசையில்  வரவும் / Q ப்ளீஸ்' னு எழுதி இருந்தா' -- ஒழுங்கா வரிசையா போகணும்..."

இப்படி ரெண்டு மூணு உதாரணம் சொல்லிக்கிட்டு இருந்தாரு... அவரோட பையனும் கவனமா கேட்டுக் கிட்டு இருந்தான். அஹா.. நாமளும் நம்ம பையனுக்கு இப்படிலாம் சொல்லித் தரணும்னு தோணிச்சு எனக்கு.
--------------
அப்புறமா வேற ஒரு நாள், நாங்க ரெண்டுபேரும் குடும்ப சகிதமா, ஈவினிங் டின்னருக்கு ஒரு ஹோட்டல் போயி சாப்பிட ஆர்டர் பண்ணிட்டு காத்திருந்தோம். நண்பரோட பையன் சாப்புடுறதுக்கு முன்னாடி, 'கை'ய சுத்தம் செய்யணும்னு சொன்னான்.  ஆமாம்.. ஒழுக்கம், சுத்தம் அதலாம் சரியான அளவுல கலந்து, கரைச்சு குடிச்சவனாச்சே..

அவன் கை அலம்பப் போயி நாலஞ்சு நிமிஷம் ஆகியும் எங்களோட டேபிளுக்கு திரும்ப வரலை.. நானும், நண்பரும் கை அலம்பற இடத்துக்கு போயிப் பாத்தா.. அவரோட பையன் அங்க இருந்த Basina சுத்தமா துடைச்சிக் கிட்டு இருந்தான்.. (அடப்பாவி.. இவ்ளோ சுத்தம் தேவையா).

நண்பர் அவன்கிட்ட எதுக்குடா அத சுத்தம் செய்றனு கேட்ட உடனே.. பையன் மேல என்ன எழுதி இருக்குனு பாருங்கன்னு சொன்னான்..  அங்க என்ன எழுதி இருந்திச்சின்னா..

"WASH BASIN"
 
டி(இ)ஸ்கி :
  1. து செல்வா கதைகளுக்கு எதிர் பதிவு என யார் நினைத்தாலும், கம்பெனி பொறுப்பில்லை.. சொல்லிப் புட்டேன் ஆமா. 
  2. ருந்தாலும் WASH & BASIN க்கு நடுவில 'gap' கொடுத்தது போர்டு எழுதின ஆளோட தப்புத்தான.. பையன் என்ன செய்வான்.. 
  3. து பத்து வருஷத்துக்கு முன்னால வந்த இ-மெயில் (சர்தார்) ஜோக்க உல்டா பண்ணி எழுதினது..

தலைகீழ்

ஃபைட்டர் ஏர்-க்ராஃப்ட் சுத்தி பறக்கும்.. ரவுண்ட் அடிக்கும் (ரெண்டும் சேம்?).. சில சமயம் அது போகுற ஸ்பீபீபீபீபீடுல தலைகீழாவும் பறக்கும். அப்படி ஸ்பீபீபீபீபீடா பறக்குறப்ப, நேர பறக்குதா இல்லை தலைகீழப் பறக்குதா அப்படீன்னு அத ஓட்டுற பைலட்டுக்கே சந்தேகம் வந்திடுமாம். அப்ப அவங்க ராடார் கண்ட்ரோல் ரூமுக்கு காண்டாக்ட் பண்ணி கேட்பாங்களாம். கண்ட்ரோல் ரூமுலேருந்து 'ஏர்-க்ராஃப்ட்' தெரியாது. எப்படி சரியா பதில் சொல்ல முடியும் ? யோசிங்க.. யோசிங்க. விடை கடைசில சொல்லி இருக்கேன்.

உங்களுக்கு 'a b c d ....' தலைகீழ அதாவது ரிவர்ஸ்ல வேகமா சொல்லத் தெரியுமா ? டைப் ரைட்டிங் கிளாசுக்கு போனவங்களுக்கு பெரும்பாலும் தெரிஞ்சிருக்கும். எனக்கும் சொல்லத் தெரியும்.... ம்ம்ம்ம். நம்பமாட்டீங்களா ? இதோ, இந்த ஆடியோ க்ளிப்பிங்க கேளுங்க.. (கீழே இருக்கும் முக்கோண / play / replay பட்டன க்ளிக் பண்ணுங்க )


எனது குரலில் zyxwvu .....
 
என்னோட பிரண்டு ஒருத்தன்... நா, தலைகீழ சொல்லுறதக் கேட்டு, 'இதென்ன பிரமாதம் நானும்தான் தலைகீழ 'a b c d ..' சொல்லுவேன் அப்படீன்னான். எனக்கு ஆச்சர்யம். அவன்தான் டைப்ரைடிங் கிளாஸ்லாம் போகலியே, எப்படி சொல்லுவான்னு கேட்டுப் பாத்தேன். சிரசாசனம் செய்தபடியே (தலைகீழ நின்னுக்கிட்டு, 'a b c d .'னு ஆரம்பிச்சு 'z' வரைக்கும் சொல்லி  ஏமாத்திட்டான்.

