தலைகீழ்

ஃபைட்டர் ஏர்-க்ராஃப்ட் சுத்தி பறக்கும்.. ரவுண்ட் அடிக்கும் (ரெண்டும் சேம்?).. சில சமயம் அது போகுற ஸ்பீபீபீபீபீடுல தலைகீழாவும் பறக்கும். அப்படி ஸ்பீபீபீபீபீடா பறக்குறப்ப, நேர பறக்குதா இல்லை தலைகீழப் பறக்குதா அப்படீன்னு அத ஓட்டுற பைலட்டுக்கே சந்தேகம் வந்திடுமாம். அப்ப அவங்க ராடார் கண்ட்ரோல் ரூமுக்கு காண்டாக்ட் பண்ணி கேட்பாங்களாம். கண்ட்ரோல் ரூமுலேருந்து 'ஏர்-க்ராஃப்ட்' தெரியாது. எப்படி சரியா பதில் சொல்ல முடியும் ? யோசிங்க.. யோசிங்க. விடை கடைசில சொல்லி இருக்கேன்.

உங்களுக்கு 'a b c d ....' தலைகீழ அதாவது ரிவர்ஸ்ல வேகமா சொல்லத் தெரியுமா ? டைப் ரைட்டிங் கிளாசுக்கு போனவங்களுக்கு பெரும்பாலும் தெரிஞ்சிருக்கும். எனக்கும் சொல்லத் தெரியும்.... ம்ம்ம்ம். நம்பமாட்டீங்களா ? இதோ, இந்த ஆடியோ க்ளிப்பிங்க கேளுங்க.. (கீழே இருக்கும் முக்கோண / play / replay பட்டன க்ளிக் பண்ணுங்க )


எனது குரலில் zyxwvu .....
 
என்னோட பிரண்டு ஒருத்தன்... நா, தலைகீழ சொல்லுறதக் கேட்டு, 'இதென்ன பிரமாதம் நானும்தான் தலைகீழ 'a b c d ..' சொல்லுவேன் அப்படீன்னான். எனக்கு ஆச்சர்யம். அவன்தான் டைப்ரைடிங் கிளாஸ்லாம் போகலியே, எப்படி சொல்லுவான்னு கேட்டுப் பாத்தேன். சிரசாசனம் செய்தபடியே (தலைகீழ நின்னுக்கிட்டு, 'a b c d .'னு ஆரம்பிச்சு 'z' வரைக்கும் சொல்லி  ஏமாத்திட்டான்.

"இதெல்லாம் போங்கு ஆட்டம். நீ சிரசாசனம் பண்ணாம சொல்லனும்" னு சொன்னதுக்கு, அவன் என்னை தலைகீழ நிக்கச் சொன்னான்..

என்ன செய்யப் போறான்னு புரியாம நா தலை கீழ நின்னப்ப, அவன் மறுபடியும் 'a b c d .. 'னு  ஆரம்பிச்சிட்டான்..

என்னடான்னு கேட்டா, 'இப்ப உன்னைப் பொறுத்த வரை நான் தலைகீழ இருக்கேன். 'a b c d .. ',  இப்ப சொன்னா, 'தலை கீழ',  'a b c d ....' சொன்ன மாதிரிதான..  அப்படீங்கறான்.

இதுக்குத்தான் 'ஐன்ஸ்டானோட  ரிலேடிவிடி தியரி' ரொம்ப படிக்கக் கூடாது.. சரிதான ? 

சரி.. சரி. மொதல்ல கேட்ட கேள்விக்கு பதில் (தகவல்) :

கண்ட்ரோல் ரூம்லேருந்து, பிளேன 'லெஃப்ட்'ல திரும்பச் சொல்லிட்டு மானிட்டர்ல ப்ளேன் (புள்ளியாத்தான் தெரியும்) 'லெஃப்ட்'ல திரும்பினா, ப்ளேன்  நேர பறக்குது.. ஆனா 'ரைட்' சைடுல திரும்பினா, தலைகீழ பறக்குதுன்னு சொல்லுவாங்களாம். இந்த தகவலை 'ஏர்-ஃபோர்ஸ் ராடார் கண்ட்ரோல்' யூனிட்ல வேலை செஞ்ச நண்பர் ஒருத்தர் எனக்குச் சொன்னார்.

