நான் போட்ட சதம்..

ஒரு அரசன் தன்னை புகழ்ந்து கவிதை பாடிய புலவரைப் பாராட்டி,
"சற்று நேரம் இருந்து, நான் தரும் 'நூறு பொன்' பரிசினை பெற்றுச் செல்லுங்கள்", எனச் சொன்னான்.

மற்ற அலுவல் இருந்ததால் அப்புலவனுக்கு பரிசு தருவது தாமதமானது....
தன்னை அரசவையில் மறந்து விட்டார்கள் என நினைத்து அப்புலவன் மன்னரிடம்...

புலவர் : மன்னா...!! இருநூறு தருவதாகச் சொன்னீர்களே..?!!. அது இன்னும் வரவில்லை..

அரசன் : இருநூறா..? எப்பொழுது சொன்னேன் ?

புலவர் : முன்னூறு தருவதாகச் சொன்னீர்களே..

அரசன் : முன்னூறா... யார் சொன்னது ?

புலவர் : நானூறு தருகிறேன் என்றீர்கள்.

அரசன் : நான் எவ்வளவு பொன் தருவதாகச் சொன்னேன்,  சற்று விளக்கமாகச் சொல்கிறீர்களா ?

புலவர் : நீங்கள் 'நூறு' பொன் தருவதாகச் சொன்னீர்கள்.

அரசன் : அப்புறம் ஏன் இருநூறு, முந்நூறு, நானூறு என்றெல்லாம் சொன்னீர்கள், புலவரே ?

புலவர் : அரசே, நீங்கள் 'எப்படி சொன்னேன்?' என்பதற்கு 'இரு(ந்தால்) நூறு  தருவதாகவும்',  'எப்போது சொன்னேன்?' என்பதற்கு 'முன்பு -- முன்-நூறு' என்றும்  'யார் சொன்னார்' என்பதற்கு, 'நா(ன்)னூறு, தருவதாகவும் சொன்னீர்கள்', என்றேன்.

அதனை கேட்டு மகிழ்ந்து போய் அரசன், அனைத்தையும் சேர்த்து ஆயிரம் பொன்  கொடுத்தான் அப்புலவனுக்கு.(அமாம் அரசன் கணக்குல ஸ்ட்ராங்கு..)

------------------------------------------------------
எனக்கு பிடித்த  நூறுகள் ( ஹன்ரட்ஸ் )
  • மோகனின் படம் - நூறாவது  நாள்
  • பூஜைப் பொருள் -  துன்-நூறு
  • நன்பேண்டா  -  நூர்-முகமது. 
  • கார்கறி - நூர்-கோல் 
 நூறின் வடிவங்கள்:
  • தமிழ்  --
  • ரோமன் -  C
  • இரண்டடிமானம் (பைனரி) -  1100100 
  • எட்டடிமானம் (ஆக்டால்) - 144  
  • பதினாரடிமானம் (ஹெக்சா டெசிமல் ) -- 64
"என்னது, நூறப் பத்தியே சொல்லுறே ?", அப்படி நீங்கள் நினைத்தால்.... அதான இந்த பதிவோட ஸ்பெஷல்.

 டிஸ்கி : "இதெல்லாம் எனக்குக்தான் ஏற்கனவே தெரியுமே..  இதப் போயி ஒரு பதிவா, அதுவும் நூறாவது பதிவா போட்டுட்டீங்களே / போட்டுட்டியே?" , அப்படின்னா .....
  1. நீங்க பதிவரா இருந்தா.. இதப் பத்தி நீங்க ஏன் ஒங்க நூறாவது பதிவுல எழுதல  ?
  2. பதிவர்தான், நூறாவது பதிவா இதத்தான் எழுத நெனைச்சேன் அப்படீன்னா, ஐ ஆம் வெரி சாரி.. 'பர்ஸ்டு கம் பர்ஸ்டு செர்வ்', ஒக்கே ..?
  3. பதிவர் இல்லேன்னா  --- ஒங்களலாம் நெனைச்சா, ரொம்பப் பாவமா இருக்கு..( வெரி பிடி ஆன் யு )
டிஸ்கி- 2 :வள வளன்னு நான் எழுதிய கதையை, சுருக்கமாகவும் ஸ்மார்ட்டாகவும் மாற்றியமைத்து உதவிய 'வெங்கட்' அவர்களுக்கு நன்றி.

