இமெயில் --- ஜிமெயில்

எனது 'சுய புராணம்'(என்னைப் பற்றி), நீங்கள் படித்திருந்தால், உங்களுக்குத் தெரிந்திருக்கும், நான் ஒரு ஆராய்ச்சியாளனென்று. அப்படி என்னதான் ஆராய்ச்சி செய்தேனா? என்ன கண்டு பிடித்தேனா ?

எனக்குத் தேவையில்லாத மின்னஞ்சல் ஒன்று வந்தது..  டு அட்ரஸ்ஸ பாத்தா.. என்னோட மின்னஞ்சல் முகவரியில எக்ஸ்ட்ராவா ஒரு புள்ளியுடன் (.) இருந்ததால் எனது ஜிமெயில் முகவரிக்கு வந்து விட்டது.

எனக்கு ஆச்சரியம்.. ஆரம்பித்தது எனது ஆராய்ச்சி..


zyxvutsrq@gmail.com   என்று ஒருவரது முகவரி, ஜிமெயில் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
  1. .zyxvutsrq@gmail.com 
  2. z.yxvutsrq@gmail.com 
  3. zy.xvutsrq@gmail.com  
  4. zyx.vutsrq@gmail.com 
  5. zyxv.utsrq@gmail.com  
  6. zyxvu.tsrq@gmail.com 
  7. zyxvut.srq@gmail.com  
  8. zyxvuts.rq@gmail.com 
  9. zyxvutsr.q@gmail.com  
  10. zyxvutsrq.@gmail.com

 மேற்கண்டவாறு புள்ளியை (.) எங்கு சேர்த்தாலும், அவையெல்லாம் ஒரே ஜிமெயில் முகவரியைத் தான் போய்சேரும் (zyxvutsrq@gmail.com)

எனது ஆராய்ச்சி இத்துடன்  முடிவடையவில்லை.
அதே ஜிமெயிலுக்கு பதிலாக யாஹூவாக இருந்தால் ஒவ்வொன்றும் வெவ்வேறு முகவரிகளை குறிக்கும்.

எப்படி என்னோட ஆராய்ச்சி ?

ஹி.. ஹி...  இந்த மாதிரி ஜிமெயில் முகவரி இருந்தா எப்படி ?
.......................@ஜிமெயில்.com

14 Comments (கருத்துரைகள்)
:

middleclassmadhavi said... [Reply]

gmail-googleக்கு உங்கள் ஆராய்ச்சி ரொம்ப உபயோகமா இருக்கும்... ராயல்டி எல்லாம் வாங்கிக்கலாம்...
:-))

A.R.ராஜகோபாலன் said... [Reply]

இது மாதிரியான ஆராய்ச்சிகள் மன்னையின் மைந்தன் மாதவனுக்கு மட்டுமே சாத்தியம் , நல்ல உபயோகமான பகிர்வு

Chitra said... [Reply]

ஹி.. ஹி... இந்த மாதிரி ஜிமெயில் முகவரி இருந்தா எப்படி ?


....... இல்லை என்றாலும், நீங்களே உங்களுக்கு வைத்துக் கொண்டு, ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டும் அந்த காண்டக்ட் ஐடி என்று வைத்து விடுங்கள். :-))))))

வினோ said... [Reply]

நல்ல பதிவு மாதவன்... உள்ளே வந்து படித்த பின் தான் தெரிந்தது....

வெங்கட் நாகராஜ் said... [Reply]

அட இப்படியெல்லாம் கூட ஆராய்ச்சி செய்வீங்களா மாதவன்… ஒரு எழுத்து விடுபட்டாலோ, கூடினாலோ வேறு யாருக்காவது போய் விடுகிறது! ஆனால் ஒரு டாட் கூடினால் அங்கேயே வந்து விடுகிறதா!! நல்ல ஆராய்ச்சி..

வெங்கட் said... [Reply]

நல்ல ஆராய்ச்சி..!

இந்த வருசம் நோபல் பரிசுக்கு
உங்களை பரிந்துரைக்கிறேன்..!

வெங்கட் said... [Reply]

// இமெயில் - ஜிமெயில் //

அது இமெயிலா..? ஈமெயிலா..?

அதே மாதிரி

அது ஜிமெயிலா..? ஜீமெயிலா..?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட்

1) நன்றி, நோபெல் பரிசு பரிந்துரைக்கு..

ஆனா, பளார்னு கன்னத்துல ஒண்ணு கொடுத்தா கெடைக்குமே 'நோ பல்' பரிசு.. அதுக்கு ரேகமேண்டேஷனோ ?

2) ஈ, கொசுன்னு சொல்லி ஏதாவது தப்பா புரிஞ்சிக்கிட்டு புளுகிராஸ் ஆளுங்க கேஸ் போட்டுட்டா.. அதான் 'இமெயில்'னு சொல்லிட்டேன்.. எதுக்கு வம்பு.

Madhavan Srinivasagopalan said... [Reply]

தனியா வீட்டுல, வேலை வெட்டி இல்லாம போர் அடிச்சப்ப இந்த மாதிரி ஆராய்ச்சிதான் பொழுது போக்கு..

நன்றி,
மாதவி,
ஏ.ஆர்.ஆர்,
சித்ரா,
வினோ,
வெங்கட் நாகராஜ்

இராஜராஜேஸ்வரி said... [Reply]

படிங்க.. அப்பால வெளங்கிடும் ------//
............. நல்ல ஆராய்ச்சி. பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said... [Reply]

ஆராய்ச்சியை விட 'நோ பல்' பரிசு பதில் இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது...

ப.கந்தசாமி said... [Reply]

என்னுடைய வாழ்நாளில் இந்த மாதிரி ஆராய்ச்சியைக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. பாராட்டுகள்.

போளூர் தயாநிதி said... [Reply]

அட இப்படியெல்லாம் கூட ஆராய்ச்சி செய்வீங்களா மாதவன்… ஒரு எழுத்து விடுபட்டாலோ, கூடினாலோ வேறு யாருக்காவது போய் விடுகிறது! ஆனால் ஒரு டாட் கூடினால் அங்கேயே வந்து விடுகிறதா!! நல்ல ஆராய்ச்சி.. நல்ல பதிவு மாதவன்

RVS said... [Reply]

யாராவது இதுக்கு டாக்குடர் பட்டம் கொடுத்தாங்களா? ;-)))

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...