டிஸ்கி : நன்றி நவிலல்
 * mp3 எம்பெட் செய்ய டிப்ஸ் கொடுத்த நண்பர் எஸ்.கே விற்கு...
 * mp3 ஸ்டோரேஜ் கொடுத்துதவும் முஜிபோ வலைதளத்திற்கும்...
 *  ஏர்-ஃபோர்ஸ் நண்பருக்கும்..
================================

ரசித்த ஜோக்குகள் - 25 -06 -2011

ஐம்பத்தி இரண்டு வயதான பெண் ஒருவர் மருத்துவரால் குணப் படுத்த முடியாத வியாதியினால் மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டார். அவரது கண்ணிற்கு இறைவன் புலப்பட.. அவரிடம் கேட்டார்,
"எனது இந்தப் பிறவி முடியும் தருவாயிற்கு வந்து விட்டதா ?"
"இல்லை இல்லை.. இன்னும் நாற்பத்தாறு ஆண்டுகள், அறுபத்தி மூன்று நாட்கள் மற்றும் எட்டு மணி நேரம் பாக்கி இருக்கிறது".
 
இதனைக் கேட்ட அப்பெண்மணி, உடல் நிலை சற்று சரியானதும் தனது முகத்தில் விழுந்த சுருக்கங்களை நீக்கும் விதமாக முகத்தினை பிளாஸ்டிக் சர்ஜரியும், நரை முடியினை 'டை' செய்தும், பிரெஸ்ட் இம்ப்லான்ட்டும் இன்னும் பல விதமான காஸ்மெடிக் சர்ஜரியும் செய்து கொண்டு தன்னை ஒரு 20 வயது யுவதியாகவே மாற்றிக் கொண்டார். எப்பவுமே மாடர்ன் ட்ரெஸ்தான்....
ஆனாலும் விதி, சதி செய்து விட்டது.. ஆம்.. இரு மாதத்தில், 'ஷாப்பிங்'(!) சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் சாலையைக் கடக்கும் பொது, கட்டுப்பாடு இழந்து வந்த ஒரு கணரக வாகனத்தால்  தூக்கி எறியப்பட்டு இறந்து விட்டார். இதனை சற்றும் எதிர்பாராத, அப்பெண்மணி இறைவனிடம் நியாயம் கேட்கச் சென்றார். அதற்கு இறைவன் சொன்ன பதில்.........

"அடாடா.. அப்போது உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை"

--------------------------------------------------------------------------------
ஆசையே அலைபோலே..  :
கணவன் : வர 'வெட்டிங்-டே'க்கு, ஒனக்கு என்ன கிஃப்ட்  வேணும் ?
மனைவி : ( மனசில புதிய காரை நினைத்துக் கொண்டு ) ம்ம்.. நா ஏறி மிதிச்ச சில செகண்டுக்குள்ள ஜீரோலேருந்து அறுபதுக்கு போகணும்.. அவ்ளோ ஸ்பீடா...
கணவன் : ம்ம்ம் ஓகே.. புரியுது.. புரியுது..
மறுநாள் வீடு திரும்பிய கணவன் மேஜை மீதி வைத்த காம்பாக்ட் சைஸ் கிஃப்ட் பாக்ஸை  கண்டதும் மனைவி மனசுக்குள்.. "அட.. சின்னதா டாய் கார் வாங்கிட்டு வந்துட்டாரா ?" என நினைத்துக் கொண்டே, அவரிடம் ,"என்னது விளையாட்டு பொம்மையா ?"
கணவன் : இல்லை.. நிஜம்..
மனைவி, மனதினுள்  அது காரின் சாவியாக இருக்கலாம் என கற்பனை செய்து கொண்டு மேஜை மீதிருந்த பாக்ஸ்ஸினை பிரிக்க ஆரம்பித்தாள்........

பாக்ஸினுள் இருந்தது.....
----------------
-------------
-------- இன்னும் கீழ இருக்கு பாருங்க..
------------------------
------
---------
------  
------------------------
------இன்னும் கொஞ்சம் கீழ........
---------
------------------------
------
---------
------------------------
------
--------- இதோ.. இதுதான்.. பாருங்க..
வெயிங்  மெஷின் -- 0 to 60 in seconds  
டிஸ்கி : நன்றி - மூலம் ஆங்கிலம்.. தமிழாக்கம் -- நானே
                   சரியான ஞாபகம் இல்லாததால் சுட்டி கொடுக்க முடியவில்லை .. 
படங்கள் உதவி : கூகிள் இமேஜெஸ்.. 
===========================================

சீனியர் ஆயிட்டோமே !