63 Comments (கருத்துரைகள்)
:

ஜெயந்த் கிருஷ்ணா said... [Reply]

naan thaan second

எஸ்.கே said... [Reply]

நூறாவது பதிவுக்கு 100 வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

நீங்க சதம் போட்டதுக்கு சாதம் போட்டாலாவது ஓசி சாப்பாடு சாப்டிருக்கலாம். Anyway , வாழ்த்துக்கள்.

செல்வா said... [Reply]

வட போச்சே ., சரி வந்ததுக்கு ஓட்டுப் போட்டுப் போறேன் .. திங்கள் வந்து படிக்கிறேன் ..!!

செல்வா said... [Reply]

நூறுக்கு வாழ்த்துக்கள் அண்ணா .!

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply] 1 me the first ///

தங்களுடைய கமென்ட்டைப் படித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்!

ஜெயந்த் கிருஷ்ணா said... [Reply]

நூறு போட்டா பத்தாது.. எங்கே ட்ரீட்..

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

100 போட்டதுக்கு ஏதாவது கெடைகுமா? சரி சரி மொதல்ல நான் வாழ்த்து சொல்லிக்கிறேன். வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

////நூறின் வடிவங்கள்:

தமிழ் -- m
ரோமன் - C
இரண்டடிமானம் (பைனரி) - 1100100
எட்டடிமானம் (ஆக்டால்) - 144
பதினாரடிமானம் (ஹெக்சா டெசிமல் ) -- 64////

யோவ் உண்மையச் சொல்லு, நீய்யி ஒன்பதாப்புக்கு கணக்கு சொல்லித்தார வாத்திதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

கடை ஓனர அதுக்குல்ல காணோம், எங்கே 100 மில்லி அடிக்கப் போயிட்டாரா?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

அட.. அது ஷாலினியோட டாயலாக்காச்சே !

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெறும்பய

இதென்னது.. புதுசா இருக்கு .?

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி - எஸ்.கே, ரமேஷ், வெறும்பய, செல்வா, ராமசாமி

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply] 1 me the first ///

தங்களுடைய கமென்ட்டைப் படித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்//

ராம்ஸ் -- உங்களோட ஸ்டைலே தனி..

சௌந்தர் said... [Reply]

100 க்கு வாழ்த்துக்கள்.....

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ ரமேஷ், வெறும்பய -- ட்ரீட் தான.. அடுத்த சந்திப்புல வெச்சிட்டாப் போகுது..

சௌந்தர் said... [Reply]

நான் தான் 17 வது இப்படியே 100 கமெண்ட் போடுவோம் மக்கா

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

///நூறின் வடிவங்கள்:

தமிழ் -- m
ரோமன் - C
இரண்டடிமானம் (பைனரி) - 1100100
எட்டடிமானம் (ஆக்டால்) - 144
பதினாரடிமானம் (ஹெக்சா டெசிமல் ) -- 64////

யோவ் உண்மையச் சொல்லு, நீய்யி ஒன்பதாப்புக்கு கணக்கு சொல்லித்தார வாத்திதானே?//

அதான் சொல்லிட்டேனே.. நீ கண்டுபுடிக்குற ஸ்டைலே தனி....


&&&&&&&&&&&&
//கடை ஓனர அதுக்குல்ல காணோம், எங்கே 100 மில்லி அடிக்கப் போயிட்டாரா?//

நூறு போஸ்டு போட்டதுனால கோவிலுக்கு போயிட்டு வந்தேன்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@சௌந்தர்

நன்றி சௌந்தர்.. சொன்ன மாதிரியே செஞ்சிடுவோம்..

Prasanna Ramasamy said... [Reply]

சச்சின் போல் நீங்கள் நூறு, நூறு போட வாழ்த்துக்கள்!!!!!!!!!!

இம்சைஅரசன் பாபு.. said... [Reply]

whishes for 100 posts

வெங்கட் said... [Reply]

@ மாதவன்.,

// அட.. அது ஷாலினியோட டாயலாக்காச்சே ! //

Copyright Reserved Dialogue..

இந்த ரமேஷுக்கு யாரையாவது பாத்து
காப்பி அடிக்கிறதே வேலையா போச்சு..!!

