தெப்பத் திருவிழா - நினைவலைகள்

ஊர் ஒன்று கூடி கொண்டாடப் படுவதுதான் திருவிழா..

அவ்வகையில் எங்கள் ஊரில் அமைந்த பெரிய குளத்தில் தெப்பத் திருவிழா மிகவும் பிரசித்தம். பரந்து விரிந்துள்ள ஹரித்ராநதி எனும் குளத்தில் வருடா வருடம் ஆனி மாதம் பவுர்ணமி நன்னாளில் நடந்தேறும் இவ்விழா (Mannargudi Haridhranadhi Theppam), பத்து நாட்கள் கொண்டது. எட்டு நாட்கள் பாம்பு, கருடன், அனுமன், பல்லக்கு, குதிரை போன்ற வாகனத்தில் (பைக், கார், சைக்கிள், லாரி.. இதெல்லாம் நமக்குத்தான்.. ), ஸ்வாமியின் நகர் வலம் நடந்தேறும். ஒன்பதாவது நாளில் தெப்பத்தில் குளம் வலம் வரும் அவனை தரிசிக்கும் நமக்கோ குலம் வளம்.

தெப்பம் ஆடி ஆடி(ஆனி மாதத்தில்) அசைந்து குளத்தில் செல்வது தெப்பத்தினுள் இருந்தாலும், குளக் கரையில் இருந்து பார்த்தாலும் இனிமையாக இருக்கும். தெப்பம் குளத்தினுள் 3 முறை வலம் வரும். ஆனால் 3 முறையும் கரை ஓரமாகவே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக பாதி கரையின் வழியாக ஒருமுறை மட்டுமே செல்லும். மற்ற பாதி வழியாக இரு முறையும்.. மையத்தில் இருக்கும் மண்டபத்தை அடைந்து அதனை ஒட்டி ஒன்றரை முறையும் செல்லும்.. (மூணு -- கணக்கு சரிதான  ?). மேலும் விளக்கம் படத்தில் இருக்கிறது.. பார்க்கவும். 
தெப்பம் பற்றி நினைத்தவுடன், எனது நினைவுகள் இவ்வாறாக செல்கிறது..
தெப்பத்தினுள் இருந்த படியே இரவு முழுவதும் தூங்காமல் வெண்ணில வானையும், இதமான இயற்கை குளிரையும் அனுபவித்த சுகமும் உண்டு. பின்னிரவின் பொது.. அதிக குளிர் ஆரம்பபமாகும். மைய மண்டபத்தில் சுமார் நாற்பது நிமிட ஓய்வும்  கிடைக்கும்.

எனது சிறிய தகப்பனார் வீடு இந்த குளக் கரையின் வடக்குப் பகுதியில் இருப்பதால் அந்நாட்களில், நாங்கள் இவ்விழாவின்போது அவர் இல்லம் சென்று கொண்டாடி மகிழ்வோம். ஹரித்ராநதி நண்பர்கள் குழு ஒரு சமயம் இந்நாளில், பஜ்ஜி வகை கடை போட்டனர். (வருடம் மறந்து விட்டது). நான் சென்றபோது, எனக்கு இலவசமாகத் தந்தனர் உண்பதற்கு.

வேறு ஒரு வருடம் ம்ம்.. 1990 ல்,  தெப்பத் திருவிழாவின்போது உலகக் கோப்பை கால்பந்து இறுதியாட்டம் நடந்தது.. எனது சித்தப்பா வீட்டில் தெப்பத் திருவிழாவிற்குப் போன நான், இரவு இங்கிருந்தே உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நேரடி ஒளிபரப்பு பார்த்ததும் நினைவிற்கு வருகிறது. ஜெர்மனி அணி, அர்ஜென்டினானை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அன்று நடந்த விம்பிள்டன் போட்டிகளிலும் ஜெர்மன் வீரர் பெக்கர் ஆண்கள் பிரிவில் பட்டம் வென்றார் .. அதற்கு முதல் நாள் ஜெர்மனியின் ஸ்டேஃபிஃகிராப் பெண்கள் பிரிவில் பட்டம் வென்றார்.

வேறு ஒரு வருடம் 'மணல் கயிறு' திரைப் படம் -- சாலையின் நடுவில் பெரிய திரை கட்டி, ஓபன் ஏர் சினி-ஷோ, இலவசமாக.. மற்றொரு வருடம் 'தங்கப்பதுமை' படம்... ஒருமுறை நாட்டிய / கிராமிய / கலை நிகழ்ச்சிகள்.. ஒருமுறை திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி.. 

இப்படி வருடா வருடம் வெவ்வேறு விதமாக அமையும். இன்றைய இயந்திர வாழ்வில் வெளியூரில் உழன்று வரும் நான், எனது பிள்ளைகளுக்கு இந்த மாதிரி கொண்டாட்டங்களை நேரில் சென்று காண்பித்து  யாம் பெற்ற மகிழ்வை, அவர்களுக்கு  அளிக்க முடியவில்லையே..! ஆதங்கம்தான் வேறென்ன செய்வது தற்போது ?


இன்று (15 July) ஆனிப் பவுர்ணமி..

படங்கள் உதவி.. கூகிள் தேடல்.
தெப்பப் பாதை படம்..  சில படங்களை வைத்து நான் கணணி உதவியுடன், x -fig மூலம் உருவாக்கியது.
======================== 

28 Comments (கருத்துரைகள்)
:

வெங்கட் நாகராஜ் said... [Reply]

பங்குனி மாதத்தில் எங்கள் ஊரிலும் [நெய்வேலி] தெப்பத் திருவிழா நடக்கும்.... அந்த நினைவுகளைத் தூண்டியது உங்கள் பகிர்வு....