அப்பாடா.. ஒரு வழியா பர்ஸ்ட் இயர் முடிஞ்சுது.. 
போன வருஷ ஆரம்பத்தில.. என்னமா சீனியர்லாம் எங்கள 'லுக்கு' உட்டாங்க..  சொல்லி மாளாது..

காம்பஸ்  முழுசா எல்லாமே புதுசா இருந்திச்சு.. யாரப் பாத்தாலும் பயந்து பயந்து மரியாதையா நடந்துக்கணும்..

நல்ல வேலை.. எங்க காம்பஸ்ல  'ராகிங்' கலாச்சாரம்லாம் இல்லை..

அது மட்டும் இருந்திருந்தா.. ம்ம்ம்.. இப்ப நெனைச்சாலும் பயங்கரமா இருக்கு !
 
வராண்டா பக்கம் தெரியாமப் போனாக் கூட திட்டு. அடி மட்டும்தான் வாங்கலை. அழுகை அழுகையாவரும். அழுதாலும் எங்கள, எங்க போக்குல விட மாட்டங்களே..  அவ்ளோ கண்டிப்பு....

மொதோ மூணு மாசம் எங்கள்ல யாராவது படிக்க ஆரம்பிச்சாங்க..? இல்லையே.. எப்படி முடியும்.. அழுகை, துக்கம், பயம்,... வேற என்னத்த அனுபவிச்சோம். அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமா என்ன செய்யணும் புரிய ஆரம்பிச்சுது. 

இப்ப அடுத்த வருஷம் ஆரம்பம். இப்ப பயம், கவலை, அழுகை எதுவுமே இல்லை.. எப்படி நடந்துக்கணும்னு ஒரு வழியா ஐடியா கெடைச்சிடிச்சே. போன வருஷ அனுபவம்தான்..

இப்ப.. நாங்களும் சீனியர் தான்..... இல்லை இல்லை,
"நாங்க மட்டும்தாம் சீனியர்.....
எங்களுக்கு உண்டு ஜூனியர்.. "

போன வருஷ  'சீனியர்' இப்ப நோ மோர் 'சீனியர்'.. அவங்களாம் இப்போ ஏதோ  ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்டாம்....................

"நானு  யாரா ?", இந்த வருஷ சீனியர் கே.ஜி  கிளாஸ்ல  நானும் ஒரு ஸ்டூடன்ட் சார். 

டிஸ்கி : பொண்ணு ஜூனியர் கே.ஜி லேருந்து சீனியர் கே.ஜி போயிருக்கா.. அவ சார்பா, நா திங்க் (?) பண்ணி எழுதினது இது. 
================================

பழமொழி - (1) [ தமாசு ]

பழமொழி - தமிழ்
ப்ராவர்ப் - ஆங்கிலம்
கஹாவத் - ஹிந்தி    
இது பெரும்பாலும் எல்லா மொழிகளிலுமே இருக்குறதா தெரியுது..
எனக்குத் தெரிந்த தமிழ் - சில பழமொழிகளை  ( சொல்லும் வழக்கு) வைத்து கீழ்வருவன அமைந்துள்ளது.. ஒவ்வொன்றிலும் இரு பழமொழிகள் புதைந்துள்ளது.. முடிந்தால் கண்டுபிடியுங்கள்..
  1. சுத்தமா இருக்குற ஆள், பொய் சொன்னா அவருக்கு பாதிப்பு வருமா ?  வராது.. எப்படி ?
  2. மறக்குறதா.. இல்லை தொடர்ந்து முயற்சி செய்யுறதா ஒரே குழப்பமா இருக்கு இப்படி சொல்லிட்டாங்களே !!
  3. இருக்குற பணத்துல ஏதாவது ஒரு வேலைய செய்ய ட்ரை பண்ணலாம்.. இப்படி சொல்லிப்  புட்டாங்களே..  ரெண்டையும் ஒரே நேரத்துல செய்ய முடியுமா...?
  4. அட இப்படியில்ல சொல்லணும்.. இதைத்தான் எல்லாரும் செய்ய  விரும்புவாங்க.... 'சாப்பிட ரெடி'... 
சரி.. சமீபத்துல நான் ரசிச்ச ஒரு பட ஜோக்கு... இதோ