// டிஸ்கி- 2 :வள வளன்னு நான் எழுதிய கதையை,
சுருக்கமாகவும் ஸ்மார்ட்டாகவும் மாற்றியமைத்து
உதவிய 'வெங்கட்' அவர்களுக்கு நன்றி. //

இதெல்லாம் எனக்கு பிடிக்காது..
( இப்படி சுருக்கமா பாராட்டுறது எல்லாம் )

100-க்கு வாழ்த்துக்கள்..
டிஸ்கி சூப்பர்..!!

NaSo said... [Reply]

தங்களுடைய பதிவைப் படித்ததும் கண்கள் பனித்தது. இதயம் இனித்தது. உங்கள் நூறாவது பதிவு மிகவும் அருமை. (இவ்வளவு புகழ்ந்திருக்கேன். பார்த்து செய்யுங்க)..

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

RVS said... [Reply]

சதத்திற்கு வாழ்த்துக்கள். சஹஸ்ரத்திர்க்கு இன்னும் பலமான பதிவு இட இப்போதே வாழ்த்து சொல்லிக்கறேன். ;-) ;-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Prasanna Ramasamy

வாழ்த்துக்களுக்கு நன்றி..
நூரடிக்கவே கண்ணக்கட்டுது.. நூறு நூறா ? அடி ஆத்தி..!!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@இம்சைஅரசன் பாபு..

Thanks, my dear imsai.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட்

100-க்கு வாழ்த்துக்கள்..
டிஸ்கி சூப்பர்..!!

Thanks..எல்லாம் ஒங்கள மாதிரி அளுக்கிட்டேருந்து கத்துகிட்டதுதான்..


//( இப்படி சுருக்கமா பாராட்டுறது எல்லாம் ) //

பெரிய பதிவா போட்டுடலாம்..(வேணும்னா தொடர் பதிவு..) .

//இந்த ரமேஷுக்கு யாரையாவது பாத்து
காப்பி அடிக்கிறதே வேலையா போச்சு..!!//

யோவ் ரமேசு.. நீங்க என்ன பழங்காலத்து ஆளா?
'காபி'லாம் அடிச்சுக் கிட்டு.. கொஞ்சம் மாடர்னா, 'ஹார்லிக்ஸ்', 'போர்ன்விட்டா', 'மால்டோவா' அப்படீன்னு அடிங்க போலீசு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@நாகராஜசோழன் MA

//தங்களுடைய பதிவைப் படித்ததும் கண்கள் பனித்தது. இதயம் இனித்தது. உங்கள் நூறாவது பதிவு மிகவும் அருமை.

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!! //

மனமார்ந்த நன்றி..

//(இவ்வளவு புகழ்ந்திருக்கேன். பார்த்து செய்யுங்க)..//

மெதுவா.. மெதுவா..பப்ளிக்.. பப்ளிக்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@RVS

//சதத்திற்கு வாழ்த்துக்கள். சஹஸ்ரத்திர்க்கு இன்னும் பலமான பதிவு இட இப்போதே வாழ்த்து சொல்லிக்கறேன். ;-) ;-) //

நன்றி நண்பரே.. ஒங்க வேகத்துக்கு, எழுத்து நடைக்கு வர முடியலைன்னாலும்.. ஏதோ, என்னால முடிஞ்ச கலைச் சேவை..

ranga said... [Reply]

இது ரஜினி எழுதி இருந்தா 10000 ப்ளாக் ...
நீங்க எழுதிவதால 100 ப்ளாக் ..
நான் எழுதி இருந்தா.......இல்ல ...100 நெனச்சி பாக்க முடியல...
இப்பவே கண்ண கட்டுதே !
கலக்றீங்க !! ஆல் தி பேஸ்ட் !!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ranga

வாழ்த்துக்கு நன்றிகள்..

சமீபத்துலதான் ரஜினியோட படத்தப் பத்தி எழுதினேன்... அதுக்காக கொஞ்சம் போட்டு கொடுங்களேன்..
அதான்.. நா 100 பதிவு போட்டா 500 பதிவு போட்டாமாதிரி.. (அதான் ஒரு 5 % டாவது அவரு ஸ்டைலுல..)

//நான் எழுதி இருந்தா.......இல்ல ...100 நெனச்சி பாக்க முடியல...
இப்பவே கண்ண கட்டுதே !//

நீங்கலாம் நல்லவரு.. வல்லவரு.. என்ன மாதிரி பிளாக் எழுதி.. டயத்த வேஸ்ட் செய்ய மாட்டீங்க..