"இதெல்லாம் போங்கு ஆட்டம். நீ சிரசாசனம் பண்ணாம சொல்லனும்" னு சொன்னதுக்கு, அவன் என்னை தலைகீழ நிக்கச் சொன்னான்..

என்ன செய்யப் போறான்னு புரியாம நா தலை கீழ நின்னப்ப, அவன் மறுபடியும் 'a b c d .. 'னு  ஆரம்பிச்சிட்டான்..

என்னடான்னு கேட்டா, 'இப்ப உன்னைப் பொறுத்த வரை நான் தலைகீழ இருக்கேன். 'a b c d .. ',  இப்ப சொன்னா, 'தலை கீழ',  'a b c d ....' சொன்ன மாதிரிதான..  அப்படீங்கறான்.

இதுக்குத்தான் 'ஐன்ஸ்டானோட  ரிலேடிவிடி தியரி' ரொம்ப படிக்கக் கூடாது.. சரிதான ? 

சரி.. சரி. மொதல்ல கேட்ட கேள்விக்கு பதில் (தகவல்) :

கண்ட்ரோல் ரூம்லேருந்து, பிளேன 'லெஃப்ட்'ல திரும்பச் சொல்லிட்டு மானிட்டர்ல ப்ளேன் (புள்ளியாத்தான் தெரியும்) 'லெஃப்ட்'ல திரும்பினா, ப்ளேன்  நேர பறக்குது.. ஆனா 'ரைட்' சைடுல திரும்பினா, தலைகீழ பறக்குதுன்னு சொல்லுவாங்களாம். இந்த தகவலை 'ஏர்-ஃபோர்ஸ் ராடார் கண்ட்ரோல்' யூனிட்ல வேலை செஞ்ச நண்பர் ஒருத்தர் எனக்குச் சொன்னார்.

டிஸ்கி : நன்றி நவிலல்
 * mp3 எம்பெட் செய்ய டிப்ஸ் கொடுத்த நண்பர் எஸ்.கே விற்கு...
 * mp3 ஸ்டோரேஜ் கொடுத்துதவும் முஜிபோ வலைதளத்திற்கும்...
 *  ஏர்-ஃபோர்ஸ் நண்பருக்கும்..
================================

ஹிந்தி வாத்தியாரு..

ஒரு படத்துல, வடிவேலோ, செந்திலோ... ஹிந்தி தெரியும்னு சொல்லிக்கிட்டு திரிவாரு..'இதர் ஆவோ' (இங்க வாங்க), அதுக்கு மட்டுமே அர்த்தத்த தெரிஞ்சுகிட்டு, 'அங்கிட்டு போங்க' ன்னு சொல்லுறதுக்கு ஹிந்தில என்னான்னு கேட்டா.. கொஞ்சம் தூரக்க போயிட்டு, அங்கேருந்து நம்மள 'இதர் ஆவோ'ன்னு கூப்புடுவாரு...

இங்ககூட நம்ம ஹிந்தி வாத்தியாரு, எப்படி அர்த்தம் சொல்லுறாரு பாருங்க. சரியான அர்த்தம் '( )'ல இருக்குது.

ஓவர் (ஆமாம் ரொம்ப ஓவருதான்..) டு 'ஹிந்தி வாத்தியார்'



டு









ஸ்டார்ட்
மியூசிக் :

1)
தும்
கோன் ஹே(ய்) )?
தும்மலோட 'கோணி'கிட்ட போலாமா ஐயா?
(நீ யாரு ?)

2)
ஆப் கிதர் கயதே ?
ஆப்பு வெச்சது கிரிதர் 'கைதயா' (கழுதையா)?
(நீங்கள் எங்கு சென்றீர்கள்)

3)
ஹம் சாத், சாத் ஹே !
ஹூம்.. சாத் சாத்ணு சாத்திட்டானே !
(நாம் கூட்டு கூட்டாக இருப்போமே !) ['சாம்பார்' யார்ன்னு கேக்கப்டாது]

4)
அச்சி ஹவா ஆத்தீ ஹே .
அச்சுல அவ(ள்), 'ஆத்தா' போல இருக்குறா.
(நல்ல காற்று வீசுகிறது)

5)
ஏக், தோ, தீன், ச்சார், பாஞ்ச்.. வாரே, வாரே, வாஹ்.
ஒரு தபா, 'ஸாரு', 'தீ'யில பாஞ்சு வெளியே வந்தாரு.
(ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு.. ஆஹா, ஆஹா.. அற்புதம்.)