  
இப்ப மேல கேட்கப்பட்ட கேள்விகளுக்கு.. 
  1. சுத்தம் சோறுபோடும் --  பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.
    • நீதி :  பொய் சொல்லு.. ஆனா சுத்தமா சொல்லு.. சோறு கிடைச்சுடும்.. :
  2. கிட்டாதாயின் வெட்டென மற -- முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
    • நீதி : ஹி.. ஹி.. இந்த மாதிரிலாம் எழுதினா பிரபலம் ஆக முடியாது.. ஆனா முயற்சி இருந்தா முடியாதா என்ன ?
  3. கல்யாணம் பண்ணிப்பார் -- வீட்டை கட்டிப் பார்.
    • நீதி : கந்து வட்டி அல்லது பாங்க் லோன் .. ம்ம் பாப்போம்.. 
  4. பந்திக்கு முந்து  --- படைக்குப் பிந்து.. 
    • நீதி : சாமி.. சோறு.. சோறு.. ஐ.. நாந்தான் பர்ஸ்டு! ..  --  என்னது எல்லாரும் கெளம்பிட்டாங்களா(சண்டைக்கு)  .. இதோ நானு பின்னாலேயே வாரேன்.. 
==========================================

நான் பார்த்த கிரகணம்-15 ஜூன் 2011

ம்ம்ம்.. அந்த ஃ பீலிங்க்சலாம் எப்படி விவரிப்பேன் ?
நேத்து ராத்திரி சந்திரக் கிரகணம் பாத்து என்ஜாய் பண்ணீங்களா..?
இதோ என்னோட அனுபவம்.. (!)

நேத்து வலைதளத்துல, ராத்திரி நடக்கப்போற சந்திரக் கிரகணம் பத்தி விரிவா படிச்சேன்..  அத ராத்திரி பாக்குறதுக்கு ரொம்வ ஆர்வமா இருந்தேன்.. ஆர்வம் தாங்கல..

இல்லையா பின்னே.. இந்த நூற்றாண்டுல அதிக நேரம், அதிக இருட்டான (longest & darkest) பூரண கிரகணம்.. அதாவது 100 நிமிஷம்.. ம்ம்ம்..  யோசிச்சுப் பாத்தப்பவே பிரமிப்பா இருந்திச்சு..    அதுவும் கலர் கலரா.. இருக்கும்னு படிச்சேன்...

மத்திய சந்திரக் கிரகணம்னு இதுக்கு பேரு. அதாவது.. பூமியின் நிழலோட மத்தியப் பகுதி சந்திரணுல படுமாம்.. அதனால ரொம்ப இருட்டாவும்.. கலராவும் இருக்குமாம்.. இடது எப்பயாவது தான் நடக்குமாம்.. (rare occasion )  (நன்றி : விக்கிப்பீடியா )

இந்த மாதிரி அதிக நேர பூரண கிரகணம் இனிமே 2141 லதான் வருமாம்..  அடேங்கப்பா..!

நேத்து நாதரி பத்து மணிக்கே தூங்கப் போயிட்டேன்.... கொஞ்சமாவது தூங்கினா நல்லா முழிச்சிக் கிட்டு கிரகணத்த பாக்கலாமே அதான்.  மொபைல் போனுல அலாரம் செட் பண்ணியாச்சு கவலை இல்லை.

தனக்கிட்ட பணியை செய்வனச் செய்யும் அலார்ம் சரியா ஓசை எழுப்பி, என்னையும் எழுப்பியது. ஆஹா..  வான வேடிக்கையில ஒரு முக்கியமான ஆட்டம் பாக்குற ஆசையில நான் வீட்ட விட்டு வெளியில வந்தேன்..