அனு said... [Reply]

அட.. நூறு போட்டாச்சா? மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

ட்ரீட் குடுக்கும் போது என்னையும் சேர்த்துக்கோங்கப்பா..
----------------------------------------
//வள வளன்னு நான் எழுதிய கதையை, சுருக்கமாகவும் ஸ்மார்ட்டாகவும் மாற்றியமைத்து உதவிய 'வெங்கட்' அவர்களுக்கு நன்றி//

கதையை சுருக்க உதவியதால், இன்றிலிருந்து அவர் 'சுருக்' வெங்கட் என்று அழைக்கப் படுவராக...

ப்ரியமுடன் வசந்த் said... [Reply]

வாழ்த்துகள் மாதவன் சார்

http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TOgRICueiEI/AAAAAAAAEd4/l3q0aRrdvPk/s1600/madhavan.JPG

ஆதி மனிதன் said... [Reply]

//இரண்டடிமானம் (பைனரி) - 1100100//

ஆமா நூறுக்கு பைனரி 100 தானே? அதெப்படி 1100100 ?

Philosophy Prabhakaran said... [Reply]

நோராவது பதிவிற்கு வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said... [Reply]

சதத்திற்கு வாழ்த்துக்கள்...

பெசொவி said... [Reply]

செஞ்சுரிக்கு வாழ்த்துகள்!

கதைய சுருக்கிய வெங்கட்டுக்கு நன்றி சொல்ல தேவையில்லை. ஏன்னா, அவருக்கு விரிவா எழுதி பழக்கமே இல்ல.

கௌதமன் said... [Reply]

வாழ்த்துக்கள் மாதவன். உங்களுடைய ஒவ்வொரு பதிவிலும், ஏதாவது புதிய விஷயம் அல்லது புதிய கோணம் இருக்கும். அது உங்கள் படைப்பாற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்தப் பதிவில், நூறு பற்றி புதிய கோணங்களில் எழுதியிருக்கின்றீர்கள். பதிவுலகில், மென் மேலும் புகழ் பெற எங்கள் வாழ்த்துக்கள்.

Unknown said... [Reply]

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

ஆதி மனிதன் said... [Reply]

//ஆமா நூறுக்கு பைனரி 100 தானே? அதெப்படி 1100100 ? //

தவறுக்கு வருந்துகிறேன். ஏதோ ஞாபகத்தில் தவறாக கேள்வி கேட்டு விட்டேன். நீங்கள் கூறியது சரியே. சதம் சதம் அடிக்க வாழ்த்துக்கள்.

கருடன் said... [Reply]

me the 42nd.... hearty wishes for 100th post....comment udavi lord mount battern...

Madhavan Srinivasagopalan said... [Reply]

@அனு

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அனு.
நீங்கள் கதைப் போட்டியில் 'பாஸ்' ஆனத உங்க 'ஆத்தாக்கிட்ட' சொன்னது என்னோட காதுலயும் விழுதுச்சி.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

நா ட்ரீட் தரச்சே உங்களையும் கண்டிப்பா சேத்துக்கறேன்.. (அப்பத்தான உங்களோட ட்ரீட்டும் எனக்கு கெடைக்கும்..எதுக்கா? கதை போட்டில.. நீங்க 'பாஸ்' ஆனதுக்குத்தான்... அப்புறம் .. அப்புறம்.. VKS ல கூடத்தான். )

'சுருக்' வெங்கட் -- அதாவது 'பன்ச் வெங்கட்' ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ப்ரியமுடன் வசந்த்

பிரியமான வசந்த் அவர்களுக்கு,

எனக்காக நீங்கள் தயாரித்து வழங்கிய 'தலைப்புப் படம்' எனது வலைப் பதிவில் இணைத்துள்ளேன்... தங்கள் ஆதரவுக்கு பிரியமுடன் மிகுந்த நன்றிகள்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஆதி மனிதன்

அதரவுக்கு நன்றிகள், ஆதி.

விளையாட்டாகச் சொன்னா, '100 ' என்ற எண்ணில் '1 ' மற்றும் '0 ' மட்டுமே இருப்பதனால்.. அது 'பைனரி' எண் தான்.. (ஆனால் நான்கிற்கான 'பைனரி')

Madhavan Srinivasagopalan said... [Reply]

@philosophy prabhakaran

நன்றி, பிலாசபி பிரபாகரன், உங்கள் மேலான ஆதரவிற்கும், வாழ்த்துக் களுக்கும்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பெயர் சொல்ல விருப்பமில்லை

//செஞ்சுரிக்கு வாழ்த்துகள்!//

நன்றி.. பெ.சோ.வி. நான் வலைப்பூ ஆரம்பித்ததற்கு நீங்கள் கொடுத்த என்கரஜ்மென்ட் நான் மறக்க மாட்டேன்.