நல்ல விளக்கங்கள் [தெப்பப்பாதை படம் - நல்ல விளக்கம்] அருமை.

RVS said... [Reply]

தெப்பம் பற்றிய அருமையான நினைவுகள்.

தெப்பத்துக்குள் நடக்கும் கச்சேரி பத்தி சொல்லலையே!

ஹும்.. இப்ப பெருமூச்சுதான் விட முடியுது.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட் நாகராஜ்

வித்தியாசமா இருக்கட்டும்னுதான் படம் போட்டு பாதை விளக்கம்.
உங்கள் வருகை & கருத்திற்கு நன்றி, வெங்கட் நாகராஜ்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@RVS

ஆமாம் RVS. .. அந்த மேளக்கச்சேரி ஒலி காதுல இன்னும் ஒலிச்சிகிட்டே இருக்கு.. அதையும் ஒரு வரி எழுதத்தான் மறந்திட்டேன்.

எஸ்.கே said... [Reply]

நல்ல அருமையான நினைவலைகள்!

கௌதமன் said... [Reply]

கட்டுரை சுவையாக இருந்தாலும் எழுத்துப் பிழைகள் கொஞ்சம் பின்னுக்கு இழுக்கின்றன. ... மூன்று முறை வளம் வரும்.... நேரடி ஒலிபரப்பு ....வின்பில்டன் .... 'தகப் பதுமை'

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே

நன்றி எஸ்.கே..

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி சார்.
வலம்/வளம் --- வளமான குளம் என்பதால் அப்படி நிகழ்ந்து விட்டதோ !
மற்ற பிழைகளை சரி செய்து விட்டேன்..
எண்களை - எழுதுவதற்கு பதிலாக எண்ணால் எழுதிவிடாமென நினைக்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

சூப்பரான நினைவலைகள்.... அருமையான எழுத்துநடை, இவ்வளவு நாள் எங்கே வெச்சிருந்தீங்க மாதவன்? இதுபோல் நீங்கள் அதிகம் எழுதனும்..... இது என் வேண்டுகோள்!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

உங்கள் வேண்டுகோளுக்கு நன்றி..
முயற்சி செய்கிறேன், நண்பரே.

ஸ்ரீராம். said... [Reply]

யாதோன் கி பாராத்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

அதே.. அதே..
நினைவுகளின் ஊர்வலம்..

R. Gopi said... [Reply]

மாசி மகத்திற்கு அடுத்த நாள் கும்பகோணத்திலும் தெப்பத் திருவிழா நடக்கும். எங்கே போக முடியுது:-(

அருண் பிரசாத் said... [Reply]

நானும் இது போன்ற திருவிழாக்களை இப்போ மிஸ் செய்கிறேன் மாதவன்.... என் குழந்தைக்கு இதை எல்லாம் கதையாத்தான் சொல்லனும் போல

middleclassmadhavi said... [Reply]

தெப்ப நினைவுகளை அழகாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்..

Yaathoramani.blogspot.com said... [Reply]

அனைவருக்குள்ளும் இருக்கும் அந்த
அழகிய நினைவுகளை உங்கள் பதிவு
நினைவுபடுத்திப் போனது
படங்களும் சொல்லிச் செல்லும் விதமும்
எங்களையும் அங்கிருப்பதுபோல் உணரச் செய்தது
அருமையான பதிவு வாழ்த்துக்கள்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Gopi Ramamoorthy

We are sailing on same Theppam.. :-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@அருண் பிரசாத்

//என் குழந்தைக்கு இதை எல்லாம் கதையாத்தான் சொல்லனும் போல //

அதையாவது செய்யணும்.. சரிதான்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@middleclassmadhavi

நன்றி நடுவர்க்க மாதவியே..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Ramani
//படங்களும் சொல்லிச் செல்லும் விதமும்
எங்களையும் அங்கிருப்பதுபோல் உணரச் செய்தது
அருமையான பதிவு வாழ்த்துக்கள் //

நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்..

rajamelaiyur said... [Reply]

திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான்

rajamelaiyur said... [Reply]

இன்று என் வலையில்

என்ன கன்றாவி இது ?

Anonymous said... [Reply]

தெப்பப்பாதை படம் அருமை...அருமையான நினைவலைகள்....மொத்தத்தில்...அருமையான பதிவு... வாழ்த்துக்கள்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@"என் ராஜபாட்டை"- ராஜா

@Reverie

நன்றி நண்பரே.. மீண்டும் வருக..

A.R.ராஜகோபாலன் said... [Reply]

தெப்பத்தில் குளம் வலம் வரும் அவனை தரிசிக்கும் நமக்கோ குலம் வளம்.
அருமையான சொல்லாடல்
நான் இன்று வரை தவற விடாத நிகழ்வில் இதுவும் ஒன்று
விரைவில் பதிவு வரும்

சாய்ராம் கோபாலன் said... [Reply]

தெப்பம் பற்றிய நினைவுகள் அருமை.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@A.R.ராஜகோபாலன்

ஓஹோ.. தொடர்ந்து தவற விடாமல் இருக்க வாழ்த்துக்கள், நண்பரே.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@சாய்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சாய்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...