வானத்தைப் பாத்தேன்.. சந்திரன் மறைஞ்சு இருந்திச்சி.. அட.. லேட்டா எழுந்திட்டமோ.. பூரண கிரகணம் ஆரம்பிச்சிடிச்சு போல.. சரி.. வெயிட் பண்ணலாம்.. ஆஹா பௌர்ணமியா இருந்தாலும் என்ன இருட்டு. சரியாத்தான் சொல்லி இருக்காங்க 'இருட்டு கிரகணம்'ன்னு.. அரைகுறை தூக்கக் கலக்கத்துல வானத்தையே பாத்திட்டு இருந்தேன்..

வெயிட் பண்ணேன்.. பண்ணேன்.. பூரண கிரகணம் விடவே இல்லை.. 
டவுட் வந்து மூஞ்சில தண்ணி விட்டு அலம்பி தெளிவா பாக்கலானும்னு நெனைச்சேன்.. அட.. என்னாது.... நாம நேனைச்சதுலாம் நடக்குது .. என்னோட மூஞ்சில தண்ணி  கொட்டுது.. அட.. என்னாது வானத்துல.. ரொம்ப பெரிசா, கும்மிருட்டா இருக்குது.. அட.. அட.. அது மேகமா, மழையே ஆரம்பிடிச்சா..?

சந்திர கிரகணம்னா பௌர்ணமி நாளுல சந்திரன் மறைஞ்சு இருக்கும்..
இப்ப  பௌர்ணமிதான்.., சந்திரன் (மேகத்தால) மறைஞ்சு இருக்கு..  அப்ப, நா பாத்ததும், சந்திரக் கிரகணம்தான ..?

படங்களுக்கு  நன்றி
===================================

எனக்குப் புரியலை - உங்களுக்கு ?

அதென்னமோ தெரியலை.. புரியலை.. படிச்சிட்டு நீங்களே ஒரு ஞாயம் சொல்லுங்க..
 
இன்னிக்கு மாலை சுமார் 4:30 - 05:30 வரை (அதுக்கப்புறம் இதுவரை நான் டிரை செய்யவில்லை), ஆறேழு தடவை, ஒரு எஸ்,டி,டி கால் பண்ணினேன், பி.எஸ்.என்.எல், லேன்ட் லயன்லேருந்து. கிடைத்த பதில், "No telephone is working with this number". அதே சமயத்துல, என்னோட செல்போனுலேருந்து போன் செஞ்சா, அந்த நம்பருக்கு டயல் போகுது.  ஏன்.. எப்படி.. எதுக்காக இப்படி ?

சரி... என்ன பிரச்சனைன்னு கஸ்டமர் கேருக்கு போன் போட்டா, அதுல "you are in Q" ன்னு சொல்லுது.. அதுக்கப்புறம் எந்த தகவலும் இல்லை. நாலஞ்சு தடவை இப்படி செஞ்சு பாத்து அலுத்துப் போய் விட்டது. 
------------------------------------------------------------------------------

இந்தியன் ரயில்வே, உலகிலேயே மிகப் பெரியதொரு நிறுவனம். அவர்கள் செய்யும் சேவைகளுக்கு ஒரு 'சல்யூட்'. இருந்தாலும் ஒரு சில தகவல்களுக்கு அர்த்தம் புரிவதில்லை, எனக்கு. உதாரணம், ரயில்வே வெப் சயிட்டுல, பி.என்.ஆர் கொடுத்து ரிசர்வேஷனின் ஸ்டேடஸ் பார்த்தால், ஸ்டேடசுடன் கீழ்கண்ட செய்தியும் இருக்கிறது.
  • "Please Note that in case the Final Charts have not been prepared, the Current Status might upgrade/downgrade at a later stage."
 'Upgrade' -- சரி புரியுது....  அதென்னது 'downgrade' ?
----------------------------------------------------------------------------------
 "அடுத்த வாரம் ஆந்திர சட்டசபை விரிவாக்கம்" -- தினமலர் வலைதள செய்திகளுள் ஒரு தலைப்பு.
டவுட்டு : ஓஹோ.. சட்டசபை வளாகத்தினை(கட்டடத்தினை) விரிவு படுத்துகிறார்களோ ?
ஆனால், படித்தப் பின்னர்தான் தெரிகிறது,  மந்திரி சபை விரிவாக்கமாம். தெளிவாக சொல்ல (எழுத) வேண்டாமா ?
++++++++++++++++++++++++++++++++++++++++