//கதைய சுருக்கிய வெங்கட்டுக்கு நன்றி சொல்ல தேவையில்லை. ஏன்னா, அவருக்கு விரிவா எழுதி பழக்கமே இல்ல.//

அப்ப 'வெங்கட்டிற்கு' வள வள னு எழுனனும்னா, நா ஹெல்ப் பண்ணிடறேன்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@kggouthaman

படைப்பாற்றல் என்பதனை பறைசாற்றும் 'எங்கள்' பிளாக்கின் ஆசிரியர்களுள் ஒருவரான மரியாதைக்குரிய திரு கௌதமன் அவர்களால் பாராட்டும் வாழ்த்தும் கிடைப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நன்றி.. மிகுந்த நன்றிகள், சார்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

நான் வலைப்பூ ஆரம்பித்து ஒரு சில பதிவுகள் எழுதியதிலிருந்து உங்கள் ஆதரவும், வாழ்த்துக்களும் எனக்கு கிடைக்காமல் இருந்ததில்லை. தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றிகள், ஸ்ரீராம்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கலாநேசன்

சமீப காலமாக உங்கள் ஆதரவும் எனக்கு கிடைக்கப் பெற்று வருகிறேன், கலாநேசன் சார். வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

போளூர் தயாநிதி said... [Reply]

vazhththugal nanbare
polurdhayanithi

Madhavan Srinivasagopalan said... [Reply]

@TERROR-PANDIYAN(VAS)

அட ஒங்க 'கும்மி'ல சேர்ந்த பின்னரே, எனக்கு மேலும் பல ஃ பாலோயர்ஸ் கிடைக்கப் பெற்றேன்.. நன்றி, டெர்ரர்.

அதென்ன 'லார்டு மவுண்ட்பேட்டன்' ? புரியல..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@polurdhayanithi

நன்றி நண்பரே.
உங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன்.. உங்களை நானும் பின்தொடர்கிறேன்.

CS. Mohan Kumar said... [Reply]

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மோகன் குமார்

நன்றி- மோகன்.. உங்களது ஊக்கமும், ஆதரவும் எனக்கு தெம்பூட்டியது.. வாழ்த்துக்களுக்கு நன்றி..

அனு said... [Reply]

//உங்களுக்கும் வாழ்த்துக்கள்..//
ஹிஹி.. தேங்க்ஸ்.. (கைப்புள்ள, இப்படியே மெயின்ட்டெய்ன் பண்ணு!! ஸ்ஸ்ஸ் யப்பா, என்னா அடி..)

//உங்களோட ட்ரீட்டும் எனக்கு கெடைக்கும்//
ஆஹா.. வலிய போய் நானே மாட்டிகிட்டேனோ? மீ த எஸ்கேப்..

//அதாவது 'பன்ச் வெங்கட்' //
வேணும்னா 'பன்ச்' வாங்குற வெங்கட்-ன்னு சொல்லலாம்..

புவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]

சதத்துக்கு வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@புவனேஸ்வரி ராமநாதன்

மிகுந்த நன்றிகள் , மேடம்.

செல்வா said... [Reply]

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா ..!! உங்க கதையும் சூப்பர் ..

செல்வா said... [Reply]

ஐயோ இப்படி கூடவா டிசுக்கி போடுறீங்க ..?!

THOPPITHOPPI said... [Reply]

ஐயோ இப்படி கூடவா டிசுக்கி போடுறீங்க ..?!

ஹிஹிஹி

Gayathri said... [Reply]

ada bro mannichudunga nan comment potathathaan nenachen mannichudunga..

congrats

and here is my spl gift

http://www.goodlightscraps.com/content/congrats/congrats_2.gif

cheena (சீனா) said... [Reply]

ஏய்யா கும்மி குரூப்பு - நூறவது இடுகைக்கு நூற் மறுமொழி போட வேணாமா - போங்கய்யா

குறையொன்றுமில்லை. said... [Reply]

100